ஆகஸ்ட் 2019-ல் 370வது பிரிவு திருத்தப்பட்டதில் இருந்து பாதுகாப்புப் படைகள் மீதான மிகப்பெரிய தாக்குதலில், அதிகம் அறியப்படாத தீவிரவாத அமைப்பான ‘காஷ்மீர் டைகர்’என்கிற ‘காஷ்மீர் புலிகள்’ என்ற அமைப்பின் பெயரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீநகரில் திங்கள்கிழமை போலீஸ் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் புலிகள் என்ற பெயர் முதன்முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியே தெரிய வந்தது. இதை காவல்துறை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிழல் குழு என்று அழைத்துள்ளது. ஜூன் மாதம், தெற்கு காஷ்மீரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.
ஆகஸ்ட், 2019-ல், 370வது பிரிவு திருத்தப்பட்ட பிறகு, காஷ்மீர் புலிகள் போன்ற பல புதிய தீவிரவாத அமைப்புகளை தாக்குதல்களில் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவைகளில் குறைந்தது இரண்டு அமைப்புகள், எதிர்ப்பு முன்னணி (டிஆர்எஃப்) மற்றும் பாசிசப் படைகளுக்கு எதிரான மக்கள் (பிஏஎஃப்எஃப்) அமைப்புகள் ஆகும். இந்த அமைப்புகளுக்கு பின்னணியில் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் அமைப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளன. ஐக்கிய விடுதலை முன்னணி என்ற மற்றொரு அமைப்பின் பெயரும் வெளியெ தெரிய வந்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்புகளின் பெயர் குறிப்பிடப்படுவதில் மாற்றம் இருப்பதாக பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன - மத அடையாளம் கொண்ட பெயர்களில் இருந்து ‘மதச்சார்பற்ற’ தன்மையுள்ள பெயர்களாக மாறியிருக்கின்றன.
ஸ்ரீநகர்
இந்த அமைப்புகளின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் காவல்துறை அதிகாரிகள் ஒரு வடிவமைப்பை பார்க்கிறார்கள். “ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கையை அதிகரிக்க பாகிஸ்தான் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், எஃப்.ஏ.டி.எஃப்-ஆல் புறக்கணிக்க முடியாது.” என்று ஒரு அதிகாரி கூறுகிறார். மேலும், “லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இ பெயர்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவை என்பதாலும் மத சம்பந்தமானவை என்பதாலும் பெயர்களை மாற்றம் செய்ய முடிவு செய்தனர். ஆயுதக்குழுவுக்கு மதச்சார்பற்ற மற்றும் பூர்வீகமாக சித்தரிக்கும் முயற்சி இது” என்று கூறுகின்றனர்.
மற்றொரு விஷயம் புதிய குழுக்கள் பள்ளத்தாகில் தீவிரவாதிகள் அதிக அளவில் இருப்பதான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “களத்தில் சுமார் 150 - 200 தீவிரவாதிகள் மட்டுமே உள்ளனர். மூன்று அல்லது நான்கு பெரிய குழுக்கள் மட்டுமே உள்ளன. அவைகள் வெவ்வேறு தொகுதிகள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன.” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
ஜம்மு காஷ்மீர் ஆயுதக் குழுவின் மதச்சார்பற்றன் தன்மையைப் பொறுத்தவரை பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஒரே மாதிரியானவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”