தெலங்கானாவில் மிக அதிக அளவில் புழுங்கல் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், உபரியை மத்திய அரசு கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது. புழுங்கல் அரிசி என்றால் என்ன? தெலங்கானா அரசும் மத்திய அரசுக்கும் என்ன பிரச்னை என்பதை இந்த கட்டுரையில் அலசுவோம்.
கடந்த வாரம் டெல்லியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தனது அமைச்சரவை சகாக்களுடன் தெலங்கானா இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ஒரே மாதிரியான நெல் கொள்முதல் கொள்கையை வகுக்க கோரிக்கை விடுத்தார் தர்ணா நடைபெற்றது.
மத்திய அரசு உபரியாக இருக்கும் புழுங்கல் அரிசியை வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.
புழுங்கல் அரிசிக்கான தேவை குறைவாக இருப்பதால் கூடுதலாக தேவையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலாக வாங்கி பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
புழுங்கல் அரிசி என்றால் என்ன?
நெல் பாதி அளவுக்கு வேக வைக்கப்பட்டால் அது புழுங்கல் அரிசி என்றழைக்கப்படுகிறது.
புழுங்கல் அரிசி என்பது தற்போது வந்ததில்லை. பழங்காலம் தொட்டே புழக்கத்தில் இருந்து வருகிறது.
எனினும், புழுங்கல் அரிசிக்கு சரியான விளக்கத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் அல்லது உணவு அமைச்சகமும் கொடுக்கவில்லை.
புழுங்கல் அரிசிக்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நெல்லை சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீர் வடிந்த பிறகு, 20 நிமிடத்துக்கு வேக வைக்கிறது மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்பட ஆராய்ச்சி நிறுவனம்.
ஆனால், பொதுவாக 8 மணிநேரம் ஊற வைக்கப்பட்டு வேக வைக்கப்படுகிறது. இதேபோல் மைசூர் நிறுவனம் நெல்லை நிழலில் உலர வைக்கிறது. ஆனால், பொதுவாக சூரிய ஒளியில் உலர வைக்கப்படுகிறது.
தஞ்சாவூரில் உள்ள நெல் பதப்படுத்தும் ஆராய்ச்சி மையம் (PPRC) குரோமேட் ஊறவைக்கும் செயல்முறை எனப்படும் முறையைப் பின்பற்றுகிறது. இது குரோமேட்டைப் பயன்படுத்துகிறது, இது குரோமியம் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டையும் கொண்டிருக்கும் உப்பு குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
இது ஈரமான அரிசியிலிருந்து நாற்றத்தை நீக்குகிறது.
அனைத்து செயல்முறைகளும் பொதுவாக மூன்று நிலைகளை உள்ளடக்கி உள்ளது. ஊறவைத்தல், வேகவைத்தல் மற்றும் உலர்த்துதல். இந்த நிலைகளைக் கடந்த பிறகு, நெல் அரைவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அனைத்து அரிசி வகைகளும் புழுங்கலுக்கு ஏற்றதா?
பொதுவாக, அனைத்து வகைகளையும் புழுங்கல் அரிசியில் பதப்படுத்தலாம். ஆனால் அரைக்கும் போது உடைவதைத் தடுக்க நீண்ட மெல்லிய வகைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. இருப்பினும், நறுமண வகைகளை வேக வைக்கக்கூடாது. ஏனெனில் செயல்முறை அதன் நறுமணத்தை இழக்கச் செய்யலாம்.
நன்மைகள் என்ன?
பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக, நாம் அரிசியை புழுங்கச் செய்யும்போது அது அரிசியை கடினமாக்குகிறது. இது அரைக்கும் போது அரிசி உடையும் வாய்ப்புகளை குறைக்கிறது.
கொதிக்கும்போது அரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது. மூன்றாவதாக, வேகவைத்த அரிசி பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்.
இதனால் சில குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. அரிசியின் நிறம் மாறிவிடும். இதனுடைய மணமும் மாறிவிடும்.
பச்சரிசியை காட்டிலும் புழுங்கல் அரசிக்கு முதலீடும் அதிகம் தேவைப்படும்.
நாட்டில் புழுங்கல் அரிசியின் இருப்பு எவ்வளவு?
இந்த மாதம் ஏப்ரல் 1 நிலவரப்படி, புழுங்கல் அரிசி 40.85 லட்சம் மெட்ரிக் டன்கள் இருப்பில் உள்ளது.
மிக அதிக எண்ணிக்கையில் தெலங்கானாவில் 16.52 மெட்ரிக் டன்களும், தமிழகத்தில் 12.09 மெட்ரிக் டன்களும் உள்ளன.
அடுத்த படியாக கேரளா 3 மெட்ரிக் டன்களுடன் உள்ளது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், கர்நாடகா, பிகார் ஆகிய மாநிலங்களில் 0.04-2.92 மெட்ரிக் டன்கள் வரை உள்ளது.
2020-21 ஆம் ஆண்டின் காரீஃப் சந்தைப் பருவத்திற்காக (KMS) தெலுங்கானாவில் இருந்து 1.36 மெட்ரிக் டன்கள் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யும்.
நடப்பு KMS 2021-22 க்கு, ஜார்கண்ட் (3.74LM) மற்றும் ஒடிசா (2.08 LMT) ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் 5.82 LMT புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தெலங்கானா உட்பட மற்ற 10 அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து, புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யும் திட்டம் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை.
இதனால், வரும் நாட்களில் மொத்த புழுங்கல் அரிசி இருப்பு 47.76 LMT ஆக உயரும்.
தேவை எவ்வளவு அதிகம்?
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன்கள் என்ற அளவில் புழுங்கல் அரிசி தேவையை உணவு அமைச்சகம் நிர்ணயிக்கிறது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, சமீபத்திய ஆண்டுகளில் புழுங்கல் அரிசியின் தேவை குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஜார்கண்ட், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற புழுங்கல் அரிசியை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளும் மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக பற்றாக்குறை மாநிலங்களுக்கு குறைந்த அளவே கிடைக்கிறது. முன்னதாக, இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து புழுங்கல் அரிசியை இந்த மாநிலங்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்தது.
எண்ணெய் பத்திரங்கள் என்பது என்ன? அவை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன?
ஆனால் சமீப ஆண்டுகளில், இந்த மாநிலங்களில் புழுங்கல் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, தற்போது கையிருப்பில் உள்ள புழுங்கல் அரிசி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்று அமைச்சகம் கூறுகிறது.
தெலுங்கானாவில் இருந்து கொள்முதல் செய்யும் முறை என்ன?
தெலங்கானா இதுவரை முக்கிய விநியோகஸ்தராக இருந்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டில் காரீஃப் மற்றும் ராபி ஆகிய இரு பருவங்களிலும் தெலுங்கானாவில் இருந்து 25.62 எல்எம்டி சமமான அரிசியை எஃப்சிஐ வாங்கியதாக உணவு அமைச்சகத்திடம் உள்ள தரவு காட்டுகிறது. 2019-20ல் இதன் அளவு 44.71 LMT ஆக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.