Advertisment

உயர் கல்விக்கு உக்ரைன்: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் குவிவது ஏன்?

மற்ற அனைத்து நாடுகளையும் விட, இந்தியாவிலிருந்து தான் அதிகளவிலான மாணவர்கள் உக்ரைனுக்கு கல்வி பயில சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
உயர் கல்விக்கு உக்ரைன்: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் குவிவது ஏன்?

கடந்த 20 ஆண்டுகளாக, உக்ரைனில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியர்களிடையே உக்ரைனில் கல்வி பயில்வது அதிகரித்துள்ளது. மற்ற அனைத்து நாடுகளையும் விட, இந்தியாவிலிருந்து தான் அதிகளவிலான மாணவர்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டில் படிக்கும் இந்தியர்களின் இலக்குகளில், பிரபலமான இடமாக உக்ரைன் திகழ்கிறது.

Advertisment

ஜூன் 2021இல் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளின்படி, ரஷ்யாவில் 16,500 இந்திய மாணவர்கள், பிரான்ஸில் 10 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், உக்ரைனில் தான் அதிகளவில் 18 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை, உக்ரைனை காட்டிலும் அதிகளவில் ஜெர்மனியில் 20 ஆயிரத்து 801 இந்தியர்கள் கல்வி பயில்கின்றனர்.

உக்ரைனில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை?

சர்வதேச கல்விக்கான உக்ரைனிய மாநில மையத்தின் கூற்றுப்படி, 2019 இல் 80,470 வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வியை உக்ரைனில் பயின்றனர். ஆரம்ப காலத்தில் 18 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில், 2011 இல் அதன் எண்ணிக்கை 53,664 ஆக உயர்ந்தது. 2019 தரவை வெவ்வேறு நாட்டினரைாக வகைப்படுத்தினால், இந்தியாவிலிருந்து 18 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அதைத் தொடர்ந்து, , மொராக்கோவிலிருந்து 10.2%, அஜர்பைஜானில் இருந்து 6.8%, துர்க்மெனிஸ்தானில் இருந்து 6.6% மற்றும் நைஜீரியாவிலிருந்து 5.4% மாணவர்களும் உள்ளனர்.

publive-image

கடந்த நவம்பரில் ஆய்வாளர்கள் அனடோலி ஓலெக்ஸியென்கோ, இலிசவெட்டா ஷ்செபெட்டில்னிகோவா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், உக்ரைன் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அமெரிக்காவில் கல்வி பயில்வோருக்கு ஒதுக்கியுள்ள பங்குடன் சமமாக இருக்கிறது.

எந்த படிப்புகளில் சேர்கிறார்கள்?

உக்ரைனில் வெளிநாட்டு மாணவர்களின் டாப் விருப்பமாக மருத்துவப் படிப்பு உள்ளது. 2019 தரவுகள்படி, உக்ரைனில் கல்வி பயிலும் மொத்தம் 80,470 வெளிநாட்டவர்களில் 32.3% பேர் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்குப் பதிவு செய்துள்ளதாக காட்டுகிறது. இரண்டாவது இடத்தில் மருத்துவப் பயிற்சி 7.7 சதவீதமும், பல் மருத்துவம் 6.3 சதவீதத்திலும் உள்ளது.

இந்திய மாணவர்களின் கல்வி விருப்பம் தொடர்பாக துல்லியமான தரவு இல்லாவிட்டாலும், பெரும்பாலானோர் உக்ரைனில் உள்ள 45 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை பயில்கின்றனர்.

publive-image

இந்த ட்ரெண்ட் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ சேவை மேற்கொள்வதற்கான FMGE தேர்வில் பங்கேற்ப்போரின் எண்ணிக்கை 2015இல் 1587 ஆக இருந்த நிலையில், 2020இல் 4,258ஆக அதிகரித்தது.

உக்ரைனின் கல்வி தரம் என்ன?

1991 இல் சோவியத் யூனியனிலிருந்து உக்ரைனுக்கு சுதந்திரம் கிடைத்த காலக்கட்டம் முதல், இரண்டு வேறுபட்ட கருத்துகளின் மோதலில் சிக்கித்தவிக்கிறது. இதிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு விடுபடவில்லை. இது, கல்வி ரிசல்டிலும், ஆராய்ச்சிகளிலும் தேக்கநிலையை வழிவகுத்தது.

உக்ரைன் பல்கலைக்கழகங்களில் உள்ள மந்தநிலை, வெளிநாட்டிற்குப் படிப்பதற்காக மாணவர்களை அதிக அளவில் வெளியேற வழிவகுத்தது. உக்ரைன் பல்கலைக்கழகங்கள் “neo-Soviet and neo-liberal போட்டிகளுக்கு" இடையில் சிக்கித் தவிப்பதாக Oleksiyenko கூறுகிறார்.

UNESCO மற்றும் CEDOS மூலம் தொகுக்கப்பட்ட தரவின்படி, உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு செல்லும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை 2007 இல் 25,432 ஆக இருந்த நிலையில், 2017-18 இல் 83,000 ஆக உயர்ந்துள்ளது. 2021 வரை, QS தரவரிசையில் முதல் 500 இடங்களில் கார்கிவில் உள்ள V N கராசின் தேசிய பல்கலைக்கழகம் மட்டுமே ஒரே உக்ரைன் பல்கலைக்கழகமாக இடம்பெற்றுள்ளது.. 2022 இல், அந்த பல்கலைக்கழகமும் பட்டியலில் இருந்து வெளியேறியது.

உக்ரைனுக்கு மாணவர்கள் செல்ல என்ன காரணம்?

ஆராய்ச்சியாளர் Myroslava Hladchenko ஆய்வின்படி, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு மாணவர்களை செல்வதற்கான காரணங்கள் குறைந்த கட்டணமும், எளிதான அட்மிஷன் பிராசஸ் மட்டுமே ஆகும். பலருக்கு, உக்ரைன் பெரிய ஐரோப்பிய நாடுகளில் நுழைவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

உக்ரைனில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் $5,000 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் கல்வி பயில 70 ஆயிரம் டாலரும், கனடாவில் கல்வி பயில 23 ஆயிரம் டாலர் முதல் 90 ஆயிரம் டாலர் வரையும், இங்கிலாந்தில் கல்வி பயில 20 ஆயிரம் டாலர் முதல் 40 ஆயிரம் டாலர் வரையும் செலவாகுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், உக்ரைனில் காஸ்ட் ஆப் லிவிங்-வும் மிகவும் குறைவாகும்.

உக்ரைன் பல்கலைக்கழகங்களின் தேடல் வெளிநாட்டு மாணவர்களா?

இந்தியாவைப் பொறுத்தவரை, உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் உள்ள ஏஜென்சிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன. பல ஆண்டுகளாக, அத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, உக்ரைனில் கல்வி பயில்வது தொடர்பான விளம்பரங்கள், இந்தியா முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களிடையை ஆசையை தூண்டுகிறது.

சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களை சேர்ப்பதை தீவிரமாக ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது முக்கியமான வருவாய் ஈட்டும் பகுதியாகும். இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கல்வி பயின்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர். இதன் மூலம், பல்கலைக்கழகத்தில் 40 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia Medical College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment