நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு என்றால் என்ன? யாருக்கெல்லாம் வரக்கூடும்?

ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளைஞர்களை பாதிக்கும் டைப்-5 நீரிழிவு நோய், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (ஐ.டி.எஃப்) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏப்.7 அன்று பாங்காக்கில் நடந்த நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளைஞர்களை பாதிக்கும் டைப்-5 நீரிழிவு நோய், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (ஐ.டி.எஃப்) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏப்.7 அன்று பாங்காக்கில் நடந்த நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Type 5 diabetes

நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு என்றால் என்ன? யாருக்கெல்லாம் வரக்கூடும்?

ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளைஞர்களை பாதிக்கும் டைப்-5 நீரிழிவு நோய், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (ஐ.டி.எஃப்) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (ஐ.டி.எஃப்) தலைவர் பீட்டர் ஸ்வார்ட்ஸ் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தி ஒப்புதல் அளித்தார். ஏப்.7 அன்று பாங்காக்கில் நடந்த நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன?

டைப்-5 நீரிழிவு என்பது ஒற்றை மரபணுவின் பிறழ்வால் ஏற்படும் நீரிழிவு நோயின் ஒரு வடிவமாகும். இது மெலிந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

Advertisment
Advertisements

இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். டைப்-5 நீரிழிவு நோயானது உடல்பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ (BMI) கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும். இது கணைய பீட்டா செல்கள் அசாதாரணமாக செயல்பட காரணமாகிறது. இது இன்சுலின் போதுமான உற்பத்திக்கு வழிவகுக்கிறது என்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சி.எம்.சி) உட்சுரப்பியல் மருத்துவர் நிஹால் தாமஸ் கூறுகிறார். 

இந்த வகை நீரிழிவு நோய் புதியதல்ல. ஏனெனில் இது முதன்முதலில் 1955-ல் ஜமைக்காவில் ஜே-வகை நீரிழிவு நோயாக அறிவிக்கப்பட்டது. 1985-ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு இந்த நிலையை "ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய்" என்று வகைப்படுத்தியது. பின்னர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாததை மேற்கோள் காட்டி 1999-ல் நீக்கப்பட்டது. 

டைப்-5 நீரிழிவு நோய் அறிகுறிகள் என்ன?

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சி.எம்.சி) உட்சுரப்பியல் மருத்துவர் நிஹால் தாமஸ் கூற்றுபடி, ஆசிய இந்தியர்களில் காணப்பட்ட நீரிழிவு நோயின் இந்த தனித்துவமான வடிவம் மரபணு காரணங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். "பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்த உடல்நிறை குறியீட்டெண்(பி.எம்.ஐ) 18.5 கிலோ / மீ 2-க்கும் குறைவாக உள்ளனர். இன்சுலின் பற்றாக்குறை உள்ளது. வழக்கமான டைப்-2 நீரிழிவு நோயை விட மிகக் குறைவு மற்றும் டைப்-1 நீரிழிவு நோயில் காணப்படும் அளவை விட சற்று அதிகமாக உள்ளது. கல்லீரல் உற்பத்தி மற்றும் குளுக்கோஸின் வெளியீடு ரத்த ஓட்டத்தில் குறைவாக உள்ளது. டைப்-2 நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும்போது உடல் கொழுப்பின் கணிசமாக குறைந்த சதவீதத்தை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, புரதங்கள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் உணவு உட்கொள்ளல் கணிசமாகக் குறைவாக உள்ளது" என்று பேராசிரியர் தாமஸ் விளக்குகிறார்.

தாயின் கருப்பையில் ஊட்டச்சத்து குறைபாடு எவ்வாறு தொடங்குகிறது என்பதை புனே கே.இ.எம். மருத்துவமனையின் நீரிழிவு பிரிவின் இயக்குநரும், டைப்-5 நீரிழிவு குழுவின் முக்கிய உறுப்பினருமான மருத்துவர் யாஜ்னிக் விவரிக்கிறார். 

"ஒரு குழந்தை கருப்பையில் வளரும்போது சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது வளரும்போது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும். பல இந்தியர்கள் நீண்ட காலமாக கடின உழைப்பு, காலனித்துவம் மற்றும் பஞ்சங்கள் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அதிகப்படியான உணவும் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஊட்டச்சத்து குறைவாக (அ) அதிகமாக இருக்கும்போது, திடீரென அதிக எடை அதிகரிக்கும்போது, அது டைப்-2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்னும் பின்னும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்தால், அது ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான டைப்-5 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்கிறார் யாஜ்னிக்.

சிகிச்சை முறைகள் என்ன?

டைப்-5 நீரிழிவு நோயாளிகள் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் தாமஸ். குறைந்த பி.எம்.ஐ மற்றும் உடல் செயல்பாடு அளவைப் பொறுத்து, எடை அதிகரிப்பதை உறுதிப்படுத்த போதுமான அளவு கார்ப்ஸ் மற்றும் கொழுப்புகள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். 

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: