கடந்த வாரம், நாசா தனது புதிய விண்கலமான, NEA ஸ்கௌட், தேவையான அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டதாகவும், விண்வெளிக்கு செலுத்தும் (SLS) ராக்கெட்டுக்குள் பாதுகாப்பாக பொருத்திவிட்டதாகவும் அறிவித்தது. ஆர்ட்டெமிஸ் I இல் பயணம் செய்யும் பல விண்கலப்பொருட்களில் NEA ஸ்கௌட் ஒன்றாகும், இதன் பயணம் நவம்பரில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ட்டெமிஸ் I என்பது ஓரியன் விண்கலம் மற்றும் எஸ்.எல்.எஸ் ராக்கெட்டின் ஆளில்லா சோதனை விமானமாகும். ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், நாசா 2024 ஆம் ஆண்டில் பெண் ஒருவரை சந்திரனில் தரையிறக்குவதையும் 2030 க்குள் நிலையான சந்திர ஆய்வு திட்டங்களை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
NEA ஸ்கௌட் என்றால் என்ன?
பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் ஸ்கௌட், அல்லது NEA ஸ்கௌட், என்பது ஒரு பெரிய ஷூ பாக்ஸின் அளவை உடைய ஒரு சிறிய விண்கலம். அதன் முக்கிய நோக்கம் பூமிக்கு அருகில் உள்ள ஒரு சிறுகோள் மூலம் பறந்து தரவுகளை சேகரிப்பதாகும். இது சூரியசக்தியைப் பயன்படுத்தி விண்வெளி பயணத்திற்கான உந்துதலை மேற்கொள்ளும் அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பணியாகும்.
இந்த பயணத்தின் முதன்மை தொழில்நுட்ப ஆய்வாளர் லெஸ் ஜான்சன் ஒரு வெளியீட்டில், “இந்த வகை உந்துவிசை சிறிய, இலகுரக விண்கலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஆனால், அவை பெரிய அளவிலான வழக்கமான ராக்கெட் உந்துசக்தியை கொண்டு செல்ல முடியாது.”
NEA ஸ்கௌட் விண்கலத்தின் பாகங்கள் துருப்பிடிக்காத எஃகு கொண்டு செய்யப்பட்டுள்ளது மற்றும் அதன் மீது அலுமினியம் பூசப்பட்டுள்ளது. இது 925 சதுர அடிகளை கொண்டது. “விண்கலத்தின் பயணத்தில், பெரும் பகுதி பயணம் சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் உந்துதலை உருவாக்கி கிடைக்கும் ஆற்றல் மூலம் நடைபெறும். சூரிய ஒளியின் ஆற்றல்மிக்க துகள்கள் விண்கலத்தின் சூரிய தகடுகளில்பட்டு ஒரு மென்மையான, ஆனால் நிலையான உந்துதலைக் கொடுக்கின்றன. காலப்போக்கில், இந்த நிலையான உந்துதல் விண்கலத்தை மிக அதிக வேகத்தில் துரிதப்படுத்துகிறது, இது விண்வெளியில் செல்லவும் அதன் இலக்கு சிறுகோளைப் பிடிக்கவும் அனுமதிக்கிறது ”என்று நாசா வெளியீட்டில் விளக்கினார்.
இந்த விண்கலம் சிறுகோள் அடைய மேற்கொள்ளும் பயணத்திற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும், மேலும் சிறுகோள் ஆனாது பூமியிலிருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும்.
இது சிறுகோளை எவ்வாறு ஆய்வு செய்யும்?
NEA ஸ்கௌட் சிறப்பு கேமராக்களைக் கொண்டுள்ளது. அவை 50 செ.மீ / பிக்சல்கள் முதல் 10 செ.மீ / பிக்சல்கள் வரை படங்களை எடுக்க முடியும். மேலும் இது அதன் நடுத்தர ஆண்டெனா வழியாக பூமியில் உள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கிற்கு படங்களை அனுப்புவதற்கு முன்பு படத்தை செயலாக்கலாம் மற்றும் கோப்புகளின் அளவுகளை குறைக்கலாம்.
“NEA ஸ்கௌட் சேகரித்த படங்கள், சிறுகோளின் இயற்பியல் பண்புகளான சுற்றுப்பாதை, வடிவம், அளவு, சுழற்சி, அதைச் சுற்றியுள்ள தூசி மற்றும் குப்பைகள் மற்றும் அதன் மேற்பரப்பு பண்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும்” என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்), மிஷனின் முதன்மை அறிவியல் ஆய்வாளர் ஜூலி
பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்?
“அவை அளவில் சிறியதாக இருந்தபோதிலும், இந்த சிறிய சிறுகோள்கள் சில பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்” என்று NEA ஸ்கௌட் தொழில்நுட்ப திட்ட மேலாளர் டாக்டர் ஜிம் ஸ்டாட் கூறினார். “அவற்றின் பண்புகளைப் புரிந்துகொள்வது, பாதிப்பு ஏற்பட்டால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்க எங்களுக்கு உதவும் என்றும் ஜிம் கூறினார்.” விஞ்ஞானிகள் இந்தத் தரவைப் பயன்படுத்தி ஆபத்தை குறைக்க, செயல்திறனை அதிகரிக்க, ரோபோ மற்றும் மனித விண்வெளி ஆராய்ச்சியின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்று, காஸ்டிலோ-ரோஜஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil