Advertisment

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு செவ்வாய் தோஷம்: உயர் நீதிமன்ற உத்தரவும் உச்ச நீதிமன்ற தடையும்

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதை அடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hindu-marriage

SC stays Allahabad HC order to verify if rape victim was manglik

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா என பார்த்து கூறுமாறு லக்னோ பல்கலைக் கழக ஜோதிட துறைக்கு அறிவுறுத்திய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 3) தடை விதித்தது.

Advertisment

செவ்வாய் தோஷம் என்பது ஒரு பொதுவான மூடநம்பிக்கை ஆகும். இங்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவர், செவ்வாய் தோஷம் இல்லாதவரை மணக்கும் போது, துணைக்கு துன்பம், உடல்நலக்குறைவு மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து,  ஒரு நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தனக்கு செவ்வாய் தோஷம் என்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் அந்த பெண் கூறியிருந்தார்.

அந்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மே 23 அன்று, இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறை தலைவரிடம் 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும், இதை ஆய்வு செய்து அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என 3 வாரங்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என ஜோதிடத் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதை அடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விஷயத்தை அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்குமாறு உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

வழக்கில் செவ்வாய் தோஷம் என்ன காரணியாக இருந்தது?

பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணத்தை நடத்த முடியாது, இது திருமணங்களுக்கு சாதகமற்றது என்று சிலர் நம்புகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வக்கீல் நீதிமன்றத்தில் வாதிட்டார், அதனால்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நீதிமன்றத்தின் முன் உள்ள பிரச்சினை, என்று வழக்கறிஞர் கூறினார். பாதி சடங்கு முடிந்த பிறகு, செவ்வாய் தோஷம் குறித்த கேள்விக்கு அவர்கள் பின்வாங்கினர். இது வாதிடப்பட்டது, என்று அவர் கூறினார்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

புது தில்லியில் உள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஜோதிடப் பிரிவின் பேராசிரியர் வினோத் குமார் ஷர்மா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், ஒரு நபர் தனது ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வகிக்கும் நிலையின் அடிப்படையில் செவ்வாய் தோஷம் உள்ளவராக கருதப்படுகிறார்.

ஜோதிடத்தில், ஜாதகம் என்பது ஒரு நபர் பிறந்த நேரத்தில் சூரியன், சந்திரன் மற்றும் பல்வேறு கிரகங்களின் நிலைகளைக் காட்டும் விளக்கப்படம். இவை ஒரு நபரின் தன்மை மற்றும் வாழ்க்கையின் திசையை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.

மங்கல், அல்லது செவ்வாய், வீரம் மற்றும் ஆர்வத்தின் கிரகம். எனவே செவ்வாய் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மோசமான விஷயம் அல்ல. மற்ற கிரகங்களின் தாக்கங்கள் மற்றும் பண்புகளை பொறுத்து தான் ஒட்டுமொத்த விளைவு இருக்கும்.

ஒரு குண்டலியில் 12 வீடுகள் உள்ளன. முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது அல்லது 12வது வீட்டில் செவ்வாய் இருப்பது ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கை அளிக்கிறது. செவ்வாய் ஆக்கிரமிப்பு கிரகமாக இருப்பதால், அதன் தாக்கத்தை கொண்ட ஒரு நபர், அவர்களின் வாழ்வில் தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், விளைவுகள், உங்கள் துணையின் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீங்கு விளைவிக்கும், என்று அவர் கூறினார்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு துரதிர்ஷ்டத்தைத் தருவார்கள் என்று பயப்படுவதால், ஜோதிடர்கள் அவர்களை சக செவ்வாய் தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள், அல்லது மரத்திற்கோ அல்லது உயிரற்ற பொருளுக்கோ 'போலி திருமணம்' நடத்தலாம், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் துரதிர்ஷ்டம் அந்த 'துணை'க்கு வந்து சேரும்.

பேராசிரியர் சர்மா இது இரு பாலினருக்கும் செய்யப்படும் என்றார். பெண்கள் ஒரு களிமண் பானையை அல்லது மரங்களை ஆணாகக் கருதி திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆண்கள் பெண்ணாகக் கருதப்படும் மரங்களைத் திருமணம் செய்கிறார்கள்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர்நீதிமன்ற உத்தரவு "தொந்தரவு தருகிறது" என்றும், அதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

ஜோதிடம் என்பது ஒரு அறிவியல். மணவாழ்க்கையில் ஒரு நபர் செவ்வாய் தோஷம் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஒரே கேள்வி என்னவென்றால், ஒரு நீதித்துறை பரிசீலிக்கும்போது, இது கருத்தில் கொள்ள முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

புகார் அளித்த பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவு இரு தரப்பினரின் ஒப்புதலால் நடந்தது என்றும், சாட்சியச் சட்டத்தின் 45வது பிரிவின் கீழ் நிபுணர் சாட்சியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் அமர்வில் தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகங்கள் இப்போது ஜோதிடம் பாடத்தில் பட்டங்களை வழங்குவதாகவும், அது ஒரு விஞ்ஞானம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பங்கஜ் மித்தல் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ’ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது ஜோதிடத்துக்குள் நுழைய முடியாது. எனவே இது போன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடாது. அதோடு ஜாமீன் மனுவில் ஜோதிட அறிக்கை தேவையில்லை. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை வழக்கின் தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment