Advertisment

Explained: ஏன் லோகஸ்ட் வெட்டுக்கிளி பல நாடுகளை அச்சுறுத்துகிறது?

லோகஸ்ட் என்பது குறுகிய கொம்புகள் கொண்ட  ஒரு வகையான வெட்டுக்கிளிகளாகும். ஒரே நாளில் 150 கி.மீ வரை திரளாக செல்லும் தன்மை கொண்டது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
locust attack in pakistan, Locust Emergency

locust attack in pakistan, Locust Emergency

பாகிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகள் வெட்டுக்கிளி அவசரநிலைகளை கடந்த வாரம் பிரகடனப்படுத்தின. மேலும், மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளும் இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளி தாக்குதல்கள் காணப்படுகின்றன.

Advertisment

பாகிஸ்தான் பாலைவனப் பகுதியிலிருந்து வெளிவரும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் இருக்கும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

இதனால், எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன: ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) - ஆப்பிரிக்காவின் கொம்பு ( சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா உள்ளடிகிய தீபகற்பம்), செங்கடல் ( சவுதி அரேபியா, ஓமான் மற்றும் ஏமன் போன்ற நாடுகள்) , தென்மேற்கு ஆசியா ( ஈரான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் )ஆகிய மூன்று இடங்கள் இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு மையப்பகுதியாக உள்ளன என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஆபிரிக்காவின் கொம்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியிருக்கிறது. எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில் கிளம்பிய லோகஸ்ட் வெட்டுக்கிளி தாக்குதல்கள்  பின்பு தெற்கே பயணித்து கென்யா நாட்டின் மூலம் 14 நாடுகளுக்கு பரவியுள்ளன. எத்தியோப்பியாவின் பிளவு பள்ளத்தாக்கும் இந்த வெட்டுக்கிளியால்  பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்  

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எத்தியோப்பியா,சோமாலியா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 70 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கென்யா நாடு  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.

லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு சேதத்தை ஏற்படுத்துகின்றன?

லோகஸ்ட் என்பது குறுகிய கொம்புகள் கொண்ட  ஒரு வகையான வெட்டுக்கிளிகளாகும். ஒரே நாளில் 150 கி.மீ வரை திரளாக செல்லும் தன்மை கொண்டது.

இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தங்கள் பயணிக்கும் வழிகளில் பூக்கள், பழங்கள், விதைகள் போன்றவைகளை விழுங்குகின்றன. மேலும்,  இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் அதிக எண்ணிக்கையில் தாவரங்கள் மீது இறங்குவதால்,  தாவரங்களும் அழிந்துவிடுகின்றது.

இந்தியாவில் நான்கு வகையான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன: பாலைவன வெட்டுக்கிளி (சிஸ்டோசெர்கா கிரேகரியா), இடம்பெயர்ந்த வெட்டுக்கிளி (லோகஸ்டா மைக்ரேட்டோரியா), பாம்பே வெட்டுக்கிளி (நோமடாக்ரிஸ் சுசின்க்டா) மற்றும் மர வெட்டுக்கிளி (அனாக்ரிடியம் எஸ்பி.).

பாலைவன வெட்டுக்கிளி இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் மிகவும் அழிவுகரமான பூச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு சிறிய திரள் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள், ஒரே நாளில் 35,000 மக்கள் உணவும்  உணவை உட்கொள்கிறது.

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment