Chennai Super Kings Tamil News: கடந்த சனிக்கிழமை தொடங்கிய முதல் நாள் ஐபிஎல் மெகா ஏலம், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு சற்று பின்னடைவாகவே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை அந்த அணி மீண்டும் அணியில் இணைக்க ரூ. 14 கோடி வரை செலவிடும் நிலை ஏற்பட்டது. இது அணிக்கு சற்று கவலையை ஏற்படுத்தியது என தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் ஒப்புக்கொள்கிறார்.
மெகா ஏலம் என்பது ஒரு வலுவான அணியை கட்டமைப்பதும், உருவாக்குவதும் பற்றியது தான் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு சொல்ல தேவையில்லை.
ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய சென்னை அணி, ஞாயிற்று கிழமை நடந்த 2ம் நாள் ஏலத்தில் அணியை வலுவான அணியாக உருவாக்குவதற்கான திட்டத்தை ஒழுங்கமைத்தது. அதிகபட்ச அணி வரம்பாக அந்த அணி 25 வீரர்களை வாங்கியது. இதனால், ஏலத்தில் இருந்து மிகவும் சமநிலையான அணியாக மாறியது. இந்த வீரர்களில் சிலர் அனுபவம் வாய்ந்த வீரர்களாகவும், பலர் இளம் வீரர்களாகவும் இருந்தனர்.
சிஎஸ்கே அணிக்கு உறுதி சேர்த்தது எது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் நீண்ட வரிசையை கொண்ட வீரர்கள் பட்டியலை கொண்டுள்ளது. மேலும், எல்லா இடத்திற்கும் சரியான ஒரு மாற்று வீரரையும் கைவசம் வைத்துள்ளது. உதாரணமாக, சிஎஸ்கே அணியால் ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட வீரர், முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னரை அந்த அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. அவருக்கு சர்வதேச கிரிக்கெட் தொடரில் நல்ல அனுபவம் உள்ளது.
இதேபோல், சிஎஸ்கே அணி ஏலத்தில் ஷிவம் துபேவை ரூ. 4 கோடிக்கு எடுத்தது. அதே நேரத்தில், துபேயுடன் மும்பை ரஞ்சி அணியில் விளையாடும் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டேவை ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது.
“ஒவ்வொரு ஸ்லாட்டிற்கும் பேக்-அப்களைக் கொண்டிருக்கும் ஒரு அணியை நாங்கள் விரும்புகிறோம். அனைத்து வீரர்களும் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், அவர்கள் ஐபிஎல்-க்கு வரும்போது, சில காயம் கவலைகள் இருக்கலாம். எனவே, ஒவ்வொரு வீரருக்கும் எங்களிடம் பேக்-அப்கள் இருப்பதை உறுதிசெய்ய விரும்பினோம். நாங்கள் 25 வீரர்களை ஏலத்தில் வாங்க இதுவும் ஒரு காரணம்” என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எது சரியான சமநிலையை அளிக்கிறது?
சென்னை அணியில் ஜடேஜா, சாஹர், சான்ட்னர், துபே, மொயின் அலி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் என 8 ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இது அந்த அணிக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்க முதுகெலும்பாக இருக்கும்.
தவிர அணியின் கேப்டனுக்கு பேட்டிங் வரிசையை நெகிழ்வானதாக மாற்றுவது முதல், வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது வரை என அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கும். ஏனென்றால், இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே, வீரர்களை அதே ஃபார்முடனும், அதே உத்வேகத்துடனும் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
"அதைத்தான் நாங்களும் வலியுறுத்தினோம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் கூற்றுப்படி, ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பங்கு இருக்கும்" என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சாஹருக்கு ஏன் அதிக விலை கொடுத்தது சிஎஸ்கே?
சிஎஸ்கே டீம் மேனேஜ்மென்ட் தீபக் சாஹரை சக்கரத்தில் உள்ள அச்சாணியாக பார்க்கிறது. அச்சாணி முறிந்து போனால் வண்டி கவிழ்ந்துவிடும். உண்மையில், சாஹர் மிச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர்களில் ஒருவராக முன்னேற்றம் அடைந்துள்ளார். அவர் விளையாடிய கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில், தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி இருந்தார்.
“எம்எஸ் (தோனி) அவரை பவர்பிளேயில் பயன்படுத்தும் விதம், அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர். மேலும், அவர் இந்தியாவுக்காக விளையாடி லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது மதிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எனவே நாங்கள் அவரைப் பெற விரும்பினோம், ”என்று விஸ்வநாதன் விரிவாகக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் தேர்வு குழுவுக்கு ஏலத்தில் விளிம்பின் நுனியை கொடுத்ததா?
சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த சில உள்நாட்டு வீரர்கள் இந்திய கிரிக்கெட்டின் பின்னணியை கொண்டவர்கள். உதாரணமாக, ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்ட சுப்ரான்ஷு சேனாபதி, ஒடிசாவைச் சேர்ந்த சிறந்த முதல்தர மற்றும் ஒயிட்-பால் உள்நாட்டு கிரிக்கெட் அனுபவத்தைக் கொண்ட ஒரு பேட்ஸ்மேன்.
ஊட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் சி ஹரி நிஷாந்த் (ரூ. 20 லட்சம்), இடது கை தொடக்க பேட்ஸ்மேன். ஓரிரு சீசன்களுக்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் அசத்தி வருகிறார். இதேபோல், இளம் வீரர் முகேஷ் சவுத்ரி இடது கை நடுத்தர வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவர் ராஜஸ்தானின் பில்வாராவைச் சேர்ந்தவர்.
சிஎஸ்கே அணி அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் நிர்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தேர்வு குழுவின் பார்வையோ உள்நாட்டு கிரிக்கெட் முதல் கிளப் அணி வீரர்கள் வரை நீண்டுள்ளது. சிஎஸ்கேவின் தாய் நிறுவனமான "இந்தியா சிமெண்ட்ஸ்" தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லீக்கில் 15 கிளப் அணிகளைக் கொண்டுள்ளது.
"எங்களிடம் நல்ல தேர்வு குழு உள்ளது. இது உள்நாட்டு திறமைகளை அடையாளம் காண உதவுகிறது. அந்த வீரர்களில் சிலரை நாங்கள் எங்கள் கிளப்புகளுக்கு கெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக அழைத்து வருகிறோம் (அந்த கிளப் அணிக்காக விளையாடுவது). அதனால் அவர்களை நாங்கள் ஆண்டு முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள், அவர்களால் அணிக்கு எப்படி பங்களிக்க முடியும். ஆனால், அவர்களை தேர்வு செய்வதில் கேப்டனும் பயிற்சியாளரும் மட்டுமே இறுதி முடிவை எடுக்கிறார்கள்” என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.
எப்போதும் விளையாட தயாராக இருக்கும் வீரர்கள் கிடைப்பது சிஎஸ்கே அணியின் ஏல உத்தியை எவ்வாறு பாதித்தது?
கடந்த இரண்டு சீசன்களில், வீரர்கள் வெளியேறியதால் அல்லது முழு சீசனில் விளையாட நிலை ஏற்பட்டதால் அணி பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் இந்த நேரத்தில் எப்போதும் விளையாட தயாராக இருக்கும் வீரர்கள் பற்றி மிகவும் விழிப்புடன் இருந்தனர். டெவோன் கான்வே, ஆடம் மில்னே மற்றும் சான்ட்னர் போன்ற நியூசிலாந்து வீரர்களை சென்னை அணி வாங்கியது. அவர்கள் உள்நாட்டுப் சீசனை முடித்துவிட்டு ஐபிஎல்-க்கு வரும் வீரர்கள். இரண்டு இங்கிலாந்து வீரர்கள், மொயீன் மற்றும் ஜோர்டான், டெஸ்டில் இடம்பெறவில்லை மற்றும் இங்கிலாந்தில் ஓயிட்-பால் கிரிக்கெட் சர்வதேச போட்டிகள் தொடங்கும் நேரத்தில், ஐபிஎல் முடிந்துவிடும்.
"வீரர்களின் பட்டியலில் உள்ளதை நாங்கள் சரிபார்த்தோம், மேலும் சீசன் முழுவதும் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள் என்று நினைத்தோம்" என்று சிஎஸ்கே தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
சிஎஸ்கே, அணியில் இருந்த காலி இடத்தை நிரப்ப நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதா?
