Advertisment

ரஜினிகாந்த் புதிய கட்சி: கூட்டணி வாய்ப்பு இருக்கிறதா?

இருப்பினும் அதிமுக - என்.டி.ஏ கூட்டணி, பாமக மற்றும் தேமுதிகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிராகரித்தும் விட இயலாது.

author-image
WebDesk
New Update
What Rajinikanth’s political plunge means for Tamil Nadu

Arun Janardhanan 

Advertisment

What Rajinikanth’s political plunge means for Tamil Nadu :  நீண்ட நாளாக அரசியல் பிரவேசம் குறித்து பேசிக் கொண்டே இருந்த ரஜினி இறுதியாக ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக வியாழக்கிழமை அன்று கூறியுள்ளார். கட்சி எந்த நாளில் அறிவிக்கப்படும் என்பதை அவர் டிசம்பர் 31ம் தேதி கூற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மே மாதம் 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை குறித்த யோசனை 1996ம் ஆண்டில் இருந்தே உள்ளது. அந்த ஆண்டு தான் ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டார். அவரின் அறிக்கையால் தான் ஜெயலலிதா அந்த ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார் என்றும் ரஜினி கூறுவதுண்டு. அதற்கு முன்பும் கூட, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், அதன் பின்பு முதல்வரான ஜெயலலிதா இருவர்களுடனும் ரஜினிக்கு சுமூகமான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்த போதிலும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் அரசியலில் களம் காண இருப்பதாக ரஜினி அறிவித்தார். ஆனால் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தெரிவித்த அவர், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ”45 வயதின் போதே இல்லாத பதவி ஆசை 70 வயதில் வந்தால் அவனை பைத்தியக்காரன் என்பார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகைக்காக அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 90களில் அவருடைய ரசிகர்களாக இருந்த இளம்வயதினர் தற்போது மத்திம வயதில் உள்ளனர். ”ஆட்சி மாற்றம் இருக்கும். அனைத்தும் விதி. தமிழகத்தின் விதியை இந்த தேர்தல் மாற்றும். நான் வென்றால் அது மக்களின் வெற்றி. நான் தோற்றால் அது மக்களின் தோல்வி. நான் அனைத்தையும் மாற்றுவேன்” என்று வியாழக்கிழமை கூறினார் அவர்.

2021 தேர்தல் களத்தில் மேலும் ஒருவர்

2016ம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் இடதுசாரிகள்- தலித் கட்சிகளின் மூன்றாம் அணிக்கு இடையேயான வாக்கு பிரிவுகள் அதிமுகவை வெற்றி அடைய செய்தது. இரண்டு பெரிய திராவிட கட்சிகளுக்கு எதிராக ரஜினியின் கட்சியும் போட்டியிடுகிறது. தினகரனின் அமமுக மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. இக்கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது.

ரஜினியின் வருகை எதிர்கட்சியின் வாக்கு வங்கியை குறைப்பதாக இல்லாமல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்று எண்ணுகிறார்கள். திமுக ஆதரவாளர்கள், தொண்டர்கள், இடதுசாரி கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் ரஜினியின் பாஜக சார்பினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

2017ம் ஆண்டு கட்சி ஆரம்பித்து தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார் ரஜினி. ஆனால் 2021ல் தான் கட்சி ஆரம்பிக்க உள்ளார். கூட்டணி சேர்வது போன்று இல்லை. தனித்து நின்று போட்டியிட்டாலும் கூட 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக பெற்ற வெற்றியை தான் ரஜினி பெற முடியும். அன்றைய தேர்தலில் தேமுதிக 8% வாக்குகளை பெற்றது. இருப்பினும் விஜயகாந்தை தவிர வேறு எந்த போட்டியாளரும் வெற்றி பெறவில்லை. விஜயகாந்தைக் காட்டிலும் குறைவான வாக்குகளை தேர்வு முடிவுகள் காட்டினால் அது ரஜினிக்கு வருத்தத்தை விளைவிக்கும்.

ரஜினிஜாந்த் புதிய கூட்டணியில் சிறிய கட்சிகளை பெறுவதற்கு சாத்தியம் இல்லை. சி.பி.எம்., சி.பி.ஐ, விசிக மற்றும் வைகோவின் மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து, தொகுதி பங்கீட்டில் சர்ச்சை எழாத வரை, வெளியேறாது. ரஜினிகாந்த், செல்வாக்கற்ற பாஜகவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இணைய மாட்டார். இருப்பினும் அதிமுக - என்.டி.ஏ கூட்டணி, பாமக மற்றும் தேமுதிகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிராகரித்தும் விட இயலாது.

ரஜினிகாந்த் தன்னுடைய கட்சியில் எந்த விதமான முக்கிய பிரமுகர்களையும் பெற்றிருக்கவில்லை. இது கமல்ஹாசனின் அரசியல் நுழைவிலும் காணப்பட்ட ஒன்றாகும். அவருடைய கட்சியில் இருப்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அவருடைய ரசிகர்களாக இருந்தவர்கள். இளைய தலைமுறையினர் விஜய் மற்றும் அஜித் போன்றவர்களை பின்பற்றுகின்றனர். கூட்டணி குறித்தும், தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும் ரஜினி அமைதியாகவே இருக்கிறார். மார்ச் 2020-ல் தான் போட்டியிட போவதில்லை என்றார். அவர் முதல்வர் வேட்பாளராக இல்லை என்றால், கேட்க வேண்டிய கேள்வி, இது நாள் வரையில் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்கள் ஏன் இப்போது முகமறியா நபர்களை கொண்ட புதிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆன்மிக அரசியலும் பாஜகவும்

ஜனவரி 2018ம் ஆண்இல் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சி ஆன்மிக அரசியலை பின்பற்றும் என்றார். நேர்மை மற்றும் ஊழற்ற அரசாக இருக்கும் என்றார். ஆனால் அந்த ஆன்மிகம் என்பது திராவிட அரசியலை பின்பற்றும், மதம் மற்றும் சாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழகத்தில் ரஜினையை வலதுசாரி தலைவராக காட்டியது.

வியாழக்கிழமை தன் கட்சியில் பணியாற்ற இருக்கும் இரண்டு முக்கிய நபர்கள் குறித்து அறிவித்தார் ரஜினி. அதில் ஒருவர் அர்ஜுனமூர்த்தி. அவர் பாஜகவின் அறிவுசார்பிரிவின் தமிழக தலைவராக இருந்தார்.  மேலும், ரஜினிகாந்த் மறைந்த சோ ராமசாமியின் ரசிகர், இந்துத்துவ சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டவர் என்று அறியப்பட்ட ஒரு செல்வாக்கு மிக்க சமூக விமர்சகர், மற்றும் சங்க பரிவாரில் இருந்த எஸ்.குருமூர்த்தியுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.

ரஜினியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் ரஜினி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் இல்லை என்று மறுப்பு கூறுகின்றனர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், கமல் ஹாசன் போன்று மதசார்பற்று, இடதுசாரி கொள்கை சாய்வு கொண்டு இல்லாமல், ரஜினி கர்நாடகாவில் ஆன்மீக சூழலில் வளர்ந்தவர். இது தான் ரஜினியின் ஆன்மீக நாட்டத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இதற்கு முன்பு பேசிய ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண கேக்வாத், ரஜினிக்கு 18 வயது இருக்கும் போது அருகில் இருக்கும் ராமகிருஷ்ண மடத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம் என்று கூறியுள்ளார். ரஜினி தன்னுடைய இரண்டு குருக்கள் தொடர்பான படத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க : ரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதி

பெருந்தொற்று காலமும் ரஜினியின் உடல் நிலையும்

2016ம் ஆண்டு தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ரஜினி காந்த். இப்படியான சூழலில் பிரச்சாரம் மற்றும் பொதுமக்களிடம் பேசுவது மிகப்பெரிய அளவில் கவலை கொள்ள வைக்கும் ஒன்றாக இருக்கிறது.  ஐபிஎல் 2020 இல் பயன்படுத்தப்பட்ட"பயோ-பபுள்" போன்ற ஒரு கருத்தை அவர்கள் பரிசீலித்து வருவதாக அவரது உள் வட்டத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். ஒரு கற்பனையான "குமிழி" ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அருகிலேயே அனுமதிப்பதன் மூலம் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து தங்களை கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment