இந்த நிதியாண்டில் தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பி.எல்.ஐ திட்டங்களுக்கு ரூ.1.97 லட்சம் கோடியை செலவிட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இது மின்னணு உற்பத்தித் திட்டங்களுக்காக பி.எல்.ஐ.க்கு அறிவிக்கப்பட்ட ரூ.40,951 கோடிக்கு மேல் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை: இது இந்திய உற்பத்தித் துறையில் உலகளாவிய போட்டியாளர்களை ஈர்க்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்தியாவுக்கு வர விரும்பும் நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் உந்துதல்
அடுத்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த புதிய மத்திய சுகாதார திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள தேசிய சுகாதார பணிக்கு கூடுதலாக செயல்படும் பிரதான் மந்திர ஆத்மநிர்பர் ஸ்வஸ்திய பாரத் திட்டத்துக்கு சுமார் 64,180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை: இந்த திட்டம் தற்போதுள்ள தேசிய நிறுவனங்களின் திறன்களை ஆறு ஆண்டுகளில் முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளாக உருவாக்க பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
இது தவிர, புதிய மற்றும் வளர்ந்து வரும் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்த புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கு இது பயன்படுத்தப்படும். அமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது, இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. தடுப்பு பராமரிப்பு, நோய் தீர்க்கும் மற்றும் மக்களின் நல்வாழ்வை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மின் துறையில் உந்துதல்
ஒன்றுக்கு மேற்பட்ட மின் விநியோக நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்ய நுகர்வோருக்கு மாற்று வழிகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை: இது ஆபரேட்டர் மட்டத்தில் போட்டி வழங்குவதையும் நுகர்வோருக்கு அதிக தேர்வை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விநியோகத் துறையில் சிறந்த செயல்திறன் நிலைகளை இலக்காக வைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"