சென்னை அணியில் முறையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை மற்றும் கடந்த இரண்டு சீசன்களில் டெத் ஓவர்களில் வீசும் பந்துவீச்சளர்கள் இல்லாததால் அவதிப்பட்டது. மில்னே (ரூ. 1.9 கோடி), ஜோர்டான் (ரூ. 3.6 கோடி) இடம் பெற்றிருப்பது வெற்றிடத்தை நிரப்பலாம் என விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே "மிஸ்" செய்யுமா?
கடந்த சீசனின் முடிவில் நடந்த சில ஆட்டங்களில், ராபின் உத்தப்பாவுக்காக ரெய்னா நீக்கப்பட்டார். இது அடுத்த சீசனில் ரெய்னாவை அந்த அணி முற்றிலும் கழற்றி விடும் என சந்தேகத்தை எழுப்பியது. இந்த ஏலம், ரெய்னா சென்னை அணியால் வாங்கப்படாமல் போனதை உறுதி செய்தது.
ரெய்னா சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர். அவரது பங்களிப்பை அணியில் உள்ள ஒவ்வொருவரும் பெரிதும் மதிக்கிறார்கள். ஆனால், இது கடந்து போகும் ஏலமாக இருந்தது.
“கடந்த 12 வருடங்களாக எங்கள் அணியின் முதுகெலும்பாக ரெய்னா இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக (சரியான) மாற்றீட்டைப் பெறுவதற்கு சிறிது நேரம் எடுக்கும், ”என்று விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார்.
தோனி இன்னும் சிஎஸ்கே அணியின் X-காரணமாக இருக்கிறாரா?
தோனி இன்னும் சிஎஸ்கே அணியின் X-காரணமாக இருக்கிறாரா?
தோனிக்கு பிறகான ஒரு வாரிசைப் பற்றி சிஎஸ்கே இன்னும் யோசிக்கவில்லை. தோனி தனது ஓய்வை அறிவிக்கும் பட்சத்தில் அந்த அணி எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அந்த மனிதருக்கு இவ்வளவு மரியாதை. கிரிக்கெட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் தோனி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கடைசி வார்த்தை மிக முக்கியமானது என்று சென்னை அணியின் தலைமை நிர்வாகி கூறுகிறார்.
கடந்த ஆண்டு உத்தப்பாவை கேப்டன் கையாண்டது அவரது கேப்டன்சி எக்ஸ்-காரணிக்கு ஒரு நல்ல குறிப்பு புள்ளியாக இருக்கலாம். உத்தப்பாவின் குறைந்த ஸ்கோர்கள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னணியில் புறக்கணிக்கப்பட்டன, ஏனெனில் தோனி பேட்ஸ்மேனை லோ-ஆடரில் இறங்க அனுமதித்தார்.
ப்ளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் நல்ல ஆடுகளங்களில் நடைபெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். குவாலிஃபையர் 1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த உத்தப்பா, இறுதி ஆட்டத்தில் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் இருந்து ஆட்டத்திற்கு திருப்பு முனையை கொண்டு வந்தார்.
தோனி தனது ஆட்டத்தை தேர்வு செய்து களமிறங்குவாரா?
சென்னை அணி குயின்டன் டி காக் உட்பட சில விக்கெட் கீப்பர்களை ஏலத்தில் எடுத்த விதம், கேப்டன் தோனி சில ஆட்டங்களில் களமிறங்க போவதில்லை என்கிற தோற்றத்தை வெளிப்படுத்தியது. மேலும், அவர் ஆட்டங்களை தேர்வு செய்து களமிறங்க வாய்ப்புள்ளது என்று நினைக்கப்பட்டது.
இதற்கேற்றார் போல், சென்னை அணி நியூசிலாந்து வீரர் கான்வேயை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தொடக்க வீரராக விளையாடும் அவர், அவ்வப்போது கீப்பராகவும் செயல்பட்ட அனுபவம் உடையவர்.
விஸ்வநாதன், “இல்லை, இல்லை, அவர் (தோனி) அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். எந்த சந்தேகமும் இல்லை. ருதுராஜ் (கெய்க்வாட்) உடன் தொடக்க பேட்ஸ்மேனாகவே கான்வே களமிறங்குவார். அணியில் ஃபாஃப் (டு பிளெசிஸ்) இல்லை, அவருக்குப் பதிலாக கான்வே விளையாடுவார். 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர் மிகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.