Advertisment

100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன?

இந்திய துணைக் கண்டத்தில் இருந்து அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன?

தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் கலந்து கொண்ட 4,000-க்கும் மேற்பட்ட மக்களை  அடையாளம் காணவும், கொரோனா வைரஸ் பரிசோதினை செய்யவும்  இருபதுக்கும் அதிகமான மாநில அரசுகள்  கவனம் செலுத்தி வருகின்றன.

Advertisment

நிஜாமுதீன் மாநாடு: 4000 பேரை அடையாளம் காண்பதில் 20 மாநில அரசுகள் மும்முரம்

தப்லிக்- ஈ- ஜமாஅத் என்றால் என்ன? தப்லிக்- ஈ- ஜமாஅத், என்பதற்கு நம்பிக்கையை பரப்பும்  சமூகம் என்று பொருள். இது சன்னி இஸ்லாத்தின் மிஷனரி இயக்கமாகும். மதமாற்றத்தில் நம்பிக்கை கொண்ட இந்த  இயக்கம், அன்றாட இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹனாஃபி பள்ளி பின்பற்றும் தியோபண்டி மரபுகளே இந்த இயக்கத்தின் அடிப்படைகளாக உள்ளன. 1927 ஆம் ஆண்டில்  தியோபண்டி மதகுருவும், இஸ்லாமிய அறிஞருமான மவுலானா முஹம்மது இலியாஸ் காந்தலாவ், இந்த இயக்கத்தைத்  தொடங்கினார். மதமாற்றத்தில் நாட்டம் கொண்ட இந்து சமய இயக்கங்களும் இந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டன.

1920களின் நடுப்பகுதியில் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள மஜாஹருல் உலூம் என்ற பள்ளியில் இலியாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது,கல்வி மற்றும் ​பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெரும்பாலான இஸ்லாமிய மியோ விவசாயிகள், இந்து மரபுகளை பின்பற்றி வந்தனர். முஹம்மது இலியாஸ் இந்த மியோ விவசாயிகளை மீண்டும் பாரம்பரிய இஸ்லாத்தின் மடிக்குள் கொண்டுவரத் தொடங்கினார்.

அவர் தியோபந்த், சஹரன்பூர் போன்ற பகுதிகளை சேர்ந்த பல இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, மேவாட் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்தார்.

இந்த அமைப்பு எவ்வளவு பிராலமனது?

தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்பு தொடங்கப்பட்ட இரண்டு தசாப்தங்களில் மேவாட் பிராந்தியத்திற்கு அப்பால் பரவியது. 1941 இல் நடைபெற்ற, இதன் முதல் மாநாட்டில், வட இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

1947 இல் பிரிவினைக்குப் பிறகு,பாகிஸ்தானின் லாகூர் பிராந்தியத்தில் இருக்கும் ரைவிந்த் என்ற நகரில் அதன் மற்றொரு அத்தியாயம் தொடங்கப்பட்டது. பங்களாதேஷில் தற்போது, ​​மிகப்பெரிய தளங்களை இந்த அமைப்பு கொண்டுள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் இருந்து அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பின் இருத்தல் உள்ளன.

இது இஸ்லாத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது?

ஆறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகிறது .

முதலாவதாக, கலிமா : அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, நபிகள் நாயகம் இறைவனின் தூதர்

இரண்டாவதாக, சலாத் :  தினமும் ஐந்து முறை பிரார்த்தனை.

மூன்றாவதாக இல்ம் மற்றும் திக்ர் - சபை அமர்வுகளின் போது இமாம் போதிக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அறிவு.  குர்ஆனை ஓதுவது, ஹதீஸ்களைப் படிப்பது; சபை அமர்வில் அனைவரும் ஒன்றாக உணவருந்தவது மூலமாக  அல்லாஹ்வை நினைவு கூறுவது

நான்காவதாக, இக்ரம்-இ-முஸ்லீம் : சக இஸ்லாமியர்களை மரியாதையுடன் நடத்துதல்.

ஐந்தாவதாக, இக்லாஸ்-இ-நிய்யத்: இலக்கை நேர்மையுடன் நிறைவேற்றுவது.

ஆறாவதாக  தாவத்-ஓ-தப்லீக்: மதமாற்றத்தில் நம்பிக்கை கொள்வது.

கூட்டத்தில் என்ன நடக்கும்?

காலை 8 மணி முதல் 11 மணி வரை, வந்திருக்கும் அனைத்து மக்களும் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுகிறது. பிறகு, ஒவ்வொரு குழுவிற்கும், வயதில் முன்னுரிமை அடிப்படையில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். மாலை 3 முதல் 5 மணி வரை, புதியவர்களுக்கு இஸ்லாம் குறித்த புரிதல்  விளக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, குர்ஆனின் வரிகள் வாசிக்கப்படுகின்றன. குறிப்பாக, நபிகள் நாயகம் குறித்த வரிகள் விளக்கப்படுகின்றன.

தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்பின் கட்டமைப்பு என்ன?

வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு என்று எதுவும் இல்லை.  ஆரம்பத்தில், அமைப்பின் மையமாக கருதப்படும் ஷூரா சபைக்கு தலைமை தாங்கும், ஆல்மி இஜ்திமா (சர்வதேச சபைகள்) போன்ற முக்கிய விஷயங்களை கையாளும் அமீரின் தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.

மூன்றாவது அமீர் (1965-95) மவுலானா இனாமுல் ஹசன் காந்த்லாவி இறந்த பிறகு, அமீர் பதவி ரத்து செய்யப்பட்டது.  அதற்குப் பதிலாக ஆல்மி ஷுரா (சர்வதேச ஆலோசனைக் குழு) நியமிக்கப்பட்டது. 2015 இல் ஜுபைர் உல் ஹசன் காந்த்லாவி இறந்த பிறகு, இயக்கத்திற்குள் பிரிவினை பிரச்சனை எழுந்தது.

இந்த பிரிவினைகள் பற்றி? இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்  இதன் பிரிவுகள் உள்ளன. "நிஜாமுதீன் பிரிவு" மவுலானா முஹம்மது இலியாஸின் கொள்ளுப் பேரனான மவுலானா சாத் காந்தல்வி தலைமையில் இயங்கிவருகிறது. அதே, நேரத்தில் பாகிஸ்தானின் ரைவிந் நகரில் இதன் போட்டி பிரிவு இயங்கி வருகிறது. வங்கதேச நாட்டில் டோங்கி நகரில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வருடாந்திரம் கூடும் ஆல்மி இஜ்திமாவை (சமயம் சார்ந்த கூட்டம்)  நடத்தும் மற்றொரு பிரிவும்  உள்ளது. இந்த ஆண்டு இஜ்தாமாவின்,முதல் கட்டம், ஜனவரி 12 ஆம் தேதி டோங்கி பிரிவினர் தொடங்கினார்.  இரண்டாம் கட்டத்தை ஜனவரி 17 ஆம் தேதி நிஜாமுதீன் பிரிவினர் நடத்தினர்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment