மார்ச் 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில், அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் டைட்டில் 42 என்ற விதியைக் கொண்டு வந்தனர். இதன்படி நிகரகுவா, கியூபா மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க-மெக்சிகோ எல்லையைத் தாண்டி மெக்சிகோவுக்கு வரும் போது அவர்களை வெளியேற்ற இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்று கட்டுபாடுகளாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்த டைட்டில் 42 விதியை நீட்டிப்பதாக அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் தஞ்சம் கோருவதைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அந்த நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்குள் நுழைய விண்ணப்பிக்க கூடுதல் சட்டப் பாதைகளைத் திறக்கும் என்று வெள்ளை மாளிகை கூறியது.
கோவிட் விதிகளின் கீழ் புலம்பெயர்ந்தோர் எல்லையில் ஏன் தடுக்கப்படுகிறார்கள்?
மார்ச் 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில், டைட்டில் 42 கொண்டுவரப்பட்டது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையைத் தாண்டி வரும் புலம்பெயர்ந்தோரை விரைவாக மெக்சிகோ அல்லது பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் விதி ஆகும். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது தலைமையின் கீழான நிர்வாகம் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்தை பெரிதும் குறைக்க முயன்றது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அப்போது நோய் பரவலைத் தடுக்க இது தேவை எனக் கூறியது.
சில பொது சுகாதாரத்துறை நிபுணர்கள், வக்கீல்கள் இந்த உத்தரவை விமர்சித்தனர். இது சட்டவிரோதம் என்றும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர். மெக்ஸிகோவில் போரட்டத்திலும் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான வழக்கறிஞர் அமைப்புகள் இந்த உத்தரவை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அதே நேரத்தில் குடியரசுக் கட்சியும் விதியை நீக்க முடியாது எனக் கூறி வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
டைட்டில் 42 பைடன் எவ்வாறு கையாண்டார்?
ஜனவரி 2021-ம் ஆண்டு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்றார். டிரம்பின் குடியேற்றக் கொள்கையை மாற்றியமைப்பதாக கூறி வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.
டிரம்ப்பின் சில கட்டுப்பாடுகளை நீக்கிய பைடன். ஒரு வருடத்திற்கும் மேலாக டைட்டில் 42 குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. ஆதரவற்ற குழந்தைகளை தவிர்த்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த குடும்பத்தினர் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பபட்டனர்.
பைடன் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க-மெக்சிகோ எல்லையைத் தாண்டி வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சில நாடுகள் இருந்து வருபவர்கள் குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அதன்பின் அக்டோபரில், வெளியேற்றங்கள் வெனிசுலா மக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. பிற நாட்டவர்கள் பொதுவாக தங்கள் குடியேற்ற வழக்குகளைத் தொடர அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
டைட்டில் 42 ஏன் விரிவுபடுத்தப்படுகிறது?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, பைடன் நிர்வாகம், கியூபாக்கள், நிகரகுவான்கள் மற்றும் ஹைட்டியர்களை டைட்டில் 42 விதிகளின் கீழ் மீண்டும் மெக்சிகோவிற்கு வெளியேற்றத் தொடங்குவதாகக் கூறியது. முன்னர் அவர்கள் தங்கள் வழக்குகளைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை அக்டோபரில் தொடங்கப்பட்ட ஒரு கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்தால் அவர்கள் விமானம் மூலம் நுழைய அனுமதித்தனர்.
பைடன் அரசு 30,000 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் என்றும் சட்டப்பூர்வமாக விண்ணப்பித்தால் அனுமதிக்கும் என்றும் கூறியது. முன்னதாக, மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்தர்களுக்கான வழக்கறிஞர்கள் டைட்டில் 42 விதி விரிவுபடுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.