scorecardresearch

ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் குறித்து புதிய கொள்கை என்ன?

சட்டவிரோத செயல்பாடு, தீங்கு விளைவித்தல் அல்லது வன்முறை அச்சுறுத்தல், பெரிய அளவிலான ஸ்பேம், தளத்தை தவறாகக் கையாளுதல் நடைபெற்றால் அல்லது கணக்கை மீட்டெடுப்பதற்கான சமீபத்திய முறையீடு எதுவும் இல்லையென்றால் கணக்கை மீட்டெடுக்காது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Twitter, Elon Musk, Twitter new account suspension policy, ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் குறித்து புதிய கொள்கை என்ன, ட்விட்டர், எலான் மஸ்க், social media, twitter new policy, Indian Express, Express Explained

சட்டவிரோத செயல்பாடு, தீங்கு விளைவித்தல் அல்லது வன்முறை அச்சுறுத்தல், பெரிய அளவிலான ஸ்பேம், தளத்தை தவறாகக் கையாளுதல் நடைபெற்றால் ட்விட்டர் கணக்குகளை மீட்டெடுக்காது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்லது கணக்கை மீட்டெடுப்பதற்கான சமீபத்திய முறையீடு எதுவும் இல்லையென்றால் கணக்கை மீட்டெடுக்காது என்று தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி முதல், ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு மேல்முறையீடு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. சமூக ஊடக தளத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுப்பதற்கான புதிய அளவுகோலின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து விதிகளை மீறும் கணக்குகளுக்கு எதிராக குறைந்த கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் கொள்கைகளின் கடுமையான விதிகளை மீறினால் அல்லது மீண்டும் மீறப்பட்டால் கணக்கு இடைநீக்கம் செய்வதாக ட்விட்டர் தளம் கூறியுள்ளது.

ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் குறித்த ட்விட்டர் நிறுவனத்தின் புதிய கொள்கை கடந்த ஆண்டு டிசம்பரில், ட்விட்டர் விதிகளை மீறியதற்காக நிரந்தர இடைநீக்கம் சரியான நடவடிக்கை என்று பல கொள்கைகளை அடையாளம் கண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது. ட்விட்டர் கொள்கைகளை மீறியதற்காக முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளது.

சட்டவிரோத செயல்பாடு, தீங்கு விளைவித்தல் அல்லது வன்முறை அச்சுறுத்தல், பெரிய அளவிலான ஸ்பேம், தளத்தை தவறாகக் கையாளுதல் நடைபெற்றால் ட்விட்டர் கணக்குகளை மீட்டெடுக்காது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்லது கணக்கை மீட்டெடுப்பதற்கான சமீபத்திய முறையீடு எதுவும் இல்லையென்றால் கணக்கை மீட்டெடுக்காது என்று தெரிவித்துள்ளது.

“தொடர்ந்து கொள்கையை மீறும் ட்வீட்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவது அல்லது கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன், ட்வீட்களை அகற்றும்படி கேட்டுக் கொள்வது போன்ற குறைந்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். எங்கள் கொள்கைகளை கடுமையாக அல்லது தொடர்ந்து மீறினால் கணக்கு முடக்கப்படும்” என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் கடுமையான விதிமீறல்களில் பின்வருவன அடங்கும். சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபடுதல், வன்முறை அல்லது தீங்கு விளைவித்தல் அல்லது அச்சுறுத்துதல், அந்தரங்க உரிமை மீறல், ட்விட்டர் தளத்தை தவறாகக் கையாளுதல் அல்லது ஸ்பேம் மற்றும் பயனர்களை இலக்கு வைத்து துன்புறுத்துவதில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.

எலோன் மஸ்க்கின் தலைமையின் கீழ் ட்விட்டர் கணக்கு முடக்கம் மற்றும் மீட்டெடுப்பு

கடந்த அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு பொறுப்பேற்றதில் இருந்து, ட்விட்டர் கணக்கு முடக்கம் (இடை நிறுத்தம்) மற்றும் மீட்டெடுப்பது ஆகியவற்றின் அடிப்படையில் ட்விட்டர் மென்மையான போக்கைக் கொண்டுள்ளது. நவம்பரில், எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்பின் கணக்கை ட்விட்டர் தளம் மீண்டும் பயன்பாட்டுக்கு மீட்டுக் கொடுத்தது. சமூக ஊடகத் தளத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மை பயனர்கள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வாக்களித்தனர்.

ட்விட்டர் நிறுவனம் ஒரு பயனர் கருத்துக்கணிப்பு மூலம் ட்ரம்ப் கணக்கை ட்விட்டரில் மீண்டும் செயல்படுத்தியது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் ஒரு உள்ளடக்க மதிப்பாய்வு கவுன்சிலை உருவாக்கும் என்றும் அந்த கவுன்சில் கூடுவதற்கு முன்பு பெரிய உள்ளடக்க முடிவுகள் அல்லது ட்விட்டர் கணக்கு மீட்டெடுப்பது எதுவும் நடக்காது என்றும் எலான் மஸ்க் முன்னர் வலியுறுத்திய போதிலும் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஆனால், இதுவரை, கவுன்சில் அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

அக்டோபரில் எலான் மஸ்க் ட்விட்டரைக் கையகப்படுத்திய நேரத்தில், யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டதற்காக ட்விட்டர் தளத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட ராப்பர் கன்யே வெஸ்டும் தனது கணக்கை மீட்டெடுத்தார். இருப்பினும், டிசம்பரில், வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்யும் தளத்தின் விதிகளை மீறியதற்காக அவரது கணக்கு மீண்டும் முடக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் ட்விட்டர், அமெரிக்காவில் உள்ள முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் சி.என்.என் போன்றவற்றின் கணக்குகளை கோடீஸ்வரர்களின் விமானம் பற்றிய பொதுத் தரவுகளை வெளியிடுவதற்கு தடை செய்தது. இந்த தடை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களில், எலான் மஸ்க் ஒரு ட்விட்டர் வாக்கெடுப்பை நடத்தினார். அவர் பத்திரிகைகளின் கணக்குகளை மீட்டெடுக்க வேண்டுமா என்று கேட்டார். வாக்கெடுப்பில் 59 சதவீத பயனர்கள் மீட்டெடுப்பதற்கு ஆதரவாக வாக்களித்த பிறகு அவற்றின் கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: What is twitters new account suspension policy details

Best of Express