4ஜி அலைக்கற்றைகள் ஏலம்; முடிவு எப்போது தெரிய வரும்?

மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே களத்தில் இருப்பதால், ஏல முடிவுகள் சில நாட்களிலேயே அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Aashish Aryan

நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் 4ஜி அலைகளுக்கான, 700, 800, 900, 1800, 2100, 2300, மற்றும் 2500 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களுக்கான ஏலம் திங்கள் கிழமை அன்று துவங்கியுள்ளது. 2,251 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ரூ. 3.92 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

தற்போது நடத்தப்படும் ஏலத்தில் 5ஜிக்கான அலைகள் ஏதும் இல்லை. எனவே தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை ஒரு அடக்கமான விவகாரமாக பார்க்கின்றார்கள். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இதில் ரூ. 10 ஆயிரம் கோடியை “எர்னெஸ்ட்” முதலீடாக செலுத்தியுள்ளது. ரூ. 3000 கோடி மற்றும் ரூ. 475 கோடியை முறையே ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர்.

Earnest money deposit என்பது, டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தின் போது திரும்பி எடுத்துக் கொள்ளும் வகையில் வைக்கும் முதலீடு ஆகும். அதிக அளவில் செலுத்தப்படும் earnest money நிறுவனங்களுக்கு அதிக புள்ளிகளை பெற்றுத் தரும். எனவே அந்நிறுவனங்கள் பலதரப்பட்ட சேவைகளுக்காக அலைகளை ஏலம் எடுக்கும் சுதந்திரத்தை இது வழங்கும்.

கிரெடிட் சூயிஸின் படி, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் இருந்து வாங்கிய 44 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை இம்முறை புதுப்பிக்க உள்ளது. வரவிருக்கும் ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு சொந்தமான 55 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில் கூடுதல் ஸ்பெக்ட்ரத்தையும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, க, ரிலையன்ஸ் ஜியோ மொத்த மூலதனச் செலவினம் ரூ .240 பில்லியனை இருப்பு விலையில் வைக்கும். நீண்ட கால ஒத்திவைக்கப்பட்ட கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், கிட்டத்தட்ட 60 பில்லியன் ரூபாயை முன்பணமாக செலுத்த வேண்டும். பாரதி ஏர்டெல் ரூ. 3000 கோடியை முதலீடு செய்திருப்பதால் தங்களின் பழைய அலைக்கற்றைகளை புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் புதிதாக எதையும் வாங்காது என்று பலரும் கூறுகின்றனர்.

எத்தனை நாட்களில் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்?

மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே களத்தில் இருப்பதால், ஏல முடிவுகள் சில நாட்களிலேயே அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தனியார் நிறுவனங்களைத் தவிர, வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட புதிய நிறுவனங்களும் கூட இந்த அலைகளை ஏலம் எடுக்க தகுதியுடையவர்கள். எவ்வாறாயினும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு கிளையை அமைத்து ஒரு இந்திய நிறுவனமாக அது பதிவு செய்யப்பட வேண்டும், அல்லது ஒரு இந்திய நிறுவனத்துடன் இணைந்து ஏலத்தை வென்ற பிறகு அலைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  எவ்வாறாயினும் இந்த சூழலில் புதிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைக்கு நுழைய குறைந்தபட்சமே வாய்ப்புகள் உள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whats at stake in the spectrum auction when will we know the winners

Next Story
உங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை? எப்படி விண்ணப்பம் செய்வது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express