Advertisment

கொரோனா பாதிப்பு: ட்ரம்பிற்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன?

இது கடுமையான பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
What is the treatment plan for President Donald Trump’s Covid-19

President Donald Trump arrives at Walter Reed National Military Medical Center, in Bethesda, Md., Friday, Oct. 2, 2020, on Marine One helicopter after he tested positive for COVID-19. (AP Photo/Jacquelyn Martin)

What is the treatment plan for President Donald Trump’s Covid-19 :  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் வெள்ளிக்கிழமை அன்று தனக்கும் தன்னுடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அறிவித்தார். வைரஸ் பரவலை தடுக்கும் சோதனை சிகிச்சையையும் அஸ்பிரின் மற்றும் விட்டமின் டி மருந்துகளும் அவருக்கு வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

Advertisment

74 வயதான ட்ரெம்பிற்கு லேசான காய்ச்சல் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு வால்ட்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவ்வாட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. ட்ரெம்பின் பாலினம், வயது, மற்றும் எடை ஆகியவை அவருக்கு கடுமையான கொரோனா தொற்றினை உருவாக்க வழி வகை செய்யல்லாம். 4% இறக்கும் அபாயகரமான ஆபத்தை அவருக்கு அளிக்கின்றன என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

டொனால்ட் ட்ரெம்ப் எடுக்கும் சோதனை சிகிச்சை என்ன?

COVID-19 மருந்துகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்: வைரஸுக்கு மனித ஆன்டிபாடிகளின் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றன. உட்செலுத்தப்பட்ட ஆன்டிபாடிகள் உடனடியாக வைரஸுடன் சண்டையிடமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை COVID-19 ஐத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உருவாக்கப்படுகின்றன.

இந்த நுட்பம் ஏற்கனவே பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பரவலாக பயன்பாட்டில் உள்ளது. COVID-19 ஆன்டிபாடிகளுக்கு இதுவரை தரவுகள் குறைவாகவே வரையறுக்கப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்க தொற்று நோய் அமைப்பின் தலைவர் டாக்டர் அந்தோனி ஃபௌசி இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதிக அளவு நோய் தொற்றுகளை கொண்ட, வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட, ரெஜெனெரோன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிட்டடால் சோதனை செய்யப்பட்ட காக்டெய்ல் ஆண்ட்டிபாடி மருந்தினை ட்ரெம்ப் எடுத்துக்கொள்கிறார். இது கடுமையான பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

to read this article in English

லேசானா கோவிட்19-க்காக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் என்ன?

இந்த கட்டத்திற்கான உடல் நலக்கோளாறுக்கு சரியான சிகிச்சைகள் ஏதும் இதுவரை இல்லை. இந்த நிமிடம் வரை, இது சிம்டமேட்டிங் மற்றும் சப்போர்ட்டிவ் கேர் என்று மருத்துவர் ஜோனதன் க்ரெய்ன் கூறியுள்ளார். ஆனால் இவர் ட்ரெம்பிற்கான சிகிச்சை குழுவில் இடம் பெறவில்லை.

ட்ரெம்ப் சில மருந்துகளை எடுத்து வருகிறார் என்று கூறிய அவரின் மருத்துவர் அந்த மருந்துகளை பட்டியலிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விட்டமின் டி மற்றும் சிங்க்

பெப்சிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும், நெஞ்செரிச்சலுக்கான ஃஃபமோடிடின் மருந்து. இது கொரோனாவுக்கு எதிராக நல்ல மாற்றத்தை உருவாக்குமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டும்.

மெலாடோனின், தூக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதற்கு முன்பு தான் எடுத்துக் கொள்வதாக கூறிய அஸ்ப்ரின் மருந்தை ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கவும், காய்ச்சலை குறைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் ஆக்ஸிஜன் அல்லது திரவ மருந்துகள் வழங்கப்படும் என்றும் கிரேன் கூறினார். ஆதரவான கவனிப்பு அறிகுறிகளைப் பொறுத்தது தான் அமையும் என்று கூறிய அவர்கள் இருமல் மருந்து அல்லது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்துவது குறித்து?

கொரோனா வைரஸிற்காக மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தான ஹைக்ட்ராக்ஸிகுளோயினை பயன்படுத்தலாம் என்று முன்பு கூறப்பட்டது. மே மாதம், கொரோனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இம்மருந்தை எடுத்து வருவதாக கூறினார். அவசர பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்பட்டது என்றும் ஆனால் இது போதுமான விளைவை ஏற்படுத்தவில்லை என்றும் அறிவித்த பின்பு அதன் பயன்பாடு குறைக்கப்பட்டது.

ட்ரெம்பின் உடல்நிலை மோசம்டைந்தால் என்ன ஆகும்?

ட்ரெம்ப் ஏற்கனவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிலருக்கு அறிகுறிகள் சில வாரம் வரை இருக்கும். சிலருக்கு இரண்டாவது வாரத்திலேயே நிலைமை மோசமாகலாம்.

கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு இரண்டு மருந்துகளை பயன்படுத்த அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் என்று அறியப்பட்ட வெக்லூரி என்ற மருந்து. கிலியட் சையன்ஸ் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆண்ட்டிவைரல் மருந்து இது. மற்றொன்று ப்ளாஸ்மா தெரப்பி. அது கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் உடலில் இருந்து பெறப்படும் ஆண்ட்டிபாடிகளை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு உட்செலுத்தப்படுவது.

கூடுதல் ஆக்ஸிஜன் தேவையோடு கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க, மருத்துவமனையில், பொதுவாக, ஸ்டெராய்ட் டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் தொற்று நோய் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, வைரஸை எதிர்ப்பதற்கான உடலின் சொந்த திறனைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், லேசான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு பயன்படுத்தக்கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment