நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட6,746 ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் 5,231 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இது ஜனவரி 01, 2021 நிலவரப்படியான தகவல் ஆகும்.
22.45 சதவீதம் அதாவது 1,515 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுஷில் குமார் மோடி தலைமையிலான பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு 112ஆவது அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச கேட்ரேவில் 104 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 94 பிகார் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உள்ளனர். அருணாசலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 87 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை புதிய டிரெண்டா?
இல்லை. சார்ட்டில் காட்டப்பட்டுள்ளது போல், 1951 ஆம் ஆண்டில் 957 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 336 பேர் இந்தியன் சிவில் சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 1,232 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் 275 அதிகாரிகளுக்கான பற்றாக்குறை இருந்தது. இது 22.32 சதவீதம் குறைவாகும்.
2001ஆம் ஆண்டிலிருந்து அதிகாரிகளின் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் 19 சதவீத காலிப்பணியிடங்கள் பொதுவாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இது 22.58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்படும் முறை என்ன?
தொடர்புடைய கேடர் விதிகளின் கீழ் அகில இந்திய சேவைகளின் ஒவ்வொரு கேடருக்கும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை கேடர் மதிப்பாய்வு செய்வதற்கான ஏற்பாடு உள்ளது.
கேடர் ரிவியூ கமிட்டி (சிஆர்சி) கேபினட் செயலாளரின் தலைமையில், செயலாளர் டிஓபிடி, செயலாளர் செலவு, செயலாளர் நிர்வாக அமைச்சகம் (ஐ.ஏ.எஸ். தவிர மற்ற சேவைகளுக்கு), மற்றும் கேள்விக்குரிய சேவை/கேடரில் உள்ள மூத்த உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கேடர் மறுஆய்வு ஒரு தொடர் செயல்முறையாகும், மேலும் சில மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
உதாரணத்துக்கு, 2020-21 ஆம் ஆண்டில், உ.பி. மற்றும் பீகார் மற்றும் மணிப்பூரில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பைத் திருத்த முடிவு செய்யப்பட்டது. எனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது.
"மத்திய மற்றும் மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவம் மூலம் நிரப்ப முடியும், அங்கு பிரதிநிதிகளின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும்" என்று குழு பரிந்துரைத்தது.
இருப்பினும், சுஷில் மோடி தலைமையிலான நாடாளுமன்றக் குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “அதிகாரிகள் பற்றாக்குறை, ஒருவேளை, கேடர் அல்லாத அதிகாரிகளை கேடர் பதவிகளுக்கு நியமிப்பது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி அத்தகைய பதவிகளில் அவர்களைத் தொடர்வது போன்ற வழிகளில் மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது.
எனவே, இந்திய நிர்வாகத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சேர்க்கையை கணிசமாக அதிகரிக்க DoPTக்கு கமிட்டி பரிந்துரைக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எப்படி பணியமர்த்தப்படுகிறார்கள்?
ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு (CSE) மூலம் நேரடி ஆட்சேர்ப்புகள் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; ஆட்சேர்ப்பு எண்ணிக்கை பல காரணிகளை கணக்கில் எடுத்து ஒரு குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.
2012 முதல், ஒவ்வொரு ஆண்டும் 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் CSE மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜிதேந்திர சிங் புதன்கிழமை மக்களவையில், CSE-2022 முதல் 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சேர்க்கையை தீர்மானிக்க பொருத்தமான ஃபார்முலாவை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சில அதிகாரிகள் மாநில சிவில் சர்வீசஸ் (SCS) இல் இருந்து பதவி உயர்வு பெறுகிறார்கள்.
மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் SCS அல்லாத அதிகாரிகளிடமிருந்து பதவி உயர்வு பெறுகிறார்கள். அரசுப் பணிகளில் இருந்து காலிப் பணியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயலாகும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மாநில அரசுகளுடன் தேர்வுக் குழு கூட்டங்களை நடத்துகிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பலதரப்பட்ட உயர்மட்டப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மாநிலங்களில், அவர்களின் பணி வருவாய் சேகரிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
அவர்கள் வருவாய் விவகாரங்களில் நிர்வாக நீதிபதிகளாகவும், வளர்ச்சி ஆணையர்களாகவும் செயல்படுகிறார்கள்.
அவர்கள் பொது நிதியை செலவழிப்பதை மேற்பார்வை செய்கிறார்கள் மற்றும் உயர் மட்டத்தில், அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுப்பதில் பங்களிக்கின்றனர்.
அவர்கள் பிரதிநிதித்துவத்தின் கீழ் மத்திய அரசுக்கு சேவை செய்கிறார்கள். மாநில அரசுகள் சில சமயங்களில் ஐஏஎஸ்/ஐபிஎஸ்/இந்திய வனத் துறை பணி அதிகாரிகளை அதிகாரிகள் பற்றாக்குறை எனக் கூறி மத்திய அரசுக்கு அனுப்ப மறுத்துள்ளன.
போரால் அல்ல! பஞ்சத்தால் இலங்கையில் இருந்து புலம் பெயரும் அப்பாவி மக்கள்…
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மத்தியப் பிரதிநிதித்துவத்தில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ். (கேடர்) விதிகளில் திருத்தங்களை சமீபத்தில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் “மத்திய அரசிற்கு தேவையான ஐ.ஏ.எஸ். பிரதிநிதிகளை மாநில அரசுகள் அமைக்கவில்லை" என்று கூறினார்.
Written by Shyamlal Yadav
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.