நேபாள பிரதமர் பாஜக அலுவலகம் விசிட், NEPAL pm visit bjp headquarters delhi | Indian Express Tamil

பாஜக அலுவலகத்திற்கு விசிட் அடித்த நேபாள பிரதமர்… கட்சிக்கு சொல்லும் செய்தி என்ன?

முன்னாள் துணைப் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான பீம் ராவல் கூறுகையில், நேபாள் காங்கிரஸின் தலைவராக டியூபா டெல்லிக்குச் சென்றாரா அல்லது பிரதமராக சென்றாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜக அலுவலகத்திற்கு விசிட் அடித்த நேபாள பிரதமர்… கட்சிக்கு சொல்லும் செய்தி என்ன?

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா தனது இந்திய சுற்றுப்பயணத்தை பாஜக தலைமையகத்திற்குச் சென்று தொடங்கினார். வழக்கமான நடைமுறை மாற்றியுள்ளதால், பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அதே சமயம், அவருக்கு ஆதரவும் எழுந்துள்ளது.

நேபாள வெளியுறவு அமைச்சக வட்டாரங்களின்படி, இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் ஒரு பிரதமர் அதிகாரப்பூர்வமாக அல்லது அரசு பயணமாகவோ வருகை தருகையில், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு, பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதை தொடர்ந்து,ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பது வழக்கமான நடைமுறையாகும் என தெரிவிக்கப்பட்டது.

பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் டியூபா பாஜக தலைமையகத்திற்குச் சென்றார்.

இதுகுறித்து முன்னாள் துணைப் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான பீம் ராவல் கூறுகையில், நேபாள் காங்கிரஸின் தலைவராக டியூபா டெல்லிக்குச் சென்றாரா அல்லது பிரதமராக சென்றாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் நாராயண் கட்கா கூறுகையில், நேபாள காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் டியூபா பாஜக அலுவலகத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.

நேபாளி காங்கிரஸூம் இந்தியா உறவும்

நேபாளி காங்கிரஸ் 76 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சில நேபாளி மாணவர்களால் நிறுவப்பட்டது. , அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1951இல் இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் கிடைத்த பல கட்சி ஜனநாயகத்திற்காக, நேபாளி காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண்,ம் ராம் மனோகர் லோஹியா உள்ளிட்ட இந்திய சோசலிஸ்டுகள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 1960, மன்னர் மஹேந்தா தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, அவரது நேரடி மேற்பார்வையின் கீழ் பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தினார். இந்திய சோசலிஸ்டுகள் தொடர்ச்சியான பிளவுகளை சந்தித்து வந்ததால், நேபாளி காங்கிரஸின் ஒரே முறைசாரா கூட்டாளியாக காங்கிரஸ் இருந்து வந்தது.

1990 இல், ஜனநாயகத்திற்கான புத்துயிர் பெற்ற இயக்கத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குவதற்காக நேபாளத்திற்கு அனைத்துக் கட்சி இந்தியக் குழுவை சந்திர சேகர் வழிநடத்தியபோது, அதில் பாஜக பங்கேற்கவில்லை.

1992 ஆம் ஆண்டில், பல கட்சி ஜனநாயகம் வசதியாக இல்லை என்றும், முடியாட்சியின் பங்கு குறைந்திருப்பதையும் விரும்பாத ராஸ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சித்தாந்தவாதி கே ஆர் மல்கானியின் தலைமையில் பிரதிநிதிகளை அனுப்பிய ஒரே இந்தியக் கட்சி பாஜக மட்டுமே.

நேபாளத்தை குடியரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் கிளர்ச்சி, 2005 இல் இந்திய தூதரகம் மத்தியஸ்தத்துடன் நேபாள காங்கிரஸ், முக்கிய கம்யூனிஸ்ட் குழுக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஒப்புதலைப் பெற்றது. நேபாளம் குடியரசாக மாறியது மட்டுமல்லாமல் மதச்சார்பற்ற நாடாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில், பல பாஜக தலைவர்கள் நேபாளம் இந்து ராஜ்ஜியமாகவும், முடியாட்சியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். 2006 முதல் தற்போது வரையும், நேபாளத்தில் பல்வேறு ஆளும் கட்சிகள், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும், இந்தியாவில் காங்கிரஸுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன.

இந்து குறிக்கோள்

நேபாளத்தில், ஆறு டஜன் அமைப்புகள் எப்போதாவது சாலைக்கு வருகின்றன. ஆனால் மிகவும் அரிதாக அனைவரும் ஒன்றிணைந்து நேபாளத்தின் இந்து ராஜ்ஜிய நிலையை மீட்டெடுக்கக் கோருகின்றன.
அதில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நேபாளப் பிரிவான இந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் இருப்பும் உள்ளது

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளில், ராஸ்திரிய பிரஜாதந்திர கட்சி மட்டுமே இந்து தேசம் மற்றும் முடியாட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் கேபி ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசாங்கத்தில் சேர நேர்ந்தது.

உலகின் ஒரே இந்து நாடாக 86% க்கும் அதிகமான இந்து மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் இருந்து, இந்து குறிக்கோளை எந்தக் கட்சியும் புறக்கணிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, ஒலி நேபாளம் தான் உண்மையான அயோத்தி என கூறிவருகிறார். இங்கு தான் ராமர் பிறந்ததாக கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஒலி பிரதமராக இருந்த இரண்டு காலங்கள், இந்தியாவின் பாஜக அரசாங்கத்துடன் மோதல்கள் இருந்தது. அது, முதலில் இந்தியாவின் பொருளாதார முற்றுகைக்கு வழிவகுத்தது. , பின்னர் எல்லைப் பிரச்சினை ஏற்படுத்த சீனாவுடன் கைகோர்த்தது. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளான மாவோயிஸ்டுகள் மற்றும் UML-ஐ ஒன்றிணைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது.

ஜூன் 2021இல், ஒலி அரசு சரிந்த பிறகு, டியூபா பிரதமராக பதவியேற்றார். பாஜகவின் வெளியுறவுப் பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே, நேபாளப் பிரதமரின் மனைவி அர்சு டியூபாவை சகோதரியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு, கட்சியிலும், நிர்வாகத்திலும், என்ஜிஓ அமைப்புகளிலும் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.

தற்போது, பாஜக தலைமையகத்திற்கு டியூபாவின் வருகை, “மதச்சார்பற்ற” நேபாளி காங்கிரஸை அதனுடன் நெருக்கமாகக் கொண்டுவருவதில் பாஜகவுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றியாகக் கருதப்படுகிறது. மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனிடமிருந்து 500 மில்லியன் டாலர் மானியத்திற்காக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், நேபாளின் மாற்றம் சீனா இடையே தூரத்தை அதிகரிக்கும்.

மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காத்மாண்டு திரும்புவதற்கு முன், வாரணாசியில் பூஜை மற்றும் மதிய உணவை டியூபாவுக்கு வழங்கினார். நேபாளத்தில் ஆதித்யநாத் மீதான மக்களின் கருத்து பிளவுபட்டுள்ளது

அவருக்கு கணிசமான பின்தொடர்பவர்கள் இருந்தாலும் ஒரு அரசியல் தலைவராக இருப்பதை விட கோரக்நாத் பீடத்தின் மஹந்த் என்ற முறையில் முன்னாள் துணைப் பிரதமரும் நேபாளி காங்கிரஸ் துணைத் தலைவருமான பிமலேந்திர நிதி உட்பட, மாற்றத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் அவர் எதற்காக நிற்கிறார் என்பதைப் பற்றி விமர்சித்து வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டுக்கு முன், நேபாளம் குறிப்பாக மன்னர்கள் கோரக்நாத்தை தங்கள் தலைவியாக வணங்கி வந்தனர். கோரக்நாத் பீடத்திற்கு நேபாளத்தில் கணிசமான சொத்து உள்ளது. நேபாளம் இந்து முடியாட்சியாக நீடிப்பதற்கு ஆதித்யநாத் வெளிப்படையாக ஆதரவு அளிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: What nepal pm deuba visit to bjp headquarters means for his party