நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பபட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குவதற்கு முன் நேற்று (ஆகஸ்ட் 20) நிலவில் விழுந்து நொறுங்கியது. கிட்டதிட்ட 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா நிலவு பயணத்தை மேற்கொண்டது. மார்டன் ரஷ்யாவின் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.
விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியில் முடிந்தது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த தோல்வியின் மூலம் நிலவில் விண்கலன்களை மெதுவாக தரையிறக்குவதில் உள்ள சிக்கலை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது.
மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு சென்றது உள்பட 20 முறைகளுக்கு மேல் வெற்றிகரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருந்தாலும், நிலவில் தரையிறங்குவது குறித்தான தொழில்நுட்பம் இன்னும் தெளிவாக தேர்வு செய்யப்படவில்லை.
ஆச்சரியப்படும் விதமாக, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று சீன தரையிறக்கங்களைத் தவிர, சந்திரனில் அனைத்து வெற்றிகரமான தரையிறக்கங்களும் 1966 மற்றும் 1976 க்கு இடையில் ஒரு பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்தன.
திக் திக் 15 நிமிடங்கள்
2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 ஏவுதலுக்கு முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன், தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை "15 நிமிட பயங்கரம்" என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்து நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்குவதில் உள்ள சிக்கலின் சாரத்தை குறிக்கிறது. இது தான் நிலவு பயணத்தின் மிகவும் கடினமான பகுதியாகும் என்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் இப்போது ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனில் தங்கள் விண்கலத்தை தரையிறக்க முயற்சித்து தோல்வியடைந்தன. இந்த பயணங்கள் ஒவ்வொன்றும் கடைசி கட்டத்தில் - தரையிறங்கும் செயல்பாட்டின் போது - மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் செயலிழந்தன என்றார்.
லூனா-25- விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை, இருப்பினும் ரோஸ்கோஸ்மோஸின் அறிக்கை, விண்கலம் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதையில் நகரும் போது ஏற்பட்ட பாதை மாற்று கோளாறில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியது. மற்ற மூன்று திட்டங்கள்
இஸ்ரோவின் சந்திரயான்-2, இஸ்ரேலின் பெரேஷீட் மற்றும் ஜப்பானில் ஹகுடோ-ஆர் ஆகியவை பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இருந்து மாறுபட்டு செயலிழந்தன என்றார்.
சீனா 2013 இல் Chang'e-3 மூலம் தனது முதல் நிலவு பயணத்தில் வெற்றிகண்டது. 2019-ல் Chang'e-4 மற்றும் 2020-ல் மாதிரி திரும்பும் பணி ஆகிய 3 பயணங்களிலும் வெற்றி சாதனை படைத்தது.
முயற்சித்து தோல்வியடைந்த நாடுகளில், இந்தியா மட்டுமே இரண்டாவது முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தன் முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு, சந்திரயான்-3 இல் பல பாதுகாப்பு அம்சங்களை இணைத்து, தற்போது நிலவின் தரையிறங்குவதற்கான இறுதிக் கட்ட பயணத்தில் உள்ளது.
முந்தைய பயணங்கள்
அரை நூற்றாண்டுக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத் திறன் இன்றும் மிகவும் மேம்பட்ட விண்வெளி ஏஜென்சிகளில் சிலவற்றைத் தொடர்வது விசித்திரமாகத் தோன்றலாம். இருப்பினும், தரையிறங்கும் தொழில்நுட்பம் அப்போதும் தேர்ச்சி பெறவில்லை. அந்த நேரத்தில் மிக அதிகமான தோல்வி விகிதத்திலிருந்து இது தெளிவாகிறது.
1963 மற்றும் 1976-க்கு இடையில் நிலவில் தரையிறங்குவதற்கான 42 முயற்சிகளில், 21 மட்டுமே வெற்றி பெற்றன.
50 சதவிகிதம் வெற்றி விகிதத்தை கொடுத்தது. அந்த நேரத்தில் சந்திரனுக்குச் செல்வதற்கான உந்துதல்கள் மிகவும் வேறுபட்டவை. இது முக்கியமாக பனிப்போர் போட்டி, மற்றும் புவிசார் அரசியல் அனுகூலத்தைப் பெறுவதற்கான இருந்தன. அது தான், அமெரிக்காவையும் முந்தைய சோவியத் யூனியனையும் இந்த சந்திர பயணங்களை அனுப்பத் தூண்டியது. அவை ஆபத்தானவை, மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் ஆற்றல் நிறைந்தவை. ஆனால் இவற்றில் சில பெருமளவில் வெற்றி பெற்றன, இது அறிவியல் வரலாற்றில் புதிய சாதனைகளை படைத்தன.
சந்திரயான்-1-ன் முக்கிய நபர்களில் ஒருவரான மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், தற்போதைய நிலவு பயணங்களில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இவை அப்பணிகளுக்குச் செய்யக் கூடிய செலவுகளைக் கூட நியாயப்படுத்த முடியாது.
மேலும், தற்போதைய நிலவு பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மிகவும் வேறுபட்டவை. அவை பாதுகாப்பானவை, மலிவானவை மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டவை. ஆனால், 1960கள் மற்றும் 1970களில் பயன்படுத்தப்பட்டவற்றுடன் இவற்றை ஒப்பிட முடியாது, அவைகள் இப்போதுதான் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதனால்தான், சந்திரனில் ஆறு பேர் கொண்ட பயணங்களை தரையிறக்கிய அமெரிக்கா கூட, தற்போதைய நிலவு பயணங்களில் கிட்டத்தட்ட புதிதாக - ஆர்பிட்டர்களை அனுப்புவதன் மூலம் - தொடங்கியுள்ளது. ஏன் நிலவில் மனிதர்களை தரையிறக்கிய அமெரிக்கா கூட, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் நேரடியாக மனிதர்களை அனுப்ப தொடங்கவில்லை. ஆர்ட்டெமிஸ்-3 பயணத்தில் மட்டுமே மனிதர்களை அனுப்ப உள்ளது.
லூனா பயணங்களின் எதிர்காலம்
லூனா -25 திட்டம் நிலவு ஆய்வு மீதான ரஷ்ய ஆர்வத்தை மீண்டும் தொடங்குவதாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சோவியத் யூனியன் நிலவு பயணங்களுக்கு பயன்படுத்திய லூனா சீரியஸ் பெயரை குறிக்கும் வகையில் இது பெயரிடப்பட்டது. 1976 இல் ஏவப்பட்ட லூனா-24, சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கிய கடைசி விண்கலம் ஆகும். சந்திர பயணங்கள் திடீரென அப்படியே நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இடைநிறுத்தப்பட்டன.
லூனா-25 தொடர்ந்து இன்னும் அதிகமான சந்திரப் பயணங்கள் இருப்பதாக ரஷ்யா ஏற்கனவே அறிவித்துள்ளது. லூனா திட்டத்தில் இந்த 10 ஆண்டுகளில் 3 திட்டங்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.