Advertisment

ஒட்டுக்கேட்பதை நிர்வகிக்கும் சட்டங்கள் என்ன? அதன் நடைமுறை தெரியுமா?

2019இல் அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட ஐபிஎஸ் அதிகாரி ரஷ்மி சுக்லாவை மத்திய அரசு பாதுகாப்பதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுக்கேட்குதலை நிர்வகிக்கும் சட்டங்கள் என்ன? அதன் நடைமுறை என்ன?

author-image
WebDesk
New Update
ஒட்டுக்கேட்பதை நிர்வகிக்கும் சட்டங்கள் என்ன? அதன் நடைமுறை தெரியுமா?

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், தற்போது CRPF-இல் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரஷ்மி சுக்லாவை மத்திய அரசு பாதுகாப்பதாக கூறினார். மும்பையில் சுக்லா மீது வழக்குப்பதிவு உள்ளது. அவர், 2019இல் மகாராஷ்டிராவில் மாநில புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்தபோது, ராஜ்யசபா எம்பி ராவத், என்சிபி தலைவர் ஏக்நாத் காட்சே ஆகியோரின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட விவகாரம் குறித்து விசாரிக்கப்படுகிறார்.

Advertisment

இந்தியாவில் தொலைபேசிகள் எப்படி ஒட்டு கேட்கப்படுகின்றன?

ஃபிக்சட் லைன் போன் காலத்தில், மெக்கானிக்கல் பரிமாற்றங்கள் காலின்போது வரும் ஆடியோ சிக்னலை வழிநடத்த சர்க்யூட் ஒன்றாக இணைக்கும். ஆனால், தற்போதைய காலம் டிஜிட்டலாக உருவெடுத்ததால், தொலைப்பேசி அழைப்பு கம்ப்யூட்டர் வாயிலாக ஒட்டு கேட்கப்படுகிறது. பெரும்பாலான தகவல் பரிமாற்றம், செல்போன் காலில் தான் நடைபெறுகிறது. எனவே, அதிகாரிகள் சம்பந்தப்பட் தகவல் தொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட நம்பரின் அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து நிகழ்நேரத்தில் வழங்க கோரிக்கை விடுக்கிறார்கள்.

தொலைபேசிகளை யார் ஒட்டுக் கேட்கலாம்?

மாநிலத்தில் போன்களை ஒட்டு கேட்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது. மையத்தில் புலனாய்வுப் பணியகம், சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு நிறுவனம், ஆர்&ஏடபிள்யூ, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 10 ஏஜென்சிகளுக்கு அதிகாரம் உள்ளது. இதுதவிர, வேறு ஏதும் ஏஜென்சி செல்போன் ஒட்டு கேட்பில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும்.

இதை நிர்வகிக்கும் சட்டம் என்ன?

இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது, 1885 டெலிகிராப் ஆக்ட் என்ற தந்திச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

Section 5(2) கூற்றுப்படி, பொது அவசரநிலை ஏற்பட்டாலும், பொது பாதுகாப்பு நலனுக்காகவும் மையமோ அல்லது மாநிலங்களோ தொலைபேசியை ஒட்டுக்கேட்கலாம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது குற்றச் செயல்களுக்கு தூண்டுதலைத் தடுப்பதற்காக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கலாம்.

இதில் பத்திரிகைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. இந்தியாவில் மத்திய அரசு அல்லது மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிருபர்களின் தகவல் பரிமாற்றம், இந்த துணைப்பிரிவின் கீழ் தடைசெய்யப்டாத போது, அதனை ஒட்டுக்கேட்கவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ கூடாது. அதனை ரெக்கார்ட் செய்வதற்கான காரணமாக, அதிகாரி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.

தொலைபேசியை ஒட்டுக்கேட்க அனுமதிப்பது யார்?

தந்திச் சட்டத்தில் 2007இல் கொண்ட வந்த திருத்தத்தின்படி, rule 419A கூற்றுப்படி, உள் துறை அமைச்சகத்தின் செயலாளர் உத்தரவின்றி மையத்தில் செல்போனை ஒட்டுக்கேட்க முடியாது. மாநிலத்தை பொறுத்தவரை, உள்துறைக்கு பொறுப்பான மாநில அரசின் செயலாளர் அனுமதியின்றி செல்போனை ஒட்டுகேட்க முடியாது. இதற்கான ஆர்டர் காப்பி, சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பிறகே, ஒட்டுகேட்கும் பணி தொடங்கப்படும்.

அவசரகாலத்தில் என்ன பிராசஸ்?

தவிர்க்க முடியாத சூழ்நிலையில், மத்திய உள் துறைச் செயலர் அல்லது மாநில உள் துறைச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட இணைச் செயலர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியால் அத்தகைய உத்தரவை வெளியிடலாம்.

தொலைதூரப் பகுதிகள் அல்லது செயல்பாட்டுக் காரணங்களுக்காக, முன் வழிகாட்டுதல்களைப் பெறுவது சாத்தியமில்லை என்றால், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமையின் தலைவர் அல்லது இரண்டாவது மூத்த அதிகாரியின் முன் அனுமதியுடன் அழைப்பை இடைமறிக்க முடியும்.

மாநில அளவில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் பதவிக்கு குறையாத அதிகாரிகளால் ஒட்டுக்கேட்க முடியும்.

ஒட்டுகேட்பதற்கான அனுமதி உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மூன்று நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு அனுமதி கொடுப்பதா ரிஜக்ட் செய்வதா என்பதை ஏழு நாள்களுக்கு முடிவெடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஏழு நாட்களுக்குள் அதிகாரியிடமிருந்து உறுதிப்படுத்தல் பெறப்படாவிட்டால், அத்தகைய இடைமறிப்பு நிறுத்தப்படும் என ரூல் சொல்கிறது.

உதாரணாக, மும்பையில் 26/11 தாக்குதலின் போது, ​​முழுமையான நடைமுறையைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. அப்போது, உளவுத்துறை மூலம் சேவை வழங்குநருக்கு , பயங்கரவாதிகளின் தொலைபேசிகள் கண்காணிக்குப்படி மெயில் அனுப்பப்பட்டது.

"முறையான நடைமுறை பின்னர் பின்பற்றப்பட்டது. பல நேரங்களில், பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற கடுமையான சூழ்நிலைகளில், சேவை வழங்குநர்கள், நாட்டின் பாதுகாப்பிற்காக வாய்மொழி உத்தரவுகளையும் ஏற்றுக்கொள்வார்கள்" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தவறான பயன்பாட்டை தடுக்கும் வழிகள்?

தகவல்களைப் பெற வேறு வழி இல்லை என்றால் மட்டுமே, தொலைப்பேசி அழைப்பை ஒட்டுக் கேட்கக உத்தரவிட வேண்டும் என்று சட்டம் தெளிவாக உள்ளது.

Rule 419A படி, துணை விதி (1) இன் கீழ் உத்தரவுகளை வழங்கும்போது, ​​தேவையான தகவல்களை வேறு வழிகளில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரி பரிசீலிக்க வேண்டும். வேறு எவராலும் தகவல்களைப் பெற முடியாத சூழ்நிலையில் மட்டுமே அதற்கான அனுமதியை வழங்கப்பட வேண்டும் என கூறுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பதற்கான ஆர்டரின் வேலிடிட்டி 60 நாள்கள் இருக்கும். அவை முடிந்துவிட்டால், மீண்டும் புதுப்பிக்கலாம். ஆனால், மொத்த வேலிடிட்டி 180ஐ தாண்டக்கூடாது.

அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் காரணங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அதன் ஒரு நகல் ஏழு வேலை நாட்களுக்குள் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். மையத்தில், இந்த குழுவிற்கு கேபினட் செயலாளர் தலைமை தாங்குவார். சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மாநிலத்தை பொறுத்தவரை, இக்குழுவிற்கு தலைமைச் செயலாளர் தலைமை தாங்குவார். சட்டம் மற்றும் உள்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அனைத்து இடைமறிப்பு கோரிக்கைகளையும் மதிப்பாய்வு செய்ய, இக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க வழிகாட்டுதல்கள் இல்லை என்று மறுஆய்வுக் குழு கருதும் போது, ​​இடைமறித்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அதனை ஒத்திவைக்கவோ உரிமை உள்ளது.

விதிகளின்படி, விசாரணைக்கு தேவையில்லை என கருதப்படும் செல்போன் ஒட்டுகேட்பு தகவல்கள் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அழிக்கப்படும். . சேவை வழங்குநர்களும், செல்போன் ஒட்டுக் கேட்ப்ப நிறுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், அனைத்து பதிவுகளையும் அழிக்க வேண்டும்.

இந்த பிராசஸ் வெளிப்படையானதா?

இந்த பிராசஸை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திட, பல விதிகள் உள்ளன. ஒட்டு கேட்பதற்கான வழிமுறைகள்படி, சம்பந்தப்ப்ட்ட அதிகாரியின் பெயர் மற்றும் பதவியைக் குறிப்பிடுவதுடன், இந்த ஒட்டு கேட்பு தந்திச் சட்டத்தின் பிரிவு 5(2) இன் விதிகளுக்கு உட்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

எஸ்பி அல்லது கூடுதல் எஸ்பி பதவிக்குக் குறையாத அல்லது அதற்கு இணையான அதிகாரியால், சேவை வழங்குனர்களின் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஒட்டு கேட்கப்பட்ட அழைப்பின் விவரங்கள், யாருடைய உரையாடல் கேட்கப்பட்டது., யார் அழைப்புகளை ஒட்டுக்கேட்டார், பதிவுகளை அழித்த தேதி போன்ற விவரங்களை பராமரிக்க வேண்டும். அதனை அதிகாரி செக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சேவை வழங்குனர்களின் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரிகள், உத்தரவை காப்பியை பெற்ற இரண்டு மணி நேரத்திற்குள் பாதுகாப்பு/சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு ஒப்புகை கடிதங்களை வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை, தொலைப்பேசி ஒட்டு கேட்பில் மூலம் பெறப்பட்ட தகவலை, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க முகமை அதிகாரிகளுக்கு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அனுப்ப வேண்டும்.

சேவை வழங்குநர்கள் போதுமான மற்றும் பயனுள்ள உள் சோதனைகளைச் செய்து, உத்தரவின்றி எவ்வித கால் ரெக்கார்ட் செய்வதை தடுத்தும், தீவிர ரகசியம் பராமரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

ஊழியர்களின் செயல்களுக்கு சேவை வழங்குநர்களே பொறுப்பாகும். அங்கீகரிக்கப்படாத தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு வழக்கில், சேவை வழங்குநருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அதன் உரிமத்தை இழக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment