தனிநபர் தடுப்பூசி செலுத்திக் கொண்டாரா என்பதை கண்டறிய புது வழி; அப்டேட்டை வெளியிட்டது கோவின்

ஆதார் போன்று அங்கீகார சேவையாக இது இருக்கும். இந்த செயல்பாட்டை பயன்படுத்த, பயனாளி தன்னுடைய மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளீடாக செலுத்த வேண்டும்.

ஆதார் போன்று அங்கீகார சேவையாக இது இருக்கும். இந்த செயல்பாட்டை பயன்படுத்த, பயனாளி தன்னுடைய மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளீடாக செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
New Update
KYC-VS, the new update on CoWIN, vaccination, covid19 vaccine,

Kaunain Sheriff M

Advertisment

new update on CoWIN to check vaccination status : பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கள் முதலாளிகள், வாடிக்கையாளர்கள் அல்லது சேவை வழங்குநர்களின் கோவிட் தடுப்பூசி நிலையை சரிபார்க்க அரசாங்கம் ஒரு வழியைக் கொண்டு வந்துள்ளது.சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை கோவின் ஐடி இயங்குதளத்தில் ஒரு அப்டேட்டை வெளியிட்டது. அங்கு பயனாளிகள் கோவிட் -19 தடுப்பூசி நியமனங்களை பதிவு செய்து டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் கொள்ள முடியும். இந்த அப்டேட் யுவர் கஸ்டமர்ஸ் / க்ளைன்ட்ஸ் வேக்சினேஷன் ஸ்டேட்டஸ் ( Your Customer’s/Client’s Vaccination Status (KYC-VS)) என்று வழங்கப்படுகிறது.

KYC-VS என்றால் என்ன?

KYC-VS என்பது CoWIN இயங்குதளத்தில் தொடங்கப்பட்ட ஒரு புதிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) ஆகும். புதிய அம்சம் CoWIN மூலம் தனிநபரின் தடுப்பூசியின் நிலையை சரிபார்க்க நிறுவனங்களுக்கு உதவும்.

Advertisment
Advertisements

CoWIN-இல் புதிய அம்சம் ஏன் சேர்க்கப்பட்டது?

ஒரு நிறுவனம் தடுப்பூசி சான்றிதழை முழுமையாக பார்க்க வேண்டிய தேவை இல்லாததை உறுதி செய்ய இந்த அப்டேட் வழங்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தனிநபர் தடுப்பூசி போடப்பட்டாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

"அனைவரின் பாதுகாப்பையும் பராமரிக்கும் போது சமூக-பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக புத்துயிர் பெறுவதால், பணியாளர்கள், பயணிகள் என ஏதேனும் அல்லது அனைத்து காரணங்களுக்காகவும் அவர்கள் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தனிநபர்களின் தடுப்பூசியின் நிலையை டிஜிட்டல் முறையில் தெரிவிக்க ஒரு வழி தேவை என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அம்சம் எங்கே உள்ளது?

இந்த புதிய அப்டேட் எங்கே உதவும் என்று அரசாங்கம் குறிப்பாக அறிவித்துள்ளது. முதலாவதாக, ஒரு நிறுவனம் அல்லது அலுவலகங்கள், பணியிடங்களில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அதன் ஊழியர்களின் தடுப்பூசி நிலையை அறிய விரும்பும்போது, இது உதவும்.

இரண்டாவதாக, ரயில்களில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் பயணிகளின் தடுப்பூசி நிலையை ரயில்வே விரும்பும்போது.

மூன்றாவதாக, டிக்கெட் வாங்கும் பயணிகளின் தடுப்பூசி நிலையை விமான நிறுவனங்கள் பெற விரும்பும்போது, மற்றும்/அல்லது விமான நிலையங்கள் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை மட்டுமே செல்ல அனுமதிக்கும் போது இது தேவைப்படும்.

ஹோட்டல்களுக்கு செல்லும் போதோ, அல்லது ஹோட்டல்களுக்கு ஆன்லைனில் புக்கிங் செய்யும் போதோ இது தேவைப்படலாம்.

இது எப்படி வேலை செய்யும்?

ஆதார் போன்று அங்கீகார சேவையாக இது இருக்கும். இந்த செயல்பாட்டை பயன்படுத்த, பயனாளி தன்னுடைய மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளீடாக செலுத்த வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஓ.டி.பியை உள்ளீடாக தர வேண்டும்.

பதிலுக்கு, CoWIN தனிநபரின் தடுப்பூசியின் நிலையை சரிபார்க்கும் நிறுவனத்திற்கு ஒரு பதிலை அனுப்பும், இது பின்வருமாறு இருக்கும்: 0 என்றால் அந்நபர் தடுப்பூசி போடப்படவில்லை; 1 என்றால் ஒரு டோஸ் மட்டும் செலுத்தியுள்ளார். 2 என்றால் அந்நபர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பதாகும்.

இந்த பதில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்படும் மற்றும் சரிபார்க்கும் நிறுவனத்துடன் உடனடியாக பகிரப்படலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய ஏ.பி.ஐ. தனியுரிமை தொடர்பான சிக்கல்களை தீர்த்துள்ளதா?

புதிய அம்சம் ஒப்புதல் அடிப்படையிலானது மற்றும் தனியுரிமை-பாதுகாத்தல் ஆகும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ஒரு டிக்கெட் வாங்குவதற்கு தேவையான விவரங்களை ஒரு தனிநபர் உள்ளிடுவார், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அதே பரிவர்த்தனையில் தடுப்பூசி நிலையைப் பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Vaccine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: