கொசுக்கள் மனித ரத்தத்தை உறிஞ்சுபவை. கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சுவதற்கான காரணங்கள் பற்றி அதிகம் படித்திருந்தாலும் ஏன் இது இவ்வாறு செய்கிறது, இதை இயக்கும் வழிமுறை ஒரு மர்மமாகவே உள்ளது - இப்போது வரை.
ஜூலை 1 அன்று தேசிய அறிவியல் அகாடமி (PNAS) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொசுக்களின் இரத்த பசியை செயல்படுத்த அல்லது அடக்குவதற்கு ஒரு ஜோடி ஹார்மோன்கள் இணைந்து செயல்படுவதாக பரிந்துரைத்தது.
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
உலகில் சுமார் 3,500 கொசு இனங்கள் உள்ளன, அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளன. இந்த இனங்களின் பெண்கள் தங்கள் முட்டைகளின் வளர்ச்சிக்கு விலங்குகளின் ரத்தத்தை உட்கொள்கின்றன. இருப்பினும், உணவுக்குப் பிறகு, பெண் கொசுக்கள் முட்டையிடும் வரை ரத்தத்திற்கான பசியை இழக்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: What makes mosquitoes suck blood
ஏதென்ஸில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மைக்கேல் ஸ்ட்ராண்ட், இந்த சுழற்சியைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையைப் பற்றி அறிய விரும்பினார். அவரது ஆராய்ச்சியின் போது, எஃப்(என்பிஎஃப்) எனப்படும் குறிப்பிட்ட கொசு குடல் ஹார்மோனின் அளவுகள் அவர்கள் ஒரு புரவலரைத் தேடும் போது அதிகரித்ததையும், அது ரத்ததை ஊறிஞ்சிய உடன் வெகுவாகக் குறைந்ததையும் அவர் கண்டார்.
இது குடல் ஹார்மோன் உற்பத்திக்கு காரணமான கொசு என்டோஎண்டோகிரைன் செல்களை மேலும் ஆய்வு செய்ய ஸ்ட்ராண்டைத் தூண்டியது. அது மற்ற கொசுக்களுடன் சேர்ந்து, பூச்சிகளின் NPF அளவுகள் ரத்தம் சாப்பிடுவதற்கு முன்பு உயர்ந்து, ஆறு மணி நேரம் கழித்து வீழ்ச்சியடைந்ததைக் கண்டறிந்தார்.
இது ஏன் முக்கியம்
கொசுக்கள் கிரகத்தின் கொடிய விலங்காகும். மலேரியா, டெங்கு, வெஸ்ட் நைல் வைரஸ், மஞ்சள் காய்ச்சல், ஜிகா, சிக்குன்குனியா மற்றும் நிணநீர் ஃபைலேரியாஸிஸ் போன்ற நோய்களுக்கு முக்கிய காரணமாக இவை உள்ளன. இவை அனைத்தும் உலகில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் அதிகப்படியாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.
உண்மையில், காலநிலை மாற்றத்துடன், கொசுக்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பரவி வருகின்றன, டெங்கு போன்ற நோய்கள் முன்பு கொசுக்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு குளிர்ந்த பகுதிகளுக்கும் பரவுகின்றன.
கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த முயற்சிக்கு இந்த ஆய்வு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆபபில் பெற https://t.me/ietamil“