அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவான ஆதாரங்களின்படியே, தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, நீதிமாறா தன்மை, சகோதரத்துவம், கண்ணியம் மற்றும் மத நம்பிக்கைகள் மீதான சமத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பின் சாராம்சங்கள்
சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் பகுதி ஒரு முழு பகுதியாகும். இதில் எவ்வித உட்பிரிவுகளோ இல்லை.
சன்னி வக்பு வாரியம், இந்த வழக்கில், முழு அர்ப்பணித்தன்மையுமடன் செயல்படவில்லை.
சன்னி வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், பாதகமான உடைமைகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்புற சுற்றுப்பகுதியில் இந்துக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது முதல் அவர்கள் அங்கு தொடர்ந்து வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உட்புற சுற்றுப்பகுதி விவகாரத்தில் தான், இந்துக்களுக்கும் - இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒரு முரண்பாடான நிலை நிலவிவந்தது.
1992 டிசம்பர் 6ம் வரை, மசூதி இருந்ததாக கூறப்படும் இடத்தில் எவ்வித மாற்றங்களும் நிகழ்த்தப்படவில்லை. அதுபோல, அந்த மசூதியில், இஸ்லாமியர்கள் நடைபெற்றுவந்த எந்தவொரு காரியங்களும் கைவிடப்படவில்லை.
1934ம் ஆண்டில் மசூதி சேதமுற்றிருந்தது. 1949ம் ஆண்டு சேதம் சரிசெய்யப்பட்டிருந்தது. 1992ம் அது முழுமையாக இடித்து தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள், சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்புற பகுதியில், ராமர் உள்ளிட்ட இந்து கடவுள் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி தங்களது மத சம்பிரதாயங்களை முன்வைத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இடத்தின் உட்புறத்தில் உள்ள 3 குவிமாடங்கள் அமைந்துள்ள பகுதியில் வழிபாடு நடத்த இந்துக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.