Advertisment

ஓ.ஐ.சி குழுவை இந்தியா சாடியது ஏன்?

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் வகுப்பு மனப்பான்மை உள்ளதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மீது இந்தியா சாடியுள்ளது. ஓ.ஐ.சி என்றால் என்ன, இந்தியாவின் வலுவான எதிர்வினைக்கு காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What is OIC, Organization of Islamic Cooperation, Why did India slam OIC group. ஓஐசி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஓஐசி குழுவை இந்தியா சாடியது ஏன், இந்தியா, பாகிஸ்தான், யூஏஇ, UAE, India, OIC

கர்நாடகாவில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறப்பட்ட விவகாரத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்துக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இந்த குழு வகுப்பு மனப்பான்மை மற்றும் போலியான நலன்களால் கடத்தப்பட்டது என்று இந்தியா சாடியது - இது பாகிஸ்தானைப் பற்றிய மெல்லிய குறிப்பாக கருதப்படுகிறது.

Advertisment

"முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் அதே வேளையில் அவர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும்" இந்தியாவை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) வலியுறுத்தியது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தூண்டுபவர்கள் மற்றும் பிரச்சாரகர்களை இந்தியா நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஓ.ஐ.சி-யின் அறிக்கைக்கு இந்தியாவின் பதில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், நாட்டிற்குள் இருக்கும் பிரச்சினைகள் எங்களுடைய அரசியலமைப்பு கட்டமைப்பு, பொறிமுறையின்படியும் ஜனநாயக நெறிமுறைகளின் அரசியலின்படி தீர்க்கப்படுகின்றன. ஓ.ஐ.சி-யின்செயலகத்தின் வகுப்புவாத மனப்பான்மை இந்த உண்மைகளை சரியான முறையில் மதிப்பிடுவதற்கு இடமளிக்கவில்லை. என்று கூறியது. மேலும், இந்தியா 2020-ல் கூறியதை மீண்டும் மீண்டும் கூறியது, ஓ.ஐ.சி இந்தியாவிற்கு எதிரான அவர்களின் மோசமான பிரச்சாரத்தை மேலும் அதிகரிக்க போலி நலன்களால் கடத்தப்படுகிறது” என்று கூறியுள்ளது.

ஓ.ஐ.சி என்றால் என்ன?

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) ஐ.நாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பலதரப்பு அமைப்பாகும். இது 57 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் அல்லது முஸ்லீம் நாடுகள் பெரும்பான்மை உறுப்பினர்களாக உள்ளன. ஓ.ஐ.சி-யின் குறிக்கோள், “உலகின் பல்வேறு மக்களிடையே சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் உணர்வில் முஸ்லீம் உலகின் நலன்களைப் பாதுகாப்பதும் அரணாக இருப்பதும் ஆகும். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ரஷ்யா, தாய்லாந்து, போஸ்னியா & ஹெர்சகோவினா மற்றும் அங்கீகரிக்கப்படாத துருக்கிய சைப்ரஸ் அரசு ஆகியவை பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

1969-ம் ஆண்டு 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் தீவைத்த பிறகு இஸ்லாமிய உலகத்தை ஒருங்கிணைக்க, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு செப்டம்பர், 1969ல் மொராக்கோவில் நடைபெற்ற முதல் இஸ்லாமிய உச்சி மாநாட்டின் மூலம் நிறுவப்பட்டது. இது 1967 அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு மத்திய கிழக்கை அதன் மோசமான நெருக்கடிக்குள் தள்ளியது.

இந்தியா & ஓ.ஐ.எசி

1969 இல் ரபாத்தில் நடந்த நிறுவன மாநாட்டிற்கு, உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் சமூகத்தைக் கொண்ட நாடாக இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் அவமானகரமான முறையில் வெளியேற்றப்பட்டது. பின்னர், விவசாய அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமது மொராக்கோ வந்தவுடன் அழைக்கப்பட்டார். 2006-ம் ஆண்டில், இந்தியா பொருளாதார நடவடிக்கையைத் திருப்பியது. அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்தியது. சவுதி அரேபியா டெல்லியை பார்வையாளராக சேர அழைத்தது.

ஆனால், இந்தியா பல காரணங்களால் விலகி நின்றது, மதச்சார்பற்ற நாடாக, மதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமைப்பில் சேர விரும்பவில்லை. தனிப்பட்ட உறுப்பு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது ஒரு குழுவில் குறிப்பாக காஷ்மீர் போன்ற பிரச்சினைகளில் அழுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.

