Advertisment

ராணுவத்திற்கு புதிய போர் சீருடை… டிஜிட்டல் பிரின்டிங் சிறப்பு அம்சங்கள் என்ன?

முதன்முறையாக, இந்த டிஜிட்டல் பிரின்டிங் சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கு வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராணுவத்திற்கு புதிய போர் சீருடை… டிஜிட்டல் பிரின்டிங் சிறப்பு அம்சங்கள் என்ன?

கடந்த 1949ஆம் ஆண்டு முதல், இந்திய ராணுவ தினம் ஜனவரி 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளானது, ஜெனரல் கே.எம் கரியப்பா, ஜெனரல் எஃப்.ஆர் ராய் புச்சரிடமிருந்து இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக பதவியேற்ற நாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

Advertisment

சனிக்கிழமை(ஜனவரி 15) நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, அணிவகுப்பு மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவனே உரையாற்றினார். அப்போது, இந்திய ராணுவத்துக்கு புது வடிவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சீருடை இந்திய ராணுவத்தில் உள்ள 12 லட்சம் வீரர்களுக்குப் பேஸ் வாரியாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தின் சீருடை ஏன் முக்கியம்?

எந்தவொரு ராணுவப் படைக்கும் சீருடைகள் மிகவும் தனித்துவமான அடையாளம் காணும் அம்சங்களில் ஒன்றாகும். சீருடை பொதுமக்களை ராணுவ வீரர்களிடமிருந்து வேறுபடுத்துவது மட்டுமல்லாமல் வெவ்வேறு ராணுவ வீரர்களிடையே, ஒற்றுமை, இணக்கம் மற்றும் ஒழுக்கத்தை உருவாக்குகிறது.

புதிய சீருடையில் என்ன மாற்றங்கள்?

2008 முதல் பயன்பாட்டில் உள்ள பழைய சீருடையுடன் ஒப்பிடும்போது, புதிய போர் சீருடையில் முக்கிய மாற்றங்களானது புதிய உருமறைப்பு வண்ணக்கலவை, டிஜிட்டல் பிரின்டிங் ஆகும்.

இந்த புதிய உருமறைப்பு வண்ணக்கலவை சீருடை மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் ஆகிய பழைய நிறங்களைக் கொண்டிருந்தாலும், டிஜிட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாக இந்த ஆடை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

புதிய சீருடையில் பயன்படுத்தப்படும் துணியின் சிறப்பு அம்சங்கள்?

இந்த புதிய டிஜிட்டல் சீருடையின் துணி, அதை இலகுவாகவும், உறுதியானதாகவும், அதிக சுவாசிக்கக்கூடியதாகவும், வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு உகந்ததாகவும் வைக்கிறது.

அதில் பருத்தி மற்றும் பாலியஸ்டர் விகிதம் 70:30 ஆகும், இது விரைவாக உலரவும், ஈரப்பதம் மற்றும் வெப்பமான நிலையில் அணிய வசதியாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும்.

ராணுவத்தின் கூற்றுப்படி, இந்த புதிய உருமறைப்பு போர் சீருடை துணி 15 சதவீதம் இலகுவானது மற்றும் தற்போதைய சீருடைக்கு எதிராக 23 சதவீதம் அதிக வலிமை கொண்டது. மேலும், நீண்ட மணிநேர பயன்பாடு மற்றும் வசதியை அனுமதிக்கின்றன.

சீருடையின் புதிய அம்சங்கள்?

புதிய சீருடையில், பழையதைப் போலல்லாமல், ஒரு போர் டி-ஷர்ட் மற்றும் அதன் மேல் ஒரு சட்டை உள்ளது.

இந்த சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்கவிட்டுக்கொள்ளலாம்.

புதிய ஜாக்கெட்டில் மேல் பாக்கெட்டுகள், வெர்டிக்கல் ஒப்பனிங்குடன் கீழ் பாக்கெட்டுகள்,பின்புறத்தில் கத்தி வைத்திட இடம், இடது ஸ்லீவில் ஒரு பாக்கெட், இடது முன்கையில் ஒரு பேனா ஹோல்டர் மற்றும் மேம்பட்ட தரமான பட்டன்கள் உள்ளன.

கால்சட்டைகள் எலாஸ்டிக் மற்றும் பட்டன் மூலம் சரிசெய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இடுப்பு பகுதியில் இரட்டை அடுக்கு அம்சம் உள்ளது. அதே போல், தொப்பிகளின் சுற்றளவு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலும், ராணுவத்தின் லோகோ முந்தையதை விட சிறந்த தரத்தில் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது..

முதன்முறையாக, இந்த டிஜிட்டல் பிரின்டிங் சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கு வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சீருடையை வடிவமைத்தவர் யார், ராணுவத்திற்குத் தேர்ந்தெடுத்தவர் யார்?

புதிய சீருடை வடிவமைப்பு செயல்முறை ராணுவத் தளபதி ஜெனரல் நரவனேவால் இறுதி செய்யப்பட்டாலும், ஜெனரல் நரவனே ஜனவரி 2020 இல் பொறுப்பேற்பதற்கு முன்பே தொடங்கப்பட்டது. ராணுவ டிசைனை தேர்ந்தெடுப்பது ராணுவத் தளபதிகளின் கூட்டு முடிவாகும்.

இந்த சீருடை ஏழு பேராசிரியர்கள், மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு முன்னாள் மாணவர்கள் அடங்கிய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) 12 பேர் கொண்ட குழுவால் வடிவமைக்கப்பட்டது.

comfort,climate,camouflage and confidentiality ஆகிய 4C-ஐ அடிப்படையாக கொண்டு ராணுவத்துடன் ஆலோசனை செயல்முறை மூலம் சீருடை உருவாக்கப்பட்டது.

NIFT ஆல் ராணுவத்திற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஐந்து விருப்பங்களில் இருந்து இந்த துணி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல், வடிவமைக்கப்பட்ட 17 விருப்பங்களில் இதனை ராணுவத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

துணி, உருமறைப்பு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு சிறந்த வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ச்சியான ஆலோசனை செயல்முறை மூலம் முன்மாதிரிகள் தயாரிக்கப்பட்டன.

புதிய சீருடை சந்தைகளில் கிடைக்குமா?

இந்த புதிய ராணுவ சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும்.

வெவ்வேறு சைஸில் சீருடை தயாரிப்பதை கன்ட்ரோல் செய்யும் வகையில், புதிய சீருடை ஒரு டஜன் தைக்கப்பட்ட நிலையான அளவுகளில் சீருடைகள் வருகிறது.

சீருடைகள் அவற்றின் தனித்துவத்தை பராமரிக்க பார்கோடு மற்றும் க்யூஆர் குறியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய சீருடை, ஆயுத தயாரிக்கும் அமைப்பு அல்லது ராணுவ கேண்டீன்களில் கிடைக்கக்கூடும்.

ராணுவம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு சீருடைகளை தயாரிப்பதற்கான டெண்டர்களை வெளியிடவுள்ளது. சீருடைகள் படிப்படியாக பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

ராணுவத்தின் அனைத்து சீருடைகளும் மாறுகிறதா?

போர் சீருடை மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அமைதிப் பகுதி சீருடை,சடங்கு சீருடைகள் என அழைக்கப்படும் ஆலிவ் கீரீன் உட்பட பல சீருடைகளை ராணுவம் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Military
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment