15 ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்ட விரும்பினார்,
அதற்காக அவர் லிங்கம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக காசிக்குச் சென்றார். திரும்பி வரும்போது, ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நின்றார். அப்போது, அவர் தனது பயணத்தைத் தொடர முயன்றபோது, லிங்கத்தைச் சுமந்த பசு அங்கிருந்து நகர மறுத்தது.
பராக்கிரம பாண்டியர் இதை இறைவனின் விருப்பம் என்று புரிந்துகொண்டு, சிவகாசி என்று அழைக்கப்படும் அந்த லிங்கத்தை அங்கே நிறுவினார்.
தொடர்ந்து, காசிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக, பாண்டியர்கள் காசி விஸ்வநாதர் கோயிலை இன்றைய தமிழ்நாடு-கேரள எல்லையான தென்மேற்கு தமிழ்நாட்டின் தென்காசியில் கட்டினர்.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவுகளின் வரலாறு என்ன?
காசிக்கும் தமிழ் பகுதிக்கும் உள்ள தொடர்பு ஆழமானது மற்றும் பழமையானது என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையின் டாக்டர் வினய் குமார் கூறினார்.
இது குறித்து அவர், “மற்றொரு மன்னன், அதிவீரராம பாண்டியன், காசிக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் தென்காசியில் மற்றொரு சிவன் கோயிலைக் கட்டினார்” என்றார்.
மேலும், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்த் குமார குருபரர், வாரணாசியில் கேதார்காட் மற்றும் விஸ்வேஸ்வரலிங்கம் பிரதிஷ்டை செய்ய இடம் பெறுவதற்காக காசி சமஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசி பற்றிய இலக்கணக் கவிதைகளின் தொகுப்பான காசி கலம்பகம் என்ற நூலையும் அவர் இயற்றினார்” என்றார்.
காசி தமிழ் சங்கமம் என்றால் என்ன?
வாரணாசியில் வியாழன் அன்று தொடங்கும் ஒரு மாத கால காசி தமிழ் சங்கமம், இந்தியாவின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் நாகரீக தொடர்பின் பல அம்சங்களைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.
அப்போது, தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,400 பேர் வாரணாசிக்கு குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவார்கள், அது எட்டு நாட்கள் நடைபெறும். மேலும் அங்கிருந்து அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் செல்வார்கள்.
இந்த விழாவின் இரண்டாவது நோக்கம் வடக்கு மற்றும் தெற்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவது ஆகும். BHU மற்றும் IIT-Madras ஆகியவை இந்த நிகழ்விற்கான அறிவுப் பங்காளிகளாக உள்ளன, மேலும் கலாச்சாரம், சுற்றுலா, இரயில்வே, ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சகங்கள் உத்திரபிரதேச அரசு மற்றும் வாரணாசி நிர்வாகத்துடன் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளன.
சங்கமத்தை முன்மொழிந்த கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதியின் தலைவர் கல்வியாளர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, பண்டைய காலங்களிலிருந்து, தென்னிந்தியாவில் உயர்கல்வி காசிக்குச் செல்லாமல் முழுமையடையாது என்று கூறினார்.
இரண்டு அறிவு மையங்களுக்கும் (காசி மற்றும் காஞ்சி) உள்ள தொடர்பு இலக்கியத்தில் உள்ள ஒத்த கருப்பொருள்களிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் காசி என்ற பெயர் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது” என்று சாஸ்திரி கூறினார்.
தொடர்ந்து காசி நாதர் என்பது தமிழ்நாட்டின் பிரபலமான பெயர் என்றார். மேலும், “தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மட்டுமின்றி, காசி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிவன் கோவில்கள் தமிழகத்தில் உள்ளன” என்றும் சாஸ்திரி சுட்டிக் காட்டினார்.
ராமேஸ்வரத்தில் உள்ளவர்கள் காசிக்கு தரிசனம் செய்வதற்கு முன் கோடி தீர்த்தத்தில் (கோயிலில்) நீராடுவார்கள்; மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அபிசேகத்திற்காக காசியிலிருந்து (கங்கை) நீர் கொண்டு வருவார்கள். காசி மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணம் செய்ய ஆறு மாதங்கள் ஆகும். அந்த நேரத்தில் இது மட்டுமே அவர்களின் புனித யாத்திரையை நிறைவு செய்யும்,” என்றார்.
தொடர்ந்து, பனாரஸ், காஞ்சிபுரத்தில் இருந்து பட்டுப் புடவைகள் மற்றும் ஜவுளி வியாபாரம் செய்யும் வணிகர்கள் மற்றும் கட்டிடக்கலை, சமையல் மற்றும் பிற வகையான தொடர்புகளுக்கு இடையேயான தொடர்பையும் சாஸ்திரி குறிப்பிட்டார்.
பின்னர், “நாங்கள் இதனை வெளிக்கொணர்ந்து மீண்டும் இணைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil