ஒவ்வொரு மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போதும், “இரட்டை இன்ஜின் அரசு, இரட்டை வளர்ச்சி” என்ற கோஷத்தை பாஜக முன்வைக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று மோடி பிரதரமானரான பிறகு, அவர்கள் சந்தித்த முதல் தேர்தல் களம் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை ஆகும்.
இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக, மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அதேபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் முறையாக, முழுமையாக மாநில அரசுக்கு வந்துசேரும். இதனால் மாநில அரசுகள் வளர்ச்சி அடையும் என தொடர்ந்து வலியுறுத்தியது. இதே பார்முலாவை தான் அதன் பிறகு நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக கையிலெடுத்தது.
இந்நிலையில், பிப்ரவரி – மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப்பிரதேசம், கோவா மாநிலங்களிலும், திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் தேர்தல் பிரச்சாரங்களிலும் மாநில வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தினார்.
2014 மக்களவை தேர்தலுக்கு பிறகு, 40 சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 31 முறை தேர்தலுக்கு முன்பும், பின்பும் என லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது.
அப்போது, 22 கணக்கெடுப்புகளில், வாக்காளர்களிடம் இரட்டை இன்ஜின் அரசு என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சி ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதன் கருத்துக்கணிப்பு முடிவில் வாக்காளர்களின் மனநிலையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
வாக்காளர்களும், வாக்குகளும்
22 கணக்கெடுப்புகளின் போது, பஞ்சாப், கோவா, ராஜஸ்தான், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தன. ஆனால் தேர்தலுக்குப் பிறகு, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கோவா மற்றும் அசாம் உட்பட 12 மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றின.
அதில், பஞ்சாப் (2017), ராஜஸ்தான் (2018) ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் பாஜக அதன் ஆட்சியை இழந்து, காங்கிரஸ் வசம் சென்றது.
பாஜக தேர்தலில் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஹிமாச்சல் பிரதேசம், மேகலாயா, நாகலாநந்து, உத்தரப் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசுக்கு ஆதரவு அதிகளவில் இருந்தன. பாஜகவின் கொள்கையை முழுமையாக ஒப்புக்கொள்வது மைனஸ் ஒப்புக்கொள்ளவில்லை என எடுக்கப்பட்ட நிகர ஒப்பந்தத்தில் 20 சதவீதம் வித்தியாசம் இருந்தன.
ஹிமாச்சல பிரதேச மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்கவில்லை. இங்கு நிகர ஒப்பந்தம் –21 சதவீதமாக இருந்தது. மாநில அரசுகளை மாற்றி அமைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறது. இரண்டு வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்திலும், நிகர ஒப்பந்தம் குறைவாக தான் இருந்தன. இருப்பினும் இரண்டு மாநிலங்களையும் பாஜக அரசு கைப்பற்றியது.
இரட்டை இன்ஜின் அரசு குறித்த வாக்காளர்களின் கருத்தைப் பார்க்கும்போது, 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில், ஹரியானாவில் 45 சதவீதமும், மகாராஷ்டிராவில் 29 சதவீதமும், ஜார்கண்ட்டில் 41 சதவீதம் பேரும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அங்கும் முறையே 11%, 10% மற்றும் 7% மட்டுமே முழுமையாக உடன்படவில்லை. மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்தது.
2015 ஆம் ஆண்டில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் இரட்டை இன்ஜின் தேர்தல் வீயூகம் எடுப்படவில்லை. 36 விழுக்காடு மக்கள் மத்தியிலும் மாநிலத்திலும் அதே அரசாங்கத்தை அமைப்பதில் முற்றிலும் உடன்படவில்லை. இதன் காரணமாக, ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியுடன் டெல்லியில் கால் பதித்தது.
பின்னர் 2016இல், மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு , கேரளா ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதில், அசாமில் தான் ‘இரட்டை இன்ஜினுக்கான’ ஆதரவு மிக அதிகமாக இருந்தது. 46 சதவீதம் முழு ஆதரவுடன் 7 சதவீதம் மட்டுமே எதிராக இருந்தனர். இந்த ஆதரவு, அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்தது.
மேற்கு வங்கத்தில், 29% பேர் முழுமையாக ஒப்புக்கொண்டனர். ஆனால், 40% பேர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
அதே சமயம், கேரளாவிலும் தமிழகத்திலும் வாக்காளர்கள் இரட்டை இன்ஜின் அரசு ஐடியாவை ஒப்புக்கொண்டனர். ஆனால், அந்த ஐடியாவால் தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கேரள மக்கள் எல்.டி.எப் கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கும் வாக்களித்தனர்.
2017-2020 ஆம் ஆண்டில், பஞ்சாப், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவாகவும், திரிபுரா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மிகவும் அதிகமாகவும் இருந்தது.
திரிபுரா, உத்தரகாண்டில் பாஜக வெற்றி பெற்றது, ஆனால் டெல்லி, ராஜஸ்தானில் ‘இரட்டை இன்ஜினுக்கு’ வலுவான ஆதரவு இருந்த போதிலும் வெற்றிபெற முடியவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தின் பாதையை, ராஜஸ்தானும் பின்பற்றியது . அங்கு இரட்டை இன்ஜின் யோசனைக்கு ஆதரவு இருந்தாலும், மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தனர்.
கருத்தை ஏற்றுக்கொள்ளுதல் குறைகிறது
அண்மையில் அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் இரட்டை இன்ஜின் அரசை ஏற்றுக்கொள்வதில் சரிவைக் காட்டுகின்றன. அசாம் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் நிகர ஒப்பந்தம் சரிவை காட்டின.
இரட்டை இன்ஜின் கருத்தை ஏற்றுக்கொள்வதில் அதிகபட்சமாக கேரளாவில் தான் 54 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் 40 சதவீதம், மேற்கு வங்கத்தில் 33 சதவீதமும் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், இந்த மாநிலங்களில் 2016 ஆண்டில் இரட்டை இன்ஜின் கருத்துக்கு இவ்வளவு வலுவான எதிர்ப்பை காணவில்லை.
இந்த கருத்துகணிப்பு முடிவுகளின்படி, இரட்டை இன்ஜின் அரசு, யோசனையின் அடிப்படையில் தேர்தல் களத்தில் நல்ல உத்தியாக இருக்கலாம். ஆனால், யோசனைக்கான ஆதரவிற்கும் வாக்களிக்கும் முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பதை பார்க்கமுடியவில்லை. மாநிலங்கள் தங்களின் பாரம்பரிய வாக்கு முறைகளை பின்பற்றுகின்றன.
அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் எதிர்ப்புகள் காணப்பட்டாலும், கணிசமான பிராந்தியக் கட்சிகளைக் கொண்ட மாநிலங்களிலும், பாஜக வலுவான தேர்தல் முன்னிலையில் உள்ள மாநிலங்களிலும் இந்த யோசனைக்கான ஆதரவு அதிகமாக இருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே இரட்டை இன்ஜின் அரசாங்கம் உள்ளது. எனவே, அங்கு பதவியிலிருந்தப்படி வாக்காளர்களை பாஜக எதிர்கொள்வதால், சுவாரஸ்யமான தேர்தல் களமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil