சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, கேமரா மூலம் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிந்து வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசல், 97 சதவிகிதம் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலித்தாலும் பயணிகளை தொடர்ந்து பாதிக்கிறது. இந்த பார்வையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இப்போது சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக, தானியங்கி வாகன நம்பர் பிளேட்களை படிக்கும் (ஏ.என்.பி.ஆர்)கேமராக்கள் எனப்படும் வாகன பதிவு எண் பலகைகளை பதிவு செய்யும் கேமராக்களைக் கொண்டு வரும் திட்டத்துக்கு நகர்ந்து வருகிறது.
சுங்கச்சாவடிகளுக்கான புதிய திட்டம் என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஏ.என்.பி.ஆர் கேமராக்களை நம்பியிருப்பது, வாகனத்தின் நம்பர் பிளேட்களைப் படித்து, வாகன உரிமையாளர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து தானாகவே கட்டணத்தைக் கழிக்கும் திட்டம் இது.
இந்த முறை எளிமையானது: சுங்கச் சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பொருத்தப்படும் கேமராக்கள் நம்பர் பிளேட்களைப் படிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இந்த கேமராக்களின் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
எல்லா நம்பர் பிளேட்களையும் கேமராக்களால் படிக்க முடியுமா?
இந்த கேமராக்களால் இந்தியாவில் உள்ள அனைத்து நம்பர் பிளேட்களையும் படிக்க முடியாது. ஆனல், 2019 க்குப் பிறகு வந்த வாகனங்களின் நம்பர் பிளேட்களை மட்டுமே கேமராக்களால் பதிவு செய்யப்படும்.
அரசாங்கம், 2019 ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்களில் நிறுவனம் பொருத்திய நம்பர் பிளேட்களை கட்டாயம் வைத்திருக்கும் விதியை கொண்டு வந்தது. மேலும், இந்த நம்பர் பிளேட்களை மட்டுமே கேமராக்கள் மூலம் படிக்க முடியும். பழைய நம்பர் பிளேட்டுகளை மாற்றும் திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சோதனைத் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை எளிதாக்குவதற்கான சட்டத் திருத்தங்களும் சுங்கச் சாவடிகளைத் தவிர்த்துவிட்டு பணம் செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்த்தப்படுகிறது.
இந்திய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிப்பதற்கான முறை என்ன?
தற்போது கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி மொத்த சுங்க வரி வசூலில் சுமார் 97 சதவீதம் ஃபாஸ்டேக்குகள் மூலம் நடக்கிறது - மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே ஃபாஸ்டேக் பயன்படுத்தாததற்காக சாதாரண சுங்க கட்டணங்களை விட அதிகமாக செலுத்துகின்றனர்.
ஃபாஸ்டேக்குகள் மூலம், ஒரு சுங்கச் சாவடியைக் கடக்க ஒரு வாகனத்திற்கு சுமார் 47 வினாடிகள் ஆகும். குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடு உள்ளது - அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கைகளில் சுங்கவரி வசூலிக்கும்போது அந்த சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் சென்றதுடன் ஒப்பிடும்போது மின்னணு கட்டண வசூல் செய்யப்படும்போது அந்த சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு 260 க்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது.
ஃபாஸ்டேக்குகள் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்தை எளிதாக்கியிருந்தாலும், அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, சுங்கச் சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதால், நெரிசல் இன்னும் அப்படியே உள்ளது. நெரிசலைக் குறைக்க ஏ.என்.பி.ஆர் கேமராக்களின் உதவியை நாடுவதோடு மட்டுமல்லாமல், ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தையும் சுங்கவரி வசூலிப்பதற்கான விருப்பங்களில் ஒன்றாக அரசாங்கம் பார்க்கிறது.
ஏ.என்.பி.ஆர் கேமராக்களில் பிரச்னை உள்ளதா?
ஏ.என்.பி.ஆர் கேமராக்களின் வெற்றியானது, கேமராவின் தேவைகளுடன் ஒத்திசைக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதைப் பொறுத்ததாக இருக்கும்.
‘இந்திய அரசு/டெல்லி’ ஒன்பது இலக்கப் பதிவு எண்ணைத் தாண்டி, நம்பர் பிளேட்டுகளில் கடவுள்களின் பெயர்கள் போன்ற விஷயங்களை எழுதுவது சோதனையின் போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை லாரிகளில் நம்பர் பிளேட்களைப் படிப்பதில் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நம்பர்கள் மறைந்திருக்கும் அல்லது அசுத்தமாக இருக்கும்.
ஒரு முக்கிய விரைவுச் சாலையில் சோதனை திட்டத்தில், இதுபோன்ற நம்பர் பிளேட்களைக் கொண்ட சுமார் 10 சதவீத வாகனங்கள் ஏ.என்.பி.ஆர் கேமராக்களால் தவறவிடப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.