திரிபுரா வன்முறைக்கு எதிராக போராட்டத்திற்கு ராஸா அகாடெமி அழைப்பு விடுத்தது ஏன்?

Muhammad: Messenger of God என்ற படத்தை இயக்கிய மஜித் மஜித் என்ற ஈரானிய இயக்குநருக்கு எதிராகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகவும் ஃபத்வா விதித்தது.

Rasa Academy, Amaravati,

Mohamed Thaver 

What is Raza Academy? : தெற்கு மும்பையில் அமைந்திருக்கும் ராஸா அகாடெமி தற்போது மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திரிபுரா வன்முறை தொடர்பாக அமராவதியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்தில் கல்லெறிந்து வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் பாஜக அமராவதி முழுவதும் கடையடைப்பை நடத்தியது. நகர் முழுவதும் கடையடைப்பு நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் கொளுத்தப்பட்டன.

2012ம் ஆண்டு ராஸா அகாடெமியின் நிறுவனர் முகமது சயீத் நூரி அசாத் மைதானத்தில் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்த போராட்டமும் பிறகு வன்முறையாக வெடித்தது. ராஸா அகாடெமி என்றால் என்ன? சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இந்த அகாடெமியை ஏன் பாஜகாவில் விளம்பரப்படுத்தப்பட்ட அமைப்பு என்று கூறினார்? விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை.

ராஸா அகாடெமி ஏன், எப்போது உருவாக்கப்பட்டது?

இந்த அமைப்பை 1978ம் ஆண்டு முகமடு சயீத் நூரி என்பவர் சிலருடன் சேர்ந்து துவங்கினார். நூரி இந்த அமைப்பின் தலைவராக 1986ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தெற்காசியாவில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பரேல்வி பிரிவின் நிறுவனர் அகமது ராஸா கான் மற்றும் இதர சன்னி இஸ்லாமியர்கள் எழுதிய புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் நோக்கத்துடன் இந்த அகாடெமி உருவாக்கப்பட்டது.

சிறுபான்மையினரிடையே கல்வி விழிப்புணர்வுக்காகவும், சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதற்காகவும் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான அனைத்து விஷயங்களுக்காகவும் இது நிறுவப்பட்டது என்று அவர்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மும்பையின் முகமது அலி சாலையில் இதன் அலுவலகம் உள்ளது.

ராஸா அகாடெமி நிறுவனர் சயீத் நூரி யார்?

தையல் வியாபாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நூரி சன்னி இஸ்லாத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக அகாடெமியை உருவாக்கினார். முறையான இஸ்லாத் கல்வியை ராஸா பெறவில்லை. அகாடமி குறிப்பிடத்தக்க எந்த கல்விப் பணியுடன் தொடர்புடையது அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நகரம் முழுவதும் முஸ்லிம்களின் போராட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அடையாளத்தை பெற்றது.

அமராவதியில் வன்முறையைத் தொடர்ந்து இந்த அமைப்பு கவனத்தில் இருப்பது ஏன்?

திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக அமராவதி, மாலேகான், அகோலா உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ராஸா அகாடெமி அமராவதியில் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஊர்வலத்தில் பாஜக தலைவர் ஒருவர் வீட்டின் மீது கல்லெறிந்த சம்பவங்களும் நடைபெற்றன. இதில் ஜன்னல் உடைந்து ஒருவருக்கு காயமும் ஏற்பட்டது.

அமராவதியில் சனிக்கிழை பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்தது. அதன் 6,000 கட்சித் தொண்டர்கள் மற்றும் பிற கூட்டணி அமைப்பினர் அதை நிறைவேற்ற முன்வந்தனர். இந்த போராட்டத்தின் போதும் வன்முறை வெடித்தது. சில முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், ராஸா அகாடெமியை “பாஜக-விளம்பரப்படுத்தப்பட்ட அமைப்பு” என்று குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக பாஜகவிற்கு உதவும் ஒரு அமைப்பாக பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது என்று ராவத் குற்றம்சாட்டினார். பாஜக வன்முறையில் ஈடுபட ராஸா அகாடெமி மேடை அமைத்துக் கொடுத்தது என்று அவர் கூறினார். நூரி தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஸா அகாடெமியும் சர்ச்சைகளும்

ராஸா அகாடெமி சல்மான் ருஷ்டியின் உருவ பொம்மைகளை 1999களில் எரித்தது. இந்திய அரசு அவருக்கு இந்தியா வர அனுமதி அளித்த நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. ருஷ்டியின் சாதானிக் வெர்ஷஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கருப்பொருள்கள் அவர் மீது ஃபத்வா விதிக்க வழி வகுத்தது.

ராஸா அகாடெமியின் மற்றொரு இலக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். மும்பைக்கு அவர் வருகை தந்த போது ராஸா அகாடெமி அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். தஸ்லீமா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளும் தொந்தரவு செய்ய முயன்றனர்.

பி.பி.சி. தங்களின் வீடியோ ஒன்றில் நபிகள் நாயகத்தின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு எதிராக ராஸா அமைப்பு போராட்டம் நடத்தியது.

Muhammad: Messenger of God என்ற படத்தை இயக்கிய மஜித் மஜித் என்ற ஈரானிய இயக்குநருக்கு எதிராகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராகவும் ஃபத்வா விதித்தது.

சர்ச்சைகள் மட்டுமின்றி மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்று கொரோனா காலத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களையும் ராஸா அகாதெமி அடக்கம் செய்தது. கேரள வெள்ளத்தின் போதும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டது.

ஆசாத் மைதானத்தில் எவ்வாறு கலவரம் வெடித்தது?

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று ராஸா அகாடெமி மற்றும் மதினத்துல்லா அறக்கட்டளை இணைந்து ஆசாத் மைதானத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அசாம் மற்ரும் மியான்மரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இரண்டு பேர் பலியாகினர். மேலும் காவல்துறையினர் உட்பட 60 நபர்கள் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டு ரூ.2.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த இழப்பை ஈடு செய்யமாறு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த அமைப்பினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் சயீத் நூரை அதனை மறுத்துவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is raza academy the organisation that called protest in amravati over tripura violence

Next Story
Kamo’oalewa என்பது என்ன? அதன் அர்த்தம் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express