Arun Janardhanan
What led to Congress’ Puducherry crisis and Kiran Bedi factor : காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவான ஜான் குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் புதுவை அரசியலில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது திமுக காங்கிரஸ் கூட்டணியின் பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. தற்போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி என இரண்டு தரப்பும் 14 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளன. இந்த அரசியல் மாற்றம் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி புதுவைக்கு வருகை புரிவதற்கு ஒரு நாள் முன்பு நடைபெற்றுள்ளது. எதிர்கட்சியினர் தற்போது சிறுபான்மை காங்கிரஸ் அரசை ராஜினாமா செய்யக் கோரி வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த முன்னேற்றங்கள் அசாதாரணமானதா?
புதுவை அரசியலின் விநோத தன்மை மற்றும் ஒவ்வொரு தொகுதியின் அளவும் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் விசுவாசத்தை மாற்றுவதை எளிதாக்குகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் இது போன்று கடந்த 4 ஆண்டுகளில் நிறைய நடைபெற்றுள்ளது.
சராசரியாக ஒவ்வொரு புதுவை எம்.எல்.ஏவும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான வாக்களர்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். ஒரு நகராட்சியின் வார்டில் இருக்கும் சராசரி அளவு தான் இது. எனவே அரசியல் முன்னேற்றங்கள் அரசியலைக் காட்டிலும் தனிப்பட்டவையாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் சிறிய வட்டாரங்களில் உள்ள மக்களுடன் கணிசமான தனிப்பட்ட உறவைக் கொண்டுள்ளனர், , ஒரு சிறிய அரசியல் காரணிகளைத் தவிர பெரும்பாலும் சமூகம் மற்றும் சாதி காரணிகளை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
புதுவையின் பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசினாலும், சில கொள்கைகள், திட்டங்கள் மற்றும் கல்வி போன்றவை தமிழகத்தின் தாக்கத்தில் இருந்தாலும் கூட இங்கு திமுக மற்றும் அதிமுகவின் பங்கு மிகவும் குறைவு. இருகட்சிகளும் புதுவை விவகாரங்களில் பெரிய அளவு அக்கறை கொண்டிருக்கவில்லை. இந்த சிறிய யூனியன் பிரதேசத்தில் 30 தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளன. 23 புதுவையிலும், காரைக்கால் தமிழகத்திலும், யானம் ஆந்திராவிலும், மாஹே கேரளாவிலும் உள்ள நிலையில் இது காங்கிரஸின் கோட்டையாகவே பாரம்பரியமாக இருந்து வருகிறது.
பாஜக கேரளா மற்றும் தமிழகத்தில் வர இருக்கும் தேர்தலை ஒட்டி பயன்படுத்திய யுக்திகளையே புதுவையிலும் பயன்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கி, ஆளும் அதிமுக கூட்டணியை நான்கு ஆண்டுகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது போலவே, பாஜக புதுவையிலும் பயன் அடைந்துள்ளது. ராஜினாமா செய்த நான்கு எம்.எல்.ஏக்களில் அமைச்சர் உட்பட இருவர் பாஜகவில் இணைந்துள்ளனர்.குமாரும் விரைவில் இணைய உள்ளார். இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் பாஜகவை பிரதிநிதித்துவம் செய்தார்கள். இவர்களை பரிந்துரைத்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு நன்றி.
சமீபத்திய நெருக்கடி கிரண் பேடி தான் காரணமா?
புதுவை அரசியல் நிலைமை ஆட்டம் கண்டது சந்தேகத்திற்கு இடம் இன்றி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் வருகைக்கு பின்பு தான். அவருடைய பணி ஆளுநராக இல்லாமல் பெரும்பாலும் சுய பாணியில் செயல்படும் காவலராகவே பணியாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அவர் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
காங்கிரஸ் நெருக்கடிக்கும் அவருக்கும் பெரிய அளவு நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும் அவர் ஆளும் கட்சி தலைவர்களை சோர்வடைய செய்வதற்கும் அவருடைய கொள்கைகளால் எரிச்சலடைய வைப்பதற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். பேடி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு சவால் விடுத்து, ஆளுமை தொடர்பான ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அடிக்கடி தலையிட்டார். நிர்வாகத்தை நெறிப்படுத்தியதற்கும், அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாக்கியதற்கும், தொகுதிகளில் வெற்றி பெற முதலீடு செய்த பணத்தை திரும்பி எடுக்க லஞ்ச அரசியல் அமைப்பின் திட்டங்களையும் கனவுகளையும் கெடுத்தவர் என்று பெயர் பெற்றவர்.
அவர்களின் முதலீடுகளை திரும்பி எடுக்கும் முயற்சிகளை பேடி கடினம் ஆக்கினார். ஆனாலும் சில இடங்களில் அவர்களின் செயல்பாடுகள் நிர்வாக செயல்முறைகளை தடம் புரட்டியது. கிரண் பேடி கவர்னராக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் அல்லது திமுகவில் இருப்பது அவர்களுக்கு பயன் அளிக்காது என்று சிலர் கருதினார்கள் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
தேர்தலுக்கு முன்பாகவே இதே காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டார். ஏன் என்றால் தேர்தல் சூழலில் நிறைய அரசியல் சூழ்ச்சிகளைக் கோரும் ஒரு முக்கியமான வாக்கெடுப்பு காலத்தில், பேடி பாஜகவுக்கும் ஒரு கடினமான நபராக மாறியிருப்பார் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய வாய்ப்புகள் உள்ளதா?
நாராயணசாமியின் அரசு பெரும்பான்மை இழந்திருக்கும் போதும் ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் செவ்வாய் கிழமை அன்று இரவு பேசிய அவர், ராஜ் நிவாஸ் கடந்த நான்கரை ஆண்டுகலில் பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இது யூனியன் பிரதேச மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார்.
முதல்வராக பல போராட்டங்களை அவர் சந்தித்தார். கிரண் பேடி நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை நிர்வாக செயல்முறைகளை செயல்படுத்த தடையாக இருந்த போது, அவருடைய கட்சி பலவீனம் அடைந்து வருவதை அவர் உணர்ந்தார். அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள், அவருடைய கட்சி உறுப்பினர்களுக்கு பெரிய சலுகைகளுடன் வாய்ப்புகளை தர ஏஜெண்ட்டுகள் வந்து போவது நாராயணசாமிக்கு தெரியும் என்று கூறுகின்றனர். ஆனால் கிரண் பேடியுடனோ, கட்சியில் பிரச்சனைகளை சரி செய்யும் போதோ அவர் கோபம் அடையவில்லை. அவர் நிலையாக இல்லை. ஆனாலும் காந்தி குடும்பத்தினர் மற்றும் திமுகவின் முக ஸ்டாலின் ஆகியோர் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். புதன்கிழமை ராகுல் காந்தியின் புதுச்சேரி வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ராகுல் அவர்களை முன்பே பார்த்திருக்க வேண்டும் என்றார். “இன்று அவரது பயணம் குழப்பமான அனைத்து தலைவர்களின் மனதிலும் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக அமையும். ஆனால் அது தாமதமானது. நாங்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டோம், ”என்று கூறினார்.
மூத்த திமுக தலைவர் ஒருவர், நாராயணசாமி மிகவும் அமைதியாக இருந்தார். கிரண் பேடி விவகாரத்திலும் சரி, உள் கட்சி பிரச்சனைகளை சமாளிப்பதிலும் சரி. இது தான் வரப்போகிறது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். முன்பே ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டு இது போன்ற சூழல் உருவாவதை தவிர்க்கலாம் என்று கூறினோம். ஆனால் அவருக்கு முன்பு இருக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் கவலைப்படவில்லை. துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசாங்க நிர்வாகத்தில் அழிவை ஏற்படுத்தியிருந்த நேரத்தில் அவர் ராஜினாமா செய்திருந்தால், அது நியாயப்படுத்தப்பட்டிருக்கும். இந்த அச்சுறுத்தல்களை கடைசி தருணம் வரை கருத்தில் கொள்ள நாராயணசாமியோ காங்கிரஸ் உயர் கட்டளையோ கவலைப்படவில்லை ”என்று திமுக தலைவர் கூறினார்.
அடுத்து என்ன?
நாராயணசாமி, அவருடைய அரசு பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என்று கூறுகிறார். எதிர்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யமறுத்தால் ஆளுநரிடம் முறையிடுவோம் என்று கூறியுள்ளனர். தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே அரசான புதுவை அரசும் நிலையற்றதாக உள்ளது. பாஜக பயன்படுத்திய அதே யுக்திகளை பயன்படுத்தி ஆட்சியை தக்க வைக்கலாம். அல்லது டெல்லி ஆட்சியை கலைக்கும் வரை காங்கிரஸ் அங்கு ஆட்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil