கலிபோர்னியா மாநில சட்டமன்றம் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுதல் தொடர்பாக ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதாவது உடலுறவின்போது, திருட்டுத்தனமாக ஆணுறையை இணையின் ஒப்புதல் இல்லாமல் அகற்றுவது - குற்றமாகும். இந்த மசோதா கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோமுக்கு அனுப்பப்பட்டது. அவர் மசோதாவை நிறைவேற்ற அக்டோபர் 10 வரை அவகாசம் அளித்தார். நிறைவேற்றப்பட்டால், கலிபோர்னியா மாகாண அரசு, துணையின் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறை அகற்றும் செயலில் ஈடுபடுபவரை குற்றவாளியாக்கும் முதல் மாகாணமாக இருக்கும்.
திருட்டுத்தனமாக ஆணுறை அகற்றுதலுக்கு எதிரான மசோதா என்றால் என்ன?
சட்டசபையின் 453வது மசோதா கலிபோர்னியா சிவில் கோட் பிரிவு 1708.5ல் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த மசோதா பாலுறவு பற்றி பேசுகிறது. மேலும், ஒரு நபர் உடலுறவில் ஈடுபடும்போது வெளிப்படுவதைப் பற்றி பேசுகிறது.
மற்றொருவரின் “நெருங்கிய பகுதியுடன் தீங்கு விளைவிக்கும் அல்லது புண்படுத்தும் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும்” எவரும் இந்த சட்டத்தில் அடங்குவர்; அல்லது அவரது சொந்த நெருங்கிய பகுதிகளைப் பயன்படுத்தி வேறொருவருக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது புண்படுத்தும் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது; அல்லது பாலியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் உள்ளவர்கள் அடங்குவர்.
இது மட்டுமல்லாமல் ஆணுறை அகற்றப்படுவதற்கு வாய்மொழியாக சம்மதம் தெரிவிக்காத ஒருவரின் பாலுறுப்பு மற்றும் வேறொருவரின் நெருங்கிய பகுதி ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு வைத்திருக்கும் நபரும் உடலுறவில் ஈடுபடும் நபரும் குற்றஞ்சாட்டப்படுவார் என்று இந்த புதிய திருத்தம் அறிமுகப்படுத்துகிறது.
ஒரு நபர் ஒருவரின் மீது உடலுறவில் ஈடுபடும்போது, பொது சேதங்கள், சிறப்பு சேதங்கள், தண்டனைச் சேதங்கள் மற்றும் நீதிமன்றத்தால் பொருத்தமானதாகக் கருதப்படும் பிற சேதங்களுக்கு அவர் அந்த நபருக்குப் பொறுப்பாவார் என்று இந்த பிரிவு கூறுகிறது.
நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சமமான நிவாரணம் வழங்கலாம், இதில் தடை உத்தரவு, செலவுகள் மற்றும் நீதிமன்றத்தால் பொருத்தமானதாகக் கருதப்படும் வேறு எந்த நிவாரணமும் அடங்கும்.
இந்த மசோதா குற்றவியல் குறியீட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை, மாறாக சிவில் கோட் திருத்தப்படுகிறது. இது பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடரவும் இழப்பீடு பெறவும் உரிமை அளிக்கிறது.
இந்த மசோதா சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியாவால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிளாங்கா ரூபியோவால் இணைந்து எழுதப்பட்டது. செப்டம்பர் 8ம் தேதி கார்சியா பதிவிட்ட ட்வீட்டில், “எனது மசோதா AB453 அரசாங்கத்தின் மேசைக்குச் செல்கிறது. அவர் அதில் கையெழுத்திட்டு தேசத்திற்கு வழிநடத்துவார். திருடுத்தனமாக அல்லது அனுமதி இல்லாமல் ஆணுறை அகற்றுவது ஒழுக்கக்கேடானது அல்ல, ஆனால், அது சட்டவிரோதமானது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுதல் என்றால் என்ன?
திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுதல் (Stealthing) என்பது உடலுறவின் போது துணையுடன் அவருக்கு தெரியாமல் அல்லது அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றும் செயல் ஆகும். இது ஆணுறை பயன்பாட்டு எதிர்ப்பின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
திருட்டுத்தனமாக அனுமதி இல்லாமல் ஆணுறையை அகற்றுகிற நடைமுறையால் ஏற்படக்கூடிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் கர்ப்பம் அடைதல் ஆகியவற்றைதிருட்டுத்தனமானது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றன.
அலெக்ஸாண்ட்ரா பிராட்ஸ்கியின் ஒரு கட்டுரை- ‘உடலுறவின்போது அனுமதி இல்லாமல் ஆணுறையை அகற்றுதல்’ (Rape-adjacent) அனுமதி இல்லாமல் இல்லாத ஆணுறை அகற்றுதலுக்கான சட்டரீதியான பதில்களை கற்பனை செய்தல்-கொலம்பியா ஜர்னல் ஆஃப் ஜெண்டர் அண்ட் லாவில் வெளியிடப்பட்டது "திருட்டுத்தனத்தை" ஒருமித்த உடலுறவில் உடன்படாத பாலினமாக மாற்றுவதை புரிந்து கொள்ள முடியும்". உடன்படாத ஆணுறை அகற்றுதல் என்பது "பாலின வன்முறையின் பாலினத்தால் தூண்டப்பட்ட வடிவம்" என்று அந்த கட்டுரை கூறுகிறது.
மற்றொரு ஆய்வின்படி, திருட்டுத்தனமாக அனுமதி இல்லாமல் ஆணுறை அகற்றுதல் என்பது சமீப ஆண்டுகளாக மிகவும் பொதுவான, தீவிரமான மற்றும் பரவலான பிரச்சினையாகிவிட்டது. 2019 பிஎம்சி ஆய்வு 21 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களில் 12 சதவிகிதம் துணிவர்கள் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவதில் ஈடுபட்டதாகக் காட்டுகிறது.
உடலுறுவின்போது பொதுவான, சிறப்பு மற்றும் தண்டனைக்குரிய சேதங்கள் என்ன?
உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் பொதுவான சேதங்கள், உடலுறவால் ஏற்படும் உடல் மற்றும் உணர்ச்சி வலிக்காக பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் அதன்பிறகு ஏற்படும் உளவியல் அதிர்ச்சியை உள்ளடக்கியது.
சிறப்பு சேதங்களில் சிகிச்சையின் நிதிச் செலவு அல்லது பாதிக்கப்பட்டவருக்குத் தேவைப்படும் உளவியல் மற்றும் மனநல வழக்கு ஆகியவை அடங்கும்.
கலிபோர்னியா சிவில் சட்டம் 3294 -ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் அடக்குமுறை, மோசடி அல்லது துரோகம் செய்தவர் என்று நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர் தண்டனைக்குரிய இழப்பீட்டை நாடலாம்.
திருட்டுத்தனமாக அனுமதி இல்லாமல் ஆணுறை அகற்றுவதற்கு எதிராக சட்டம் இயற்றுவதை வேறு ஏதேனும் சட்டம் பரிசீலித்திருக்கிறதா?
டயான் ஜே. சவினோ மார்ச், 2019ல் நியூயார்க் செனட்டில் செனட் மசோதா எஸ் 4401ஐ ஒப்புக்கொண்டார். நியூயார்க் மாநில செனட் வலைத்தளத்தின்படி, இந்த மசோதா தற்போது செனட்டில் உள்ளது.
2017ம் ஆண்டில், விஸ்கான்சின் மாநில பிரதிநிதி மெலிசா சார்ஜென்ட் திருட்டுத்தனமாக அனுமதி இல்லாமல் ஆணுறையை அகற்றுவது தொடர்பாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, இந்த மசோதா, கர்ப்பம் அடைதல் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளிலிருந்து தனிநபரைத் தடுக்கும் நோக்கம் கொண்ட ஆணுறைகள் அல்லது எந்த உடல் சாதனத்தையும் அகற்றுவதற்கு முன்னதாக துணையின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.