2018-ல் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டின் 45வது அமர்வில் அந்த அழைப்பு மீண்டும் வந்தது. உலக முஸ்லிம்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாழும் இந்தியாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று விருந்தினரான பங்களாதேஷ் பரிந்துரைத்தது. ஆனால், பாகிஸ்தான் அந்த திட்டத்தை எதிர்த்தது.

ஓ.ஐ.சி முக்கியமாக சவூதி அரேபியாவால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், அதன் தொடக்கத்திலிருந்தே ஒரு பெரிய கருத்தைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக, அந்த அமைப்பு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய வன்முறைகளை விமர்சித்தும் பல அறிக்கைகளை வெளியிட்டது. 1990-களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் டெல்லி இந்த அறிக்கைகளை எதிர்த்து வந்தது. இதனால், ஓ.ஐ.சியில் இந்தியா நட்புறவில்லாமல் இருந்தது.

விதிமுறைகளை மாற்றுதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற சக்திவாய்ந்த உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்ட பிறகு, குழுவின் எந்தவொரு அறிக்கையையும் இந்தியா எதிர்ப்பதில் நம்பிக்கையுடன் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அது கண்டிப்பாக இந்தியாவின் உள்விவகாரம் என்றும் இந்தியா தொடர்ந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் ஓ.ஐ.சி-க்கு எந்த நிலைப்பாடும் இல்லை.

2019 ஆம் ஆண்டில் ஓ.ஐ.சி வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், கௌரவ விருந்தினராக இந்தியா தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தியது.

அபுதாபியில் மார்ச் 1, 2019 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானால் அழைக்கப்பட்ட பின்னர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்திய வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவில் 185 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதையும், அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும், இஸ்லாமிய உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பையும் வரவேற்கும் வகையில் இந்த அழைப்பிதழ் உள்ளது” என்று கூறியது.

சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபிக்கு வருகை தருவதற்கு முன், அதிகாரப்பூர்வ எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் இந்தியாவை சிறந்த உலகளாவிய அரசியல் அந்தஸ்து கொண்ட நட்பு நாடு என்று விவரித்தது.

குறிப்பாக புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முதல்முறை அழைப்பு புது டெல்லிக்கு ராஜதந்திர வெற்றியாகக் கருதப்பட்டது. ஓ.ஐ.சி அழைப்புக்கு சற்று முன்பு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லி வந்திருந்தார். சுஷ்மா ஸ்வராஜ்ஜுக்கான அழைப்பை பாகிஸ்தான் எதிர்த்தது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, அழைப்பை ரத்து செய்வதற்கான தனது கோரிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரித்ததை அடுத்து, அதன் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி முழுமையாக கூட்டத்தை புறக்கணித்தார்.

இதற்கு சில மாதங்களுக்குள், ஜம்மு - காஷ்மீரில் இந்தியாவின் வியத்தகு மாற்றங்கள் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் ஓ.ஐ.சி அதன் கவலைகள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சர்ச்சை சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலை யு.ஏ.இ மற்றும் சவுதி அரேபியா தனித்தனியாக மிகவும் நுணுக்கமான நிலைகளை எடுத்தன.

ஓ.ஐ.சி இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளான பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளை உள்ளடக்கியது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை சிக்கலாக்க விரும்பவில்லை என்று இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், ஓ.ஐ.சி உடன் இணைந்து செயல்படுகிறோம் என்று இந்திய தூதர்கள் கூறுகின்றனர்.

ஹிஜாப் சர்ச்சைக்கு இந்தியாவின் பதில்

ஓ.ஐ.சி-யின் காஷ்மீர் அறிக்கைகளுக்கு இந்தியாவின் உறுதியான பதிலைக் கருத்தில் கொண்டு, ஹிஜாப் சர்ச்சையில் வலுவான வார்த்தைகளைக் கொண்ட அறிக்கை அசாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், டெல்லி ஏற்கனவே 2020-ல் ஓ.ஐ.சி உடன் வேறுபட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

அந்த ஆண்டு, ஓ.ஐ.சி மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைத் தாக்கிய பிறகு, டெல்லி அதன் வழக்கமான கோபமான அறிக்கைகளைவிட ஒரு படி மேலே சென்று, மத சகிப்புத்தன்மையில் அருவருக்கத்தக்க பதிவைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாடு தீவிரவாதம் மற்றும் சிறுபான்மையினரை துன்புறுத்துதல் ஆகியவற்றில் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இந்த குழுமம் தொடர்ந்து அனுமதிக்கிறது என்று கூறியது.

இந்தியாவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்ட தனிப்பட்ட உறுப்பினர்கள் இந்தியாவுக்கு எதிரான ஓ.ஐ.சி அறிக்கைகளில் கையொப்பமிடுவதில் மகிழ்ச்சி அடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Uae Oic India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment