Advertisment

Explained: கொரோனாவால் அமெரிக்கா தேசிய அவசரநிலை அறிவிப்பு என்றால் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வரும் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரநிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், டிரம்ப் அமெரிக்காவில் ஸ்டாஃபோர்டு சட்டத்தை செயல்படுத்தி, 50 பில்லியனுக்கும் அதிகமான கூட்டாட்சி நிதி உதவியை அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
us national emergency, national emergency in us, us coronavirus cases, கொரொனா வைரஸ், அமெரிக்கா அவசரநிலை அறிவிப்பு, coronavirus cases in us, express explained, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், US declaring national emergency for coronavirus, ஸ்டாஃபோர்ட் சட்டம், US President Donald Trump declared a national emergency, coronavirus outbreak, US Stafford Act, tamil indian express

us national emergency, national emergency in us, us coronavirus cases, கொரொனா வைரஸ், அமெரிக்கா அவசரநிலை அறிவிப்பு, coronavirus cases in us, express explained, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், US declaring national emergency for coronavirus, ஸ்டாஃபோர்ட் சட்டம், US President Donald Trump declared a national emergency, coronavirus outbreak, US Stafford Act, tamil indian express

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வரும் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரநிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், டிரம்ப் அமெரிக்காவில் ஸ்டாஃபோர்டு சட்டத்தை செயல்படுத்தி, 50 பில்லியனுக்கும் அதிகமான கூட்டாட்சி நிதி உதவியை அறிவித்தார். சாத்தியமான சூழல் வந்ததும் உடனே அவர் வைரஸ் பரிசோதனை செய்ய வாய்ப்புள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

Advertisment

அமெரிக்காவில், பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளுக்கான கூட்டாட்சி உதவி ஸ்டாஃபோர்ட் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

முக்கியமாக, ராபர்ட் டி. ஸ்டாஃபோர்ட் பேரிடர் நிவாரணம் மற்றும் அவசர உதவிச் சட்டம், மாநிலங்களுக்கும், உள்ளூர்களுக்கும் பலவிதமான கூட்டாட்சி உதவிகளை வழங்கும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று காங்கிரஸ்ஸியனல் ஆராய்ச்சி பணிகள் (சிஆர்எஸ்) தெரிவித்துள்ளது.

ஒரு அறிவிப்பானது ஒரு சம்பவத்திற்கு கூட்டாட்சி உதவியை வழங்குவதற்கான அதிபரின் முடிவு என வரையறுக்கப்படுகிறது.

ஸ்டாஃபோர்டு சட்டத்தின் கீழ் மூன்று வகையான அறிவிப்புகள் செய்யப்படலாம்: தீயணைப்பு மேலாண்மை உதவி மானியங்கள், அவசரநிலைகள் மற்றும் பெரிய பேரழிவுகள். இந்தச் சட்டத்தின் கீழ், கூட்டாட்சி மறுமொழிகளை ஒருங்கிணைப்பதற்கான முதன்மை கூட்டாட்சி நிறுவனம் பெடரல் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (ஃபெமா) ஆகும். இது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (டி.எச்.எஸ்) அமைந்துள்ளது.

அதிபர் அவசரநிலையை அறிவிக்கும்போது, "எதிர்கால சேதத்தின் அச்சுறுத்தலைக் குறைக்கக் கூடிய" அத்தியாவசிய சேவைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கும் சமூகங்களுக்கும் உதவும் அந்த நடவடிக்கைகளுக்கு அது அங்கீகாரம் அளிக்கிறது. மேலும், ஒரு அவசரநிலை நிவாரண செலவில் 75 சதவீதத்திற்கும் மேல் மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்படுவதையும் குறிக்கிறது.

உயிரைக் காப்பாற்றுவதற்கும் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் ஒரு சம்பவம் நிகழும் முன் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படலாம். உதாரணமாக, ஒரு சூறாவளி நிலச்சரிவை ஏற்படுவதற்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்படலாம்.

ஸ்டாஃபோர்டு சட்டத்தின்படி, ஒரு அவசரநிலை வரையறுக்கப்படுகிறது, “எந்தவொரு சந்தர்ப்பமும் அல்லது நிகழ்வும், அதிபரின் தீர்மானத்தில், உயிரைக் காப்பாற்றுவதற்கும், சொத்து மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மாநில மற்றும் உள்ளூர் முயற்சிகள் மற்றும் திறன்களைப் பூர்த்தி செய்ய கூட்டாட்சி உதவி தேவைப்படுகிறது. பாதுகாப்பு, அல்லது அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் ஒரு பேரழிவின் அச்சுறுத்தலைக் குறைக்க அல்லது தவிர்ப்பதற்காக அறிவிக்கப்படுகிறது.”

அமெரிக்காவில் கடந்த கால அவசர அறிவிப்புகள்

சி.எஸ்.ஆர் தகவல் படி, “ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் எண்ணிக்கை 1953 முதல் படிப்படியாக அதிகரித்துள்ளது. 1974-2014 க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது அவசரகால அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை சூறாவளிகளுக்கானவை, அதைத் தொடர்ந்து பனி தொடர்பான நிகழ்வுகள், வறட்சி மற்றும் கடுமையான புயல்கள் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலைகளுக்காக ஒரு சில அவசரநிலை அறிவிப்புகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில், எச் 1 என் 1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவால் ஒரு தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், 2000-ம் ஆண்டில், பில் கிளிண்டன் மேற்கு நைல் வைரஸ் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதமாக நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசரநிலையை அறிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Usa Donald Trump Us
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment