விஞ்ஞானிகள் காடுகளில் தவளைகளை கண்காணிக்க ஏதுவாக, ஆராய்ச்சியாளர்கள் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். எந்தவொரு தவளை வசிக்கும் குளத்திலும் நிறுவக்கூடிய, 3 ஜி அல்லது 4 ஜி செல்லுலார் நெட்வொர்க்கைப் பெறும், உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட் சர்வே சாதனம் இது என்று விவரிக்கப்படுகிறது. இதற்கு “ஃபிராக்ஃபோன்” (FrogPhone) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கான்பெர்ரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்திரேலிய நிறுவனங்களின் குழு இதை உருவாக்கியுள்ளது. கான்பெர்ராவில் ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2018 வரை நடத்தப்பட்ட கள சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் சூழலியல் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
FrogPhone மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒரு தவளை வாழ்வியல் குறித்த தகவலை அறிய முடியும். ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டுள்ள ஃபிராக்ஃபோன்களில் ஒன்றிற்கு அழைப்பு மேற்கொண்டால், அந்த சாதனம் அதைப் பெற மூன்று வினாடிகள் ஆகும். இந்த சில நொடிகளில், சாதனத்தின் வெப்பநிலை சென்சார்கள் செயல்படுத்தப்படும். மேலும் காற்று வெப்பநிலை, நீர் வெப்பநிலை மற்றும் பேட்டரி மின்னழுத்தம் போன்ற சுற்றுச்சூழல் தரவு ஒரு குறுஞ்செய்தி வழியாக அழைப்பவரின் தொலைபேசிக்கு அனுப்பப்படும்.
இரவில் தவளைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் வழக்கமாக அவற்றை இரவிலேயே கண்காணிக்க வேண்டும். FrogPhone இந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் தொலைவிலிருந்து டயல் செய்ய அனுமதிக்கும். பின்னர் தரவை பகுப்பாய்வு செய்யும்.
இது தளத்தில் மனித இருப்பின் எதிர்மறையான தாக்கம், செலவுகள் மற்றும் அபாயங்களைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சாதனங்கள் உள்ளூர் தவளைகள் குறித்த எண்ணிக்கையை முன்பை விட அதிகமாக கண்காணிக்க அனுமதிக்கின்றன. ஏனெனில் இந்த தவளைகள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக அங்கீகரிக்கப்படுவதால், இவை முக்கியமாகின்றது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய சாதனத்தை கடந்த வார எடிஷனான journal Methods in Ecology and Evolutionல் விவரித்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:What is mean by frogphone