Advertisment

பதவி உயர்வு இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற ‘கட்டளைப் பேராணை’ என்பது என்ன?

இந்த ஆணையை அரசு பணியில் அல்லாத பிறருக்கோ, பிற அமைப்புகளுக்கோ உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க இயலாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பதவி உயர்வு இட ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற ‘கட்டளைப் பேராணை’ என்பது என்ன?

What is writ of Mandamus?  அரசு பணிகளில் பதவி உயர்வுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இந்த இடஒதுக்கீடானது அடிப்படை உரிமை இல்லை என்றும், மாநில அரசுகள் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டினை தனிப்பட்ட நபர்கள் அடிப்படை உரிமையாக கோர முடியாது என்றும், இட ஒதுக்கீடு அடிப்படையில் உயர்ப்பதவிகளை நிரப்புமாறு மாநில அரசுகளுக்கு மண்டமஸ் எனப்படும் கட்டளை ஆணையை பிறப்பிக்க இயலாது என்றும் கூறியுள்ளது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு.

writ of mandamus என்றால் என்ன?

ஆங்கில சட்டங்களில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த ஆணைகளில் (prerogative writs) மண்டமஸ் எனப்படும் கட்டளை ஆணையும் உண்டு. சாதாரண சட்டத்தீர்வுகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் உச்ச நீதிமன்றங்கள் இது போன்ற தனிச்சிறப்பு ஆணைகளை வழங்குகிறது. தனிசிறப்பு ஆணைகள் முறையாக ஆட்கொணர்வு மனு (habeas corpus), கட்டளைப் பேராணை (Mandamus), தடை ஆணைகள் (Prohibition), தடைமாற்று ஆணைகள் (certiorari) மற்றும் உரிமை வினா ஆணைகள் (quo warranto) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உச்ச நீதிமன்றங்கள் இந்திய அரசியல் சாசனம் 32-ன் கீழ் தனிச்சிறப்பாணைகளை வழங்குகிறது. உயர் நீதிமன்றங்கள் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 226ன் கீழ் தனிச்சிறப்பாணைகளை வழங்குகிறது.

அரசு பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள்  அல்லது அரசு அமைப்பிற்கு ஒரு பணியை செய்யக் கூறி கட்டளையிடப்படுவதையே நாம் மண்டமஸ் என்று அழைக்கின்றோம். நீதிமன்றங்கள் அரசு சார்ந்த ஒரு நபரையோ ஒரு குழுவையோ, முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒரு கடமையை நிறைவேற்ற கட்டளையிடுவது தான் இதன் பொருள். அரசுசார் தனிநபரோ அல்லது ஒரு குழுவோ தங்களின் பங்கில் முழுமையாக இயங்காத பட்சத்திலும், அவர்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற வேறெந்த சட்டப்பூர்வமான முறையிலும் வலியுறுத்த முடியாத நிலை உருவாகும் போது தான் இது போன்று ரிட் ஆணைகளை நீதிமன்றங்கள் வழங்குகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இது போன்ற விவகாரங்களின் போது சட்டப்பூர்வமான மற்ற தீர்வுகள் இருக்கும் பட்சத்தில் கட்டளை பேராணைகளை நீதிமன்றங்கள் வழங்குவதில்லை. எப்படியாகினும், அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவது, மாற்றுத்தீர்வுகள் அத்தனை பலமாக இல்லாத சமயங்களில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கடமையாகிறது. அரசுப் பணியாளர் அல்லது அரசின் ஏதேனும் ஒரு செயல்பாடு தனி மனிதன் ஒருவரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் எனில் அது போன்ற சமயங்களில் அரசுக்கும் அரசு பணியாளார்களுக்கும் எதிராக நீதிமன்றங்கள் மண்டமஸ் ஆணையை பிறப்பிக்கும்.

1951ம் ஆண்டு வழங்கப்பட்ட மண்டமஸ் ரிட்!

1951ம் ஆண்டு வெங்கட்ரமனா என்பவர் மெட்ராஸ் அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றில், அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹரிலால் கனியா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மண்டமஸ் ஆணையை பிறப்பித்தது. ‘Communal Rotation Order’ அடிப்படையில் துணை சிவில் நீதித்துறை சேவைக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த அடிப்படையில் மனுதாரர் அந்த பணிக்கு நியமிக்கப்படவில்லை. இது இந்திய அரசியல் சாசனம் உட்பிரிவு 16(1)-னை மீறுவதாக உள்ளது என்று மனுதாரர் வழக்கு பதிவு செய்திருந்தார். உச்ச நீதிமன்ற அமர்வு ‘Communal Rotation Order’ அடிப்படையில் இல்லாமல், மனுதாரரின் பதவியை பரிசீலிக்கவும் அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது.

இது போன்ற மண்டமஸ் ஆணைகளை உச்ச நீதிமன்றம், தங்களின் பணியை செய்யாத உயர் நீதிமன்றங்களுக்கும் கீழ் நீதிமன்றங்களுக்கும் பிறப்பிக்கலாம். சாசனப்பிரிவு 361ன் கீழ் மண்டமஸ் ஆணை குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ பிறப்பிக்க இயலாது. இந்த ஆணையை அரசு பணியில் அல்லாத பிறருக்கோ, பிற அமைப்புகளுக்கோ உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க இயலாது. தனியார் நிறுவனங்கள் அரசு அமைப்புடன் இணைந்து செயல்படும் போது இந்த கட்டளைகள் பிறப்பிக்கப்படலாம்.

High Court Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment