பிரதமர் மோடி குறிப்பிட்ட Janata Curfew என்றால் என்ன?

Janata Curfew : அத்தியாவசியத் தேவைகளில் பணிபுரிவோர் தவிர, வேறு எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் கூறியிருக்கிறார்

what is janata curfew pm modi mentioned
what is janata curfew pm modi mentioned

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். அப்போதும், அவர் ‘Janata Curfew’ என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்தார். அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.22) அன்று மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரக் கூடாது என்ற வேண்டுகோள் வைத்துள்ளார்.


Janata Curfew என்றால் என்ன?

பொதுவாக, நாட்டில் ஏதேனும் சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவினாலோ, வன்முறை ஏற்பட்டாலோ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். ஊரடங்கு உத்தரவின் போது, மக்கள் வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இந்நிலையில், பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கும் Janata Curfew என்பது மக்களுக்காக மக்களே விதித்துக் கொள்ளும் ஊரடங்கு உத்தரவு ஆகும். அதாவது, பிரதமரின் அறிக்கையின் படி, வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, மக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால், எச்சரிக்கையையும் மீறி மக்கள் வெளியே வரவாய்ப்புள்ளது என்பதால், மோடி இதுபோன்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். இதன் மூலம், கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.

அத்தியாவசியத் தேவைகளில் பணிபுரிவோர் தவிர, வேறு எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் கூறியிருக்கிறார்.

இந்த சுய ஊரடங்கு உத்தரவு என்பது இந்தியாவின் அனைத்து குடிமகனுக்கும் பொருந்தும்.

மேலும், வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்று அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும், ஓய்வில்லாமல் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலமாகவோ அல்லது ‘ரிங்’ ஒலி எழுப்பியோ நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is janata curfew pm modi mentioned

Next Story
கொரோனா வைரசுக்கும் பல்வலிக்கும் தொடர்பு உள்ளதா?. என்ன சொல்கிறார்கள் பல் மருத்துவர்கள்coronavirus latest updates, coronavirus dentists, dentist visit coronavirus, are dentists visits safe during coronavirus, express explained, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com