Advertisment

வீரர் ஒருவரின் உயிரை வாங்கிய பயிற்சி; இந்திய ராணுவத்தில் நடத்தப்படும் ரெக்கி பயிற்சி எத்தகையது?

ஆயுதம் தாங்கிய பிரிவு மற்றும் இயந்திரமாக்கப்பட்ட படையின் பட்டாலியனில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடல் தகுதி மற்றும் திறன்களை சோதிக்க இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
Recce, Army Endurance Test, Indian Army, Today news, tamil news, news in Tamil

Man Aman Singh Chhina

Advertisment

ஒரு வாரத்திற்கு முன்பு பதான்கோட் அருகே உள்ள மமும் இராணுவ நிலையத்தில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ப்ஸ் லெவல் ரெக்கி ட்ரூப் போட்டியில் பங்கேற்ற ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டிகளின் நுணுக்கங்கள் மற்றும் அதில் என்ன உள்ளது, இது போன்ற போட்டிகளின் போது உயிரிழப்புகளை தடுக்க இந்திய ராணுவம் வைத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்குகிறது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் ஜவான்கள் என்ன வகையான போட்டியில் பங்கேற்றனர்?

மாமுமை தளமாக கொண்ட இந்திய ராணுவ படைப்பிரிவு ரெக்கீ ட்ரூப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஆயுதம் தாங்கிய மற்றும் இயந்திரப் பிரிவு வீரர்களும் பங்கேற்றனர். இந்த பிரிவு இராணுவத்தின் 9 கார்ப்ஸின் கீழ் வருகிறது, இது இமாச்சலப் பிரதேசத்தின் யோலை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. ரெக்கி துருப்பு ஒரு துணை அலகு. இது ஒவ்வொரு கவச மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவின் ஒரு பகுதியாகும். ஆயுதம் தாங்கிய பிரிவு மற்றும் இயந்திரமாக்கப்பட்ட படையின் பட்டாலியனில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடல் தகுதி மற்றும் திறன்களை சோதிக்க இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

ரெக்கி துருப்பு என்றால் என்ன?

Reconnaissance அல்லது ரெக்கி துருப்பு என்பது உளவு பிரிவாகும். இது ஒவ்வொரு ஆயுதம் தாங்கிய படைப்பிரிவு மற்றும் இயந்திரமாக்கப்பட்ட காலாட்படை பட்டாலியனின் உள் பிரிவாகும். ஒரு பிரிவு என்பது ஒரு அலுவலர் மற்றும் 30 வீரர்களை உள்ளடக்கியது. ரெக்கி துருப்பு ரெசிஸ் ட்ரூப் யூனிட்டின் கண்கள் மற்றும் காதுகளாகவும், உயர் அமைப்புகளாகவும் இருக்க வேண்டும், ஒரு போரில், அவை முக்கிய படைப்பிரிவுக்கு முன்னால் செயல்பட வேண்டும் மற்றும் எதிர்களின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும். இந்த துருப்பு இலகுரக வாகனங்களில், ஆயுதம் ஏந்தி எதிர்களின் படைகளை கண்காணிக்கும். ரெக்கி துருப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வீரர்கள் இந்த பிரிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் மற்றும் மிகவும் பாதகமான சூழ்நிலைகளில் செயல்பட வேண்டும்.

ரெக்கி துருப்பு போட்டிகள் என்றால் உண்மையில் என்ன?

இது ராணுவத்தினரின் உட்பிரினருக்குள் நடத்தப்படும் போட்டியாகும். இதில் அந்தந்த பிரிவுகளின் ரெக்கி துருப்புகள் தங்களின் திறமைகளை நிரூபிக்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். வரைபடங்களை குறிப்பது, எதிரியின் எல்லையில் மேம்பட்ட இடத்தில் இருக்கும் ஹெலிபேடை குறிப்பது, எதிர்களின் வளங்களை கண்டறிதல் மற்றும் அடையாளம் காணுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கூறுகிறார் இதற்கு முன்பு இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யாஷ் மோர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், எதிரி நாட்டினரின் தாய்மொழிகளில் எழுதப்பட்ட அடையாள பலகைகளை படித்தல் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல் சகிப்புத்தன்மை ஆகியவை சோதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மாமுன் ராணுவ நிலையத்தில் நடைபெற்ற போட்டியில் 11 அலுவலர்கள் மற்றும் 11 ஜே.சி.ஓக்கள் மற்றும் 120 ஜவான்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் சகிப்பு தன்மை சோதனையும் இருக்கவே, அதில் பங்கேற்ற சிலருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டது.

இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு தீவிர வானிலை குறித்து ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளதா?

நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில் கட்டளை மட்டத்தில் வானிலை தொடர்பான கட்டுப்பாடுகள் வழங்கப்படுகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் வழங்கிய மருத்துவ ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் உடல் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் அதிகபட்சமாக பின்பற்றப்பட வேண்டும். போட்டி நடைபெறும் நேரத்தில் இருக்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை நெருக்கமாக மேற்பார்வையிடப்பட வேண்டும் என்பது அறிவுறுத்தல்களில் ஒன்றாகும். மிகவும் வெப்பமான நாட்களில் இது போன்ற போட்டிகள் பின் காலை நேரத்திற்கு பதிலாக அதிகாலையிலேயே திட்டமிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற நேரங்களில் பயிற்சியில் ஈட்படும் போது நிலைமை மோசமடைந்து சிறந்த வீரர்களை இழக்க நேரிடும் என்று மேஜர் ஜெனரல் யாஷ் கூறினார்.

இந்த போட்டியின் போது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் வீரர்களின் நிலை என்ன?

பெரும்பான்மையான வீரர்கள் முதலுதவி பெற்ற உடன், பதான்கோட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உயிரிழக்க, இரண்டு பேர் நிலைமை மோசமாக உள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment