Advertisment

பிரதமர் அறிவித்த ஆரோக்கிய அடையாள அட்டை திட்டத்தின் நோக்கம் என்ன?

மத்திய அரசின் அமைப்பான நிதி ஆயோக், ஜூன் 2018 இல், தேசிய சுகாதார ஸ்டாக்  ( National Health Stack) - இந்தியா சுகாதார அமைப்பிற்கான டிஜிட்டல் முதுகெலும்பு என்ற ஆலோசனையை முன்னெடுத்தது.

author-image
WebDesk
New Update
National Health ID, india National Digtal health mission

National Health ID, india National Digtal health mission

பிரதம் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில்," ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கிய அடையாள அட்டை அளிக்கப்படும். இந்த அட்டையில், ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். உங்களுக்கு செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனை குறித்த தகவல்களும், ஏற்பட்ட ஒவ்வொரு நோயும், நீங்கள் சிகிச்சை பெற்ற டாக்டர்கள் பற்றிய தகவல்களும், நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் பற்றிய தகவல்கள், கண்டறியப்பட்ட பரிசோதனை முடிவுகள் என அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். எப்போது, என்ன சிகிச்சை எடுத்தீர்கள் என்ற அனைத்து தகவல்களும் ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும்" என்று தெரிவித்தார்.

Advertisment

டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் பெறுதல், சிகிச்சைக்குப் பணம் டெபாசிட் செய்தல், மருத்துவமனையில் சீட்டு வாங்குதல் போன்ற அனைத்து சிரமங்களையும் தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய லட்சிய நோக்குத் திட்டம் நீக்கிவிடும். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் விஷயங்களை அறிந்து கொண்டு நல்ல முடிவு எடுப்பதற்கு உதவக் கூடிய வகையில் ஒரு நடைமுறையை உருவாக்கி வருகிறோம் என்றும் கூறினார்.

பிரதமர் அறிவித்த ஆரோக்கிய அடையாள அட்டை திட்டத்தின் நோக்கம் என்ன?

ஆரோக்கிய அடையாள அட்டை என்றால் என்ன?

நமது ஆரோக்கியம் குறித்த அனைத்து தகவல்களும் ஒருங்கே இந்த ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும். நோயாளி ஒருவர்  தனக்கான ஆரோக்கிய அடையாள எண்ணை உருவாக்குவதன் மூலம், தனது மருத்துவ தகவல்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பெறலாம்  என்று இந்திய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

ஒவ்வொரு அடையாள எண்ணும் ஒரு சுகாதார தரவு ஒப்புதல் மேலாளருடன் இணைக்கப்படும் (தேசிய டிஜிட்டல் ஹெல்த் இயக்கத்தோடு இணைக்கப்படும்). நோயாளியின் சம்மதத்தைப் பெறவும், பெர்சனல் ஹெல்த் (Personal Health module) தொகுப்பில் இருந்து தகவல்கள்  தடையின்றி கிடைக்கவும் தேசிய டிஜிட்டல் ஹெல்த் இயக்கம் அனுமதிக்கிறது.

ஒரு நபரின் பெயர், பிறந்த தேதி, வயது போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் செல்பேசி எண் அல்லது ஆதார் அடையாள அட்டைக் கொண்டு  ஆரோக்கிய அடையாள எண்  உருவாக்கப்படுகிறது.  விருப்பமுள்ளவர்கள், தங்கள் ஆரோக்கிய அடையாள எண்ணை ஆதார் அடையாளத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

அனைத்து பங்குதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்ப சூழல் அமைப்பை உருவாக்க தேசிய சுகாதார கொள்கை 2017 திட்டமிட்டது. மேலும், சுகாதார சேவைகளில் ஆற்றல்மிக்க பொதுத் தனியார் பங்களிப்பை உருவாக்குவதன் மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்களின் நலன்கள் மேம்படுத்தமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னணியில், மத்திய அரசின் அமைப்பான நிதி ஆயோக், ஜூன் 2018 இல், தேசிய சுகாதார ஸ்டாக்  ( National Health Stack) - இந்தியா சுகாதார அமைப்பிற்கான டிஜிட்டல் முதுகெலும்பு என்ற ஆலோசனையை முன்னெடுத்தது.

இந்த ஆலோசனையின் ஒரு பகுதியாக, நிதி ஆயோக், டிஜிட்டல் ஹெல்த் ஐடி எனும் தீர்வை முன்மொழிந்தது. “தடுக்கக்கூடிய மருத்துவப் பிழைகளை வெகுவாகக் குறைக்கவும், சுகாதார சேவைகளின் தரத்தை கணிசமாக அதிகரிக்கவும்,  சுகாதார தரவுகள் வைத்து தேசிய சுகாதார ஸ்டாக் அவசியமானது என்று தெரிவித்தது.   இந்த முன்மொழிவை மத்திய அரசு,  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம்,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுடன் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டது.  இதன் அடிப்படையில்,   “டிஜிட்டல் ஹெல்த்கேர் பார் ஆல்” ஒரு மூலோபாய ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டது.

தேசிய சுகாதார அடையாள எண் எந்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்கிறது?

மருத்துவமனைகள், ஆய்வகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆன்லைன் மருந்தகங்கள், டெலிமெடிசின் நிறுவனங்கள் போன்ற பல்வேறு சேவை வழங்குநர்கள் இந்த சுகாதார அடையாள அட்டை அமைப்பில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் அடையாள எண் இல்லையென்றாலும், சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்று மூலோபாய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலகளவில் முன்னுதாரணம் உள்ளதா?   

2010 ஆம் ஆண்டளவில் அனைத்து நோயாளிகளையும் உள்ளடக்கிய மின்னணு சுகாதாரப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும் (centralised electronic health record) என்ற குறிக்கோளுடன், 2005 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) ஒரு மின்னணு சுகாதார பதிவு முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது (electronic health record systems).

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக பல மருத்துவமனைகள் மின்னணு மருத்துவ பதிவு முறையை செயல்படுத்தி வந்தாலும், தேசிய சுகாதார தகவல் பரிமாற்றம் எதுவும் இல்லை. இந்த திட்டத்திற்கான செலவுகள் 12 பில்லியன் டாலரைத் தாண்டியதை (மக்கள் வரிப்பணம்) அடுத்து, திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது.  மிகவும் விலையுயர்ந்த சுகாதார தகவல் தொழில்நுட்ப தோல்விகளில் ஒன்றாகவும் இந்த திட்டம் கருதப்படுகிறது.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment