Advertisment

கேரளாவில் இருவரை கொன்ற நிபா: இது என்ன வைரஸ், வேகமாக பரவாவிட்டாலும் ஏன் ஆபத்தானது?

நிபா என்பது ஜூனோடிக் நோயாகும், அதாவது இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. நெருங்கிய தொடர்பு மூலம் நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் இது பரவும்.

author-image
WebDesk
New Update
Nipah kills two in Kerala.jpg

கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. அதோடு 9 வயது மற்றும் 24 வயதுடைய நபர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஆகஸ்ட் 30-ல் தொற்று பாதிக்கப்பட்டு உயரிழந்த குடும்ப உறுப்பினர்கள் ஆவர். 

Advertisment

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ்  நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை கோழிக்கோட்டில் நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். மத்திய நிபுணர்கள் குழு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸைப் போல நிபா வைரஸ் வேகமாகப் பரவாது என்றாலும், இது மிகவும் ஆபத்தானது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நிபாவால் ஒட்டுமொத்த உலகளாவிய இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் தொற்று என்றால் என்ன?

நிபா என்பது ஜூனோடிக் நோயாகும் (Zoonotic disease), அதாவது இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவு மூலம் (Infected animals or Contaminated food) மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் இது நேரடியாக ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது என்று WHO கூறுகிறது. 

அறிகுறிகள்

இதன் அறிகுறிகள், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றுப்படி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்.

மேலும் தீவிர பாதிப்பின் போது, தூக்கமின்மை, வலிப்புத்தாக்கங்கள், மூளையழற்சி (மூளையின் வீக்கம்) ஏற்படலாம், கோமா மற்றும் மரணம் கூட ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபா எவ்வாறு பரவுகிறது?

மலேசியா (1998) மற்றும் சிங்கப்பூரில் (1999) மனிதர்களிடையே நிபா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள கிராமத்தில் முதல் முதலில் ஒருவர் நோய் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த கிராமத்தின் பெயர் இந்த வைரஸுக்கு வைக்கப்பட்டுள்ளது. 

விலங்குகளிடமிருந்து பரவுதல் முக்கியமாக அசுத்தமான உணவை உட்கொள்வதன் மூலம் நடக்கிறது. சி.டிசி-ன் கூற்றுப்படி, “பாதிக்கப்பட்ட வௌவாலின் எச்சில் அல்லது சிறுநீரால் மாசுபட்ட பேரீச்சம்பழம் அல்லது பழங்களை உட்கொள்வதால் பரவலாம். வௌவால்கள் தங்கும் மரங்களில் மக்கள் ஏறுவதாலும் நிபா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வைரஸிற்கான விலங்கு ஹோஸ்ட் நீர்த்தேக்கம் பழ வௌவால் என்று அறியப்படுகிறது, பொதுவாக பறக்கும் நரி என்று அழைக்கப்படுகிறது. பழ வெளவால்கள் இந்த வைரஸை பன்றிகள் மற்றும் நாய்கள், பூனைகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற பிற விலங்குகளுக்கு அனுப்பும் என்று அறியப்படுகிறது.

மனிதர்கள் முக்கியமாக இந்த விலங்குகளுடனான நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் மாசுபட்ட உணவை உட்கொள்வதன் மூலமாகவோ பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவது சாத்தியம் என்று கருதப்படுகிறது. 

“பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் நிபா வைரஸ் நபருக்கு நபர் பரவுவது தொடர்ந்து பதிவாகின. இது பொதுவாக NiV-பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடமும் மற்றும் சுகாதார அமைப்புகளிலும் காணப்படுகிறது.

1998-99ல் இது முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து, நிபா வைரஸின் பல வழக்குகள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளன. பங்களாதேஷில், 2001 முதல் குறைந்தது 10 முறை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நிபா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது?

நிபா வைரஸ் SARS-CoV-2 ஐ விட மிக மெதுவாக பரவுவதாக அறியப்படுகிறது. இருப்பினும், அதைக் கொல்லும் திறன் தான் மிகப்பெரிய கவலை. 2001-ம் ஆண்டில் வங்காளத்தின் சிலிகுரியில் முதல் பரவலின் போது, ​​பாதிக்கப்பட்ட 66 பேரில் 45 பேர் இறந்தனர். இது இறப்பு விகிதம் 68% ஆகும். அடுத்த அலையில், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில், 2007 இல், பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் இறந்தனர்.

2018 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட 2018-ம் ஆண்டு பாதிப்பின் போது, ​​பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளில் 17 பேர் இறந்தனர்.

1999-ம் ஆண்டு மலேசியாவில் பரவிய நோய்த்தொற்றில் மொத்தம் 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 105 பேர் இறந்துள்ளனர் என்று கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, 'நிபா வைரஸ்: கடந்த கால வெடிப்புகள் மற்றும் எதிர்காலக் கட்டுப்பாடு' வைரஸ்கள் இதழின் ஏப்ரல் 2020 இதழில் கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும், இதுவரை, நிபா வைரஸின் அனைத்து வெடிப்புகளும் உள்ளூர்மயமாக்கப்பட்டு ஒப்பீட்டளவில் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நிபா வைரஸ் மிகவும் தொற்றுநோயாக இல்லை என்பதும், மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவது மிகவும் எளிதானது அல்ல என்பதும், ஒரு பரவல் விரைவில் முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

வங்காளதேச ஆராய்ச்சியாளர்களான நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பி தேவநாத் மற்றும் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் எச்.எம்.ஏ. மசூத் ஆகியோரின் ஆய்வில், 2021-ல் வெளியிடப்பட்டது, நிபா வைரஸின் முந்தைய பாதிப்புகளில் இனப்பெருக்க எண் (R0) சுமார் 0.48 ஆக இருந்தது. R-மதிப்பு என்பது மக்களிடையே வைரஸ் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதற்கான அளவீடு ஆகும். 

ஒன்றுக்குக் குறைவான மதிப்பு என்றால், ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரால் ஒருவருக்கும் குறைவானவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், பாதிப்பு ஒப்பீட்டளவில் விரைவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nipah Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment