பிரதம மந்திரியின் சாலையோர கடை நடத்துபவர்களுக்களுக்கான ஆத்மநிர்பார் நிதி திட்டம் ( PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme) கொரோனா தொற்றின் மத்தியில் ஜ்ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு, மிகவும் குறைவான வட்டியில் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கடன் அளிப்பது தான் அந்த திட்டம். இதுவரையில் இந்த திட்டத்தின் கீழ் 31, 64, 367 விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன (சிக்கிம் தவிர்த்து) athil 16,77,027 விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மீதம் 12, 17, 507 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
ஏன் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது?
கொரோனா மற்றும் நாடு தழுவிய ஊரடங்கால் தினக்கூலி செய்பவர்கள் மற்றும் சலையோர கடை உரிமையாளர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அளிக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. நீண்ட காலத்திற்கு , இது அவர்களுக்கு கடன் புள்ளிகளை வழங்கவும், அவர்களின் சமூக - பொருளாதார நிலையை டிஜிட்டல் பதிவாக பெறவும் இலக்கை கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் பிற்காலத்தில் அரசின் மற்ற திட்டங்களில் பயன் அடையலாம். இந்த திட்டம் முறைசாரா தொழில்களின் பொருளாதாரத்தை சீர்படுத்தவும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கவும் கொண்டு வரப்பட்டது.
நிறைய கடை வைத்திருப்பவர்கள் முறைசாரா பொருளாதாரத்தை கொண்டிருப்பவர்கள். பெரும்பாலான நேரங்களில் அதிகப்படியான வட்டிக்கு கடனளிப்பவர்களிடம் பணம் பெறுகின்றனர். ஆனால் இந்த கடன் வசதி 12%க்கும் குறைவாகவே வட்டியை பெறுகிறது. அதே போன்று அவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர்களையும் உருவாக்குகிறது. சரியான நேரத்தில் அவர்கள் கடனை திருப்பி செலுத்தினால் அவர்கள் அதிக கடனை பெற முடியும். அவர்களுக்கான சமூக பொருளாதார நிலை குறித்து டிஜிட்டல் தரவுகள் உருவாக்கப்படும் போது அவர்களால் மத்திய அரசின் 8 முதல் 9 வரையிலான திட்டங்களின் கீழ் கடன்களை பெற முடியும். வறுமையை ஒழிக்க இது உதவும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும்? இதனை எப்படி பெறுவது?
சாலையோர கடை நடத்த சான்று பெற்று யாரெல்லாம் மார்ச் 24, 2020க்கு முன்பு அல்லது பின்னால் இருந்து கடைகள் நடத்துகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்த கடன் கிடைக்கும்.
தெருவோர விற்பனையாளர்கள் சட்டம் 2014ன் படி, டவுன் விற்பனையாளர்கள் குழுக்கள், விற்பனையாளர்கள் குறித்த கணக்கெடுப்பினை நடத்திய பிறகு சான்றிதழ்களை வழங்குவார்கள்.
ஆனால் அன்றில் இருந்து இப்போது வரை பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நிறைய விற்பனையாளர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. ஆனால், இந்த திட்டத்தின் படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் எ.கா. முனிசிபாலிட்டிகள், கடன் வாங்க விரும்பும் விற்பனையாளர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு கணக்கெடுப்பு ஏதும் தேவையில்லை. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பரிந்துரை கடிதம் தரலாம், விற்பனையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக விற்பனையாளார் இருந்தால் அவர் இந்த லோனை பெற முடியும் என்று குமார் கூறியுள்ளார், இந்த பரிந்துரை கடிதங்களுக்கு தேவையான ஆவணங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, இந்த திட்டத்திற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் போர்ட்டலில் அப்லோட் செய்த பிறகு வங்கிகளால் 10 முதல் 15 நாட்களுக்குள் கடன் வழங்கப்படுகிறது.
இந்த லோனை பெறும் போது விற்பனையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
விற்பனையாளர்களிடம் இருந்து இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த போதிலும் கூட பல்வேறு காரணங்களால் இதனை நடைமுறைப்படுத்தும் விதம் தாமதமாகிறது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் 2014 ஆம் ஆண்டின் தெரு விற்பனையாளர்கள் சட்டத்தை சமமற்று நடைமுறைப்படுத்தியுள்ளன, இது விற்பனையாளர்களுக்கு சான்றிதழை வழங்குவதற்கான ஒரு கணக்கெடுப்பு தேவையை உறுதி செய்கிறது.
டெல்லியில் மிகவும் முக்கியான சவால்களாக இருப்பது சான்றிதழ் வழங்குவது தான். இதற்கு முன்பு விற்பனையாளர்களை வெளியேற்றிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட டெல்லி, டெல்லி அரசு 2016ம் ஆண்டு விதித்த விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விற்பனையாளர்கள் சர்வேவும் நடத்தி முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக நிறைய விற்பனையாளர்கள் பரிந்துரை கடிதங்களுக்கு விண்ணப்பம் செய்வார்கள். அளவுக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுவதால் இது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பினையும் வழங்கும்.
சில முனிசிபாலிட்டிகள் தற்போது தான் இது போன்ற சான்றுகளை மெதுவாக வழங்கி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையார்கள் சான்றிதழுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடும். நகர்புற ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் இடத்திற்கு இடம் மாறுபடும் வகையில் உள்ளது. பரிந்துரைக் கடிதங்கள் வழங்குவதில் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேசன் மிகவும் தாமதமாக செயல்படும் என்று குறிப்பிட்டார்.
கமலா நகரில் தொழில் நடத்தி வரும் ப்ரேம் பால், பரிந்துரை கடிதங்கள் அடிக்கடி நிராகரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். அவருடைய பரிந்துரை கடிதத்திற்கான விண்ணங்கள் சில முறைகள் நிகாரிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். பிறகு விற்பனையாளர் சங்கத்தில் இருக்கும் ஒரு நபரின் உதவியுடன் விண்ணபித்ததாகவும் பிறகு அவருக்கு வங்கி லோன் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
இரண்டாவது பிரச்சனை என்னவென்றால் அவர்களுடைய அலைபேசி எண்கள் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டிருக்காது. இதனை சரி செய்ய தற்போது ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டன. பல விற்பனை சங்கங்களும் இவ்வாறு முகாம்கள் நடத்தி பிரச்சனைகளை குறைத்துள்ளன.
மற்றொரு பிரச்சனை விற்பனையாளர்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு இருக்கும் அபிப்ராயம்.
டெல்லியில், கடன்களைப் பெற்ற பல்வேறு விற்பனையாளர்கள் பெரும்பாலும் காவல்துறையினரால் அல்லது யுஎல்பி அதிகாரிகளால் தங்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள், அவர்களின் ஒரே வருமான ஆதாரத்தையும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் தாக்குகிறார்கள். உதாரணமாக, டெல்லியில் ரோஹினியில் தொழில் நடத்தும் கன்ஹையா (48), பொதுமுடக்கத்திற்கு பிறகு யுஎல்பி அதிகாரிகளும் கோயில் அதிகாரிகளும் கடை வைக்க அனுமதி தராததால் அவர் தன்னுடைய கடையை கோவிலுக்கு வெளியே வைக்க இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் படி நகரம் ஒரு நகர விற்பனைக் குழு கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால், இந்தத் திட்டம் விண்ணப்பதாரர்களை விற்பனை செய்வதை நியாயப்படுத்துகிறதா?
"நகர்புற உள்ளாட்சியால் ஒரு எல்.ஓ.ஆர் வழங்கப்பட்டவுடன், அந்த ஆணை ஒரு மாதம் நீடிக்கும். அதன் பிறகு விற்பனைச் சான்றிதழை வழங்குவதற்கான கணக்கெடுப்பு உள்ளாட்சி அதிகாரிகிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது ஒரு மாநில அதிகாரம் என்பதால், அவ்வாறு செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி மட்டுமே மத்திய அரசால் மாநில அரசுகளை வழிநடத்தவோ அல்லது உணர்த்தவோ முடியும், மேலும் கடனைப் பெற்ற ஆனால் சான்றிதழ் இல்லாத விற்பனையாளர்களை வெளியேற்றக்கூடாது.
வட டெல்லி மாநகராட்சியின் கீழ் வரும் கரோல் பாக் மண்டலத்தின் துணை ஆணையர் ராஜேஷ் கோயல் கூறுகையில், “யுஎல்பி வழங்கிய எல்.ஓ.ஆர் கள் விற்பனைக்கு எந்தவொரு சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் உரிமைகளையும் வழங்கவில்லை, ஏனெனில் இது அந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.”
இத்திட்டத்தை செயல்படுத்தும்போது பெருநகர நகரங்களும் மாநிலங்களும் எவ்வாறு தரவரிசைப்படுத்துகின்றன?
"தற்போது, அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் (50,000 க்கும் அதிகமானவை) மற்றும் தள்ளுபடி விகிதங்கள் ஹைதராபாத்தில் உள்ளன. அந்த வரிசையில் பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்கள் அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ளன”என்றார் குமார். "மேற்கு வங்கம் இப்போது இந்த திட்டத்தை அறிவித்துள்ளது" . தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் உள்ளன, அவை தொற்றுநோய்க்கு முன்பாகவோ அல்லது கடந்த சில மாதங்களாகவோ விற்பனை சான்றிதழ்களை வழங்கியுள்ளன என்று குமார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.