What money transfer outside banking system signals : நேரடியாக வங்கிகளை சார்ந்திருக்காமல் இனி ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பிக் கொள்ள இயலும். பணம் அனுப்புதல் அல்லது பெறுதல், மொபைல் வாலட்டுகளை பயன்படுத்துதல், ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் நெஃப்ட் பரிமாற்றுமுறையை வங்கிகளின் உதவி இன்றி செய்து கொள்ளுதல் மற்றூம் சி.பி.எஸ் ஆகியவற்றையும் இனி செய்து கொள்ள முடியும். வங்கிசாரா இந்த தொழில்நுட்பங்கள் வங்கியின் பாரம்பரிய சேவைகளில் பலமாக தரையிரங்குகின்றன.
இதனை எளிதாக்க ரிசர்வ் வங்கி என்ன செய்துள்ளது?
கடந்த வாரம் ஆர்.பி.ஐ. ஒரே கட்டமாக மொபைல் வாலட்கள் உள்ளிட்ட சிஸ்டம் ஆப்பரேட்டர்கள் நேரடியாக ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் நேரடியாக உறுப்பினராக இருக்க நெறிமுறைகள் முன்மொழியப்பட்டது. இது தீர்வு அபாயத்தை குறைத்து டிஜிட்டல் நிதி சேவைகளை அதிகரிக்க இது உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இவைகள் எந்த விதமான சி.பி.எஸ் பரிவர்த்தனைகளின் பணப்புழக்க வசதிகளை ஆர்.பி.ஐயிடம் இருந்து பெறாது. வசதிகள் தொடர்பான வேறெந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் வங்கிசாரா நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் உச்ச வரம்பு 2 லட்சத்தை தாண்டி இருக்காது.
இதனால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?
மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனை முறைகளை துவங்கிய பிறகு கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் உ.பி.ஐயின் பயன்பாடு அதிகரிக்க துவங்கிவிட்டது. அனைத்து வங்கிசாரா பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுக்கும் இவ்வசதிகள் உருவாக்கி தரப்படும் பட்சத்தில் டிஜிட்டல் சேவைகள் அதிகரிக்கும் என்றும் பரிவர்த்தனைகள் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால், வங்கி முறைக்கு வெளியே உள்ள சேனல்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் அனைத்து நபர்களின் டிஜிட்டல் தரவுகளையும் இது உருவாக்கும். அதுவரை வாடிக்கையாளார்களின் தனிப்பட்ட க்ரெடிட் விவகாரங்கள் வங்கிகளில் மட்டுமே இருக்கும். இந்த சிஸ்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருவரின் க்ரெடிட் ப்ரொஃபைல்களை முறையாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உங்களின் சொத்துகள், கடன் திருப்பி செலுத்தும் விதம் மற்றும் க்ரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து தான் வங்கிகள் உங்களுக்கு கடன் அளிக்கும். இந்த ஃபிண்டெக் நிறுவனங்கள் உங்களின் சொத்து மதிப்பை மட்டும் பார்க்காது. ஆனால் இந்த ஃபின்டெக்கினை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு சொத்து குறைவாக உள்ளது அல்லது சொத்தே இல்லாமல் இருக்கிறது. இருப்பினும் அவர்கள் கடனை பெற்று பயன்படுத்த முடிகிறது. இது அவர்கள் டிஜிட்டல் ட்ரைல் பெற்று கிரெட்டிட் ப்ரோஃபைல்களை உருவாக்க உதவுகிறது. எனவே ஒருவர் சாதாரண வங்கி சேனல்களுக்கு வெளியே கூட கடன் வாங்கி திருப்பிச் செலுத்தும் வழியில் கவனமாக இருக்க வேண்டும் ”என்று நுகர்வோர் அதிகாரமளிப்பதற்கான ஃபின்டெக் சங்கத்தின் ஆளும் குழு உறுப்பினர் ஸ்ரீநாத் ஸ்ரீதரன் கூறினார்.
இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை யார் இப்போது எடுத்துக் கொள்வார்கள்?
தற்போது அனைத்து வங்கிசாரா நிறுவனங்களுக்கும் இந்த அனுமதியை வழங்குகிறது ஆர்.பி.ஐ. ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட், கார்ட் நெட்வொர்க்குகள், வெள்ளை நிற லேபில் ஏ.டி.எம். ஆப்பரேட்டர்கள், ட்ரேட் ரிசிவபிள் டிஸ்கௌண்ட்டிங் சிஸ்டம் தளங்கள் ஆகியவை சி.பி.எஸ். உறுப்பினர்களாக மாற உள்ளனர். கூகுள் பே, மொபிவிக், பேயூ, ஓலா மணி, போன் பே, அமேசான் பே போன்ற மொபைல் வாலெட்கள் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் வசதிகளை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கி கொடுக்கும். KYCக்கு இணக்கமானநிறுவனங்களுக்கு மட்டுமே இடமாற்றம் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பணம் எடுத்தல்
வங்கிகளின் மற்றொரு ஏகபோக செல்வாக்கும் இதனால் போகப் போகிறது. குறிப்பிட்ட உச்ச வரம்பு வரை வங்கிசாரா நிறுவனங்களுக்கு பணம் எடுக்கும் உரிமைகளையும் ஆர்.பி.ஐ. வழங்க உள்ளது. கே.ஒய்.சி - பி.பி.ஐ. வழங்கப்பட்டிருக்கும் வங்கிகளுக்கு மட்டும் தான் பணம் எடுக்கும் அதிகாரம் ஏ.டி.எம். மற்றும் பி.ஓ.எஸ். டெர்மினல்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பி.பி.ஐ.எஸ். ஹோல்டர்களுக்கு மட்டுமே பணம் எடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பணத்தை எடுத்துச் செல்ல குறைந்த ஊக்கத்தொகை மற்றும் அதன் விளைவாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ரிசர்வ் வங்கி இப்போது வங்கி சாரா நிறுவனங்களுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது (ரூ .2 லட்சம் வரம்புக்கு உட்பட்டு). இதனால் மக்கள் வங்கிகளை நம்பியிருப்பது குறைய வாய்ப்புள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சிறந்த முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பண உச்ச வரம்பு குறித்து
ஆர்.பி.ஐ. வங்கிசாரா நிறுவனங்களின் பி.பி.ஐ-யின் பேலன்ஸை ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இது வங்கிசாரா நிறுவனங்களின் ஆன்லைன் பரிமாற்றம் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கு வசதி மற்றும் ஊக்கமளிக்கும் மற்றும் முழு KYC இணக்கம் மற்றும் இயங்குதன்மைக்கு செல்ல அவர்களுக்கு உதவும். பி.பி.ஐ. வாலெட்களின் இயங்குதன்மை சந்தை அளவை விரிவாக்கும் மற்றும் இறுதி நுகர்வோருக்கு பயனளிக்கும். முன்னதாக வங்கிகளுக்கும் வேறு சில நிறுவனங்களுக்கும் மட்டுமே கிடைத்த மத்திய கட்டண முறைகளின் உறுப்பினர்களுக்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இது பிபிஐ வழங்குபவர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும், ஏனெனில் அவர்கள் வாலெட்டை பயன்படுத்துபவர்களுக்கு ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் சேவைகளை வழங்க முடியும். ஒட்டுமொத்தமாக, இது நாட்டில் நிதி சேர்க்கையை ஆழமாக எடுக்கும் ”என்று ராபிபே ஃபின்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யோகேந்திர காஷ்யப் கூறினார்.
இது போன்ற வங்கிசாரா நிறுவனங்கள் வங்கிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா?
பணப்பரிமாற்றம் மற்றும் பணம் எடுத்தல் போன்றவை நிச்சயமாக பாரம்பரிய வங்கி செயல்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய சராசரியான 64% ஐ விட 87% ஃபின்டெக் விகிதத்துடன் ஆசியாவின் சிறந்த ஃபின்டெக் மையமாக இந்தியா திகழ்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஃபின்டெக் சந்தை 2019 ஆம் ஆண்டில் ரூ .1.9 லட்சம் கோடியாக இருந்தது, டிஜிட்டல் கொடுப்பனவுகள், டிஜிட்டல் கடன், பியர்-டு-பியர் (பி 2 பி) கடன், பிக் டேட்டா, ரெக் டேட்டா கூட்ட நிதியளிப்பு போன்ற பல்வகைப்பட்ட துறைகளில் 2025 ஆம் ஆண்டில் ரூ .6.2 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவைப் பொறுத்தவரை ஃபின்டெக் நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் வங்கி மற்றும் நிதித் துறையில் மிகவும் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருக்கும் உலகில், வணிக வங்கிகள் தொழில்நுட்ப மாற்றங்களுடன் தழுவி, இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது முக்கியம். எதிர்காலத்தில் அவை வணிகத்திற்காக ஃபின்டெக் நிறுவனங்களுடன் போட்டியிடுவதை விட சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த மாதம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை 2019 - 20 ஆண்டுகலில் மிகவும் அதிகமாக உள்ளது. மொத்தமாக 80% டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இதன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடன் திருப்பி செலுத்தும் முறைகளில் யு.பி.ஐ., நெஃப்ட் மற்றும் ஐ.எம்.பி.எஸ் ஆகியவை முன்னணி வகிக்கின்றன. கார்ட் பேமெண்ட்களை கணக்கில் கொள்ளும் போது டெபிட் கார்ட்கள் பணப்பரிவர்த்தனையின் வளர்ச்சி 35.6% ஆக அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்ட்கள் வளர்ச்சி 21.1% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் தனிமனித இடைவெளி டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை அதிக அளவு ஊக்குவித்தது. இருப்பினும் பொருளாதார நடவடிக்கைகளின் ஏற்பட்ட தொய்வின் விளைவாக அனுப்பப்பட்ட பணத்தின் அளவுகளிலும் தொய்வு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.