scorecardresearch

குழந்தைகளைத் தாக்கும் கண் புற்றுநோய்… ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ என்றால் என்ன?

ரெட்டினோபிளாஸ்டோமா என்றால் என்ன?… அதன் அறிகுறிகள், தடுக்கும் முறைகளை இங்கே காணலாம்.

குழந்தைகளைத் தாக்கும் கண் புற்றுநோய்… ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ என்றால் என்ன?

ரெட்டினோபிளாஸ்டோமா என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான கண் புற்றுநோயாகும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த Advanced Eye Centreஇல் உள்ள கண் மருத்துவம் துறை 1996 ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு மூன்று நாள்கள் ரெட்டினோபிளாஸ்டோமா கிளினிக்கை நடத்தி வருகின்றது.

இந்த துறை மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் அதிநவீன சிகிச்சையை வழங்கப்படுகிறது. அதில், லேசர் போட்டோகோகுலேஷன், கிரையோதெரபி, இன்ட்ராவிட்ரியல் கீமோதெரபி, டிரான்ஸ்புபில்லரி தெர்மோதெரபி மற்றும் நரம்பு மற்றும் உள்-தமனி கீமோதெரபி போன்ற சிகிச்சைகளும் அடங்கும்.

உலக ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ விழிப்புணர்வு வாரம் மே 15 முதல் மே 21 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த துறை நடத்தும் ரெட்டினோ கிளினிக்கில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொதுமக்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தவுள்ளது. இந்த கிளினிக்கிற்கு பேராசிரியர் உஷா சிங் தலைமை தாங்குகிறார். இவரது குழுவினர் ரெட்டினோபிளாஸ்டோமா குறித்து சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளனர். அவற்றை இங்கே காணலாம்.

ரெட்டினோபிளாஸ்டோமா என்றால் என்ன?

இது சிறு குழந்தைகளின் கண்களில் ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். பரம்பரையாக இந்த நோய் வரலாம். இந்த நோய் பாதிப்பை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால், உயிருக்கு ஆபத்தோ அல்லது கண் பார்வையை இழக்கவோ நேரிடலாம்.

அறிகுறிகள்

White Reflex in the eye: புகைப்படம் எடுக்கும்போது கண்களில் பிளாஷ் ஒளிப்பட்டு, சிகப்பு நிறத்தை பிரதிபலிப்பதற்கு பதிலாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.

Squinting: கண் முழி இடம் மாறி இருக்கும். அதாவது மூக்கை நோக்கியோ அல்லது காதை நோக்கியோ இருக்கக்கூடும்.

Eye vision damage: கண் பார்வை சரியாக தெரியாது. கண்கள் சிகப்பு நிறத்தில் மாறலாம். அதிக வழியை தரலாம்.

ரெட்டினோபிளாஸ்டோமா நோய் தாக்கம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,500-2,000 குழந்தைகள் ரெட்டினோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார ரீதியாக குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர், நோய் பாதிப்பை கண்டறியும் போது, மிகவும் அட்வான்ஸூடு நிலையில் இருப்பதை காணமுடியும். இது சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுத்துவது மட்டுமின்றி உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும்.

விழிப்புணர்வு இல்லாமை, கவனிப்புக்கான மோசமான அணுகல், அதிக சிகிச்சை செலவு மற்றும் உள்கட்டமைப்பு சுகாதார வல்லுநர்கள், நல்ல சிகிச்சை நெறிமுறைகள், தரமான மருந்துகள், நோயறிதல் மற்றும் ஆதரவான பராமரிப்பு இல்லாமை காரணங்களாக உள்ளன.

PGI அதிநவீன சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி குழந்தைகளின் நிதிசுமையையும் குறைக்கிறது. பல்வேறு ஏழை நோயாளிகளின் நிதிகள், அரசு திட்டங்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில புற்றுநோய் நிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டி உதவி வருகிறது. Cankids என்பது இந்திய புற்றுநோய் சங்கத்தின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ ஆகும். இந்த என்ஜிஓ, PGI-வுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதாவது, நிதி பற்றாக்குறையில் கண் புற்றுநோயுடன் தவிக்கும் குழந்தைகளுக்கு, சிறந்த சிகிச்சையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ரெட்டினோபிளாஸ்டோமா கண்டறிவது எப்படி?

கண் அல்ட்ரா-சோனோகிராபி மற்றும் ஃபண்டஸ் பரிசோதனை ஆகியவை உடனடி OPD நடைமுறைகளாகும். மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்(எம்ஆர்ஐ), சிஸ்டமிக் ஸ்டேஜிங் இன்வஸ்டிகேஷன்ஸ் (எலும்பு மஜ்ஜை பயாப்ஸி, சிஎஸ்எஃப் மற்றும் முழு உடல் PET ஸ்கேன்) ஆகியவை மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

ரெட்டினோபிளாஸ்டோமா தடுப்பது எப்படி?

ரெட்டினோபிளாஸ்டோமா சிகிச்சைக்கு பல ஒழுங்குமுறை அணுகுமுறை தேவைப்படுகிறது. இது போன்ற குழந்தைகளை கவனிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

முழுமையான மருத்துவ பரிசோதனை, நோயின் வகைப்பாடு கண்டறிந்த பிறது, அதற்கேற்ற சிகிச்சை வழங்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனியாக சிகிச்சையளிக்கப்படும்.

கீமோதெரபியானது நரம்பு வழியாகவோ அல்லது உள்-தமனி மூலமாகவோ, குழந்தை புற்றுநோயியல் நிபுணரால் வழங்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான சிகிச்சை முறையாகும்.

கட்டி கட்டுக்குள் வரும் வரை வாரந்தோறும் அல்லது மாதாந்திர அடிப்படையில் சிகிச்சை முறையில் மாற்றம் மேற்கொள்வது அவசியமாகும்.

சிகிச்சை முடிந்த பிறகு, நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதையும், சிகிச்சையால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும் வேண்டும். நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பரிசோதனையும், பெற்றோருக்கு மரபணு ஆலோசனையும் தேவைப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: What is retinoblastoma eye cancer in children

Best of Express