கிருஷ்ணா நீர் பிரச்னை என்றால் என்ன? இதில் யார் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்?

the Krishna water dispute: கிருஷ்ணா நதிநீர் பிரச்னை தீர்ப்பாயத்தின் 2010 ஆம் ஆண்டு உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியுள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விண்ணப்பத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கர்நாடகா முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் எதிர்த்துள்ளனர்.

Krishna water dispute, Krishna Water Disputes Tribunal, Karnataka Chief Minister B S Yediyurappa,கிருஷ்ணா நீர் பிரச்னை, ஆந்திரப் பிரதேசம், Maharashtra Chief Minister Devendra Fadnavis, Telangana, Andhra Pradesh
Krishna water dispute, Krishna Water Disputes Tribunal, Karnataka Chief Minister B S Yediyurappa,கிருஷ்ணா நீர் பிரச்னை, ஆந்திரப் பிரதேசம், Maharashtra Chief Minister Devendra Fadnavis, Telangana, Andhra Pradesh

ஓம் மராத்தே, சப் எடிட்டர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,
சட்டம், வெளியுறவுக் கொள்கை மற்றும் பொறியியலில் ஆர்வமுடையவர்

the Krishna water dispute: கிருஷ்ணா நதி நீர் பிரச்னை இந்த வாரம் ஒரு புதிய திருப்பத்தை அடைந்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான கிருஷ்ணா நதிநீர் பிரச்னை தீர்ப்பாயத்தின் 2010 ஆம் ஆண்டு உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியுள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விண்ணப்பத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கர்நாடகா முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் எதிர்த்துள்ளனர்.

கிருஷ்ணா நதிநீர் பிரச்னை என்றால் என்ன, அதைத் தீர்க்க என்ன செய்யப்பட்டுள்ளது?

கிருஷ்ணா நதி கிழக்குப் பாயும் ஒரு நதியாகும். இது மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரில் தோன்றி வங்களா விரிகுடாவில் கலக்கிறது. கிருஷ்ணா நதி மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக பாய்கிறது. கிருஷ்ணா அதன் துணை நதிகளுடன் சேர்ந்து, இது நான்கு மாநிலங்களின் மொத்த பரப்பளவில் 33% உள்ளடக்கிய ஒரு பரந்த ஆற்றுப் படுகையை உருவாக்குகிறது.

கிருஷ்ணா நதி நீரைப் பகிர்வது தொடர்பான பிரச்னை பல தசாப்தங்களாக நடந்து வருகிறது, இது முந்தைய ஹைதராபாத் மற்றும் மைசூர் மாநிலங்களில் தொடங்கி, பின்னர் உருவான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையேயும் தொடர்கிறது.

1969 ஆம் ஆண்டில், கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயம் (KWDT) 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னை சட்டப்படி அமைக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு அதன் அறிக்கையை முன்வைத்தது. 1976 இல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், 2060 டி.எம்.சி (ஆயிரம் மில்லியன் கன அடி) கிருஷ்ணா நது நீரை 75 சதவீத நம்பகத்தன்மையுடன் மூன்று பகுதிகளாகப் பிரித்தது: மகாராஷ்டிராவுக்கு 560 டி.எம்.சி, கர்நாடகாவிற்கு 700 டி.எம்.சி மற்றும் ஆந்திராவிற்கு 800 டி.எம்.சி என்று பிரித்தது. அதே சமயம், மே 31, 2000 க்குப் பிறகு எந்த நேரத்திலும் கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஒரு திறமையான ஆணையம் அல்லது தீர்ப்பாயத்தால் மதிப்பாய்வு செய்யலாம் அல்லது திருத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதன்பிறகு, மாநிலங்களுக்கு இடையில் புதிய கோரிக்கைகள் எழுந்தபோது, இரண்டாவது கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயம் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டில் தனது அறிக்கையை அளித்தது. இது கிருஷ்ணா நீரை 65 சதவீத நம்பகத்தன்மையிலும் உபரி நீராக மகாராஷ்டிராவுக்கு 81 டி.எம்.சி, கர்நாடகாவுக்கு 177 டி.எம்.சி, ஆந்திராவிற்கு 190 டி.எம்.சி என பகிர்தது.

கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டு அறிக்கைக்குப் பிறகு

2010 ஆம் ஆண்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே, ஆந்திரா 2011-இல் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு மூலம் அதை எதிர்த்தது. அதே ஆண்டில் ஒரு உத்தரவில், உச்ச நீதிமன்றம் அதை மத்திய அரசு அரசிதழில் வெளியிடுவதை நிறுத்தியது.

2013 ஆம் ஆண்டில், கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயம் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதனை 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் எதிர்த்தது. 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் இருந்து தெலங்கானா உருவாக்கப்பட்ட பின்னர், நீர்வள அமைச்சகம் கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயத்தின் காலத்தை நீட்டித்து வருகிறது.

கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயத்தில் தெலங்கானாவை ஒரு தனி கட்சியாக சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணா நீரை ஒதுக்கீடு செய்வது மூன்று மாநிலங்களுக்கு பதிலாக நான்கு மாநிலங்களில் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திரா கேட்டுக் கொண்டுள்ளது. இது ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டம் 2014, பிரிவு 89 ஐ சார்ந்துள்ளது. அவை பின்வருமாறு:

“89. கிருஷ்ணா நீர் பிரச்னை தீர்ப்பாயத்தின் காலம் பின்வரும் குறிப்பு விதிமுறைகளுடன் நீட்டிக்கப்படும், அதாவது:

அ) 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தால் அத்தகைய ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், திட்ட வாரியாக குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்படும்.

(ஆ) தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், திட்ட வாரியாக நீரை திறப்பதற்கான செயல்பாட்டு நெறிமுறை தீர்மானிக்கும்.

விளக்கம்: இந்த பிரிவின் நோக்கங்களுக்காக, நியமிக்கப்பட்ட நாளில் அல்லது அதற்கு முன்னதாக தீர்ப்பாயத்தால் ஏற்கனவே செய்யப்பட்ட குறிப்பிட்ட திட்ட விருதுகள் புதிய மாநிலங்களும் கட்டுப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் இப்போது எதிர்க்கின்றன. செப்டம்பர் 3 ஆம் தேதி, “ஆந்திராவை இரண்டாகப் பிரித்ததைத் தொடர்ந்து தெலங்கானா உருவாக்கப்பட்டது. எனவே, நீர் ஒதுக்கீடு என்பது தீர்ப்பாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆந்திராவின் பங்கிலிருந்து இருக்க வேண்டும். ” இரு மாநிலங்களும் கூறியுள்ளன.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is the krishna water dispute who is who involved

Next Story
சென்னை ‘டூ’ விளாடிவோஸ்டோக் கடற்வழிப் பயணம் – ஒரு பார்வைThe sea route from Chennai to Vladivostok - சென்னை டூ விளாடிவோஸ்டாக் கடற்வழிப் பயணம் - ஒரு பார்வை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com