பாகிஸ்தான் வியாழக்கிழமை அன்று, இந்தியாவின் ஏவுகணை தங்கள் எல்லைக்குள் 124 கிமீ தாண்டி விழுந்ததாக தெரிவித்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட்டதாக தெரிவித்தது. சோதனையின் போது, ஏவுகணை பாதையை மாற்றி தவறாக செல்வது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்க வேண்டுமா?
நிச்சயம் சொல்ல வேண்டும். 2005 இல் கையெழுத்திடப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் விமான சோதனையின் முன் அறிவிப்பின் கீழ், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுக்கு தரை அல்லது கடலில் ஏவப்பட்ட ஏவப்பட்ட ஏவுகணை சோதனை குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வழங்க வேண்டும்.
சோதனைக்கு முன், விமான பைல்ட் மற்றும் கப்பல் கேப்டன்களை எச்சரிக்க Air Missions (NOTAM) அல்லது Navigational Warning (NAVAREA) ஆகியவைக்கு முறையே தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஏவுகணை சோதனை செய்யும் நாடு, சர்வதேச எல்லை (IB) அல்லது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) ஆகியவற்றிலிருந்து அதன் ஏவுதளம் 40 கிமீக்குள் இல்லை என்பதையும், திட்டமிடப்பட்ட தாக்கப் பகுதி 75 கிமீக்குள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அதனை பாதை சர்வதேச எல்லை அல்லது எல்லை கட்டுப்பாட்டுக் கோடை தாண்டிட கூடாது. எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 40 கிமீ தொலைவில் கிடைமட்ட தூரத்தை நிர்வகிக்க வேண்டும்.
சோதனை செய்யும் நாடு, மற்ற நாட்டிற்கு இந்த 5 நாள்களில் ஏவுகணை சோதனை நடத்தப்படலாம் என மூன்று நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். முன் அறிவிப்பானது, வெளியுறவு அலுவலகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் ரூபுகையில், "இந்த நடவடிக்கைக்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களின் இயக்குநர் ஜெனரலுகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இது குறித்து இந்தியா தரப்பில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருந்தாலும், இதுபோன்ற ஏவுகணைகளுக்கு நாங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை" என்றார்.
எந்த மாதிரி ஏவுகணை அது?
இந்தியாவிலிருந்து வந்த ஏவுகணையை, பாகிஸ்தான் தரப்பு சூப்பர்சோனிக் ஏவுகணை என அழைக்கிறது. இது ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த ஏவுகணைகளில் ஒன்றான பிரம்மோஸ் ஏவுகணையின் சோதனை என சில நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.
இப்திகர் கூற்றுப்படி, 200 கி.மீ தூரம் பயணித்து, நடுவானில் சூழ்ச்சி செய்து, 40,000 அடி உயரத்தில் ஒலியை விட 2.5 மடங்கு முதல் 3 மடங்கு வேகத்தில் பயணித ஏவுகணை என கூறியதவை வைத்து பிரம்மோஸ் என கருதியுள்ளனர்.
பிரம்மோஸ் மாக் 3 இன் அதிகபட்ச வேகம் சுமார் 290 கிமீ ஆகும். 15 கிமீ (சுமார் 50,000 அடி) உயரம் கொண்டது. இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவலாம். அணுசக்தி திறன் கொண்ட இதனை, 200-300 கிலோ எடையுள்ள போர்க்கப்பல்களில் சுமந்து செல்ல முடியும்.
மற்ற வல்லுநர்கள் இந்த ஏவுகணை அணுசக்தி திறன் கொண்ட பிருத்வியின் மாறுபாடாக இருக்கலாம் என கருதுகின்றனர். ஏனெனில், ஏவுகணை ஏவப்பட்ட பகுதி அருகே இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்திற்குப் பொறுப்பான மூலோபாயப் படைக் கட்டளைக்கு சொந்தமான பகுதிகள் இருப்பதாக ஆதரங்கள் கூறுகின்றன. ஆனால், அப்பகுதியில் இந்தியா பிருத்வியை ஒருபோதும் சோதிப்பதில்லை. பாலசோரிலிருந்து மட்டுமே இதுகவை சோதித்துள்ளது.
அதனை பாதை சொல்வது என்ன?
ஏவுகணை நடுவானில் திசையை மாற்றியது. பாகிஸ்தான் கூற்றுப்படி, எல்லையில் இருந்து 104 கிமீ தொலைவில் உள்ள சிர்சாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, இந்திய எல்லைக்குள் சுமார் 70-80 கிமீ தூரம் பயணித்து, இந்திய ராணுவத்தின் மகாஜன் ஃபீல்ட் துப்பாக்கிச் சூடு தளத்தை நோக்கி சென்றது. ஆனால், திடீரென திசையை மாற்றி பாகிஸ்தானுக்குள் புகுந்தது. எங்கள் எல்லைக்குள் 124 கிமீ பயணித்து தரையில் விழுந்தது என தெரிவித்துள்ளது.
டெல்லி ஏர் பவர் ஸ்டடீஸ் (CAPS) டிங்க்ஸ் டேங்க் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் அனில் சோப்ரா கூறுகையில், ஏவுகணை தனது திசையை மாற்றுவதற்கு மிகக் குறைவான காரணங்களே உள்ளது. கிடைத்த தகவல்படி, மார்க் செய்த திசையில் பறந்துகொண்டிருந்த ஏவுகணை, சுமார் 100 கிலோ மீட்டருக்கு பிறகு, திடீரென பாதையை மாற்றியுள்ளது.
க்ரூஸ் ஏவுகணைக்கு, தரையில் இருந்து ஏவப்படும் முன், "நீங்கள் இலக்கு தகவல்களை உள்ளீட வேண்டும். அதன்பிறகு, அது தானாகவே செயல்படும். சில ஏவுகணைகளுக்கு மட்டுமே, அது ஏவப்பட்ட பிறகும், இலக்கு குறியை மாற்றியமைக்க முடியும்.
ஒன்று இலக்கு தகவல் சரியாக இருக்காது தான். ஆனால், இவ்விவகாரத்தில் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை நோக்கி பயணித்துள்ளது, பின்னர் தான் பாதையை மாற்றியுள்ளது. தவறான இலக்கு தகவலை பதிவிட்டிருந்தால், அது முதலே நேராக அங்கு சென்றிருக்க வேண்டும். எனவே, இவ்விவகாரத்தில் இலக்கு தகவல் உள்ளீட்டில் எவ்வித தவறும் இல்லை.
மற்றொரு சாத்தியம் என்னவென்றால், "யாராவது ஏவுகணையை பறக்கும் போது, ஏதேனும் சைபர் தொழில்நுட்பம் மூலம் ஜாம் செய்து, திசையை மாற்றியிருக்கலாம். இது முழுவதும் யூகம் மட்டுமே ஆகும்.
மேலும், இத்தகை ஏவுகணைகள் பாதையை மாற்றும்போது, அதனை சுயமான அழித்துக்கொள்ளும் வசதியும் இருக்க்கும். ஆனால், இந்த விவகாரத்தில் ஏவுகணை பாதையை மாற்றியும், சுயமான அழித்துக்கொள்ளும் வசதியை ஏன் ஆக்டிவேட் செய்யமுடியவில்லை என்பது தெரியவில்லை.
பாகிஸ்தான் ஏன் அதை வீழ்த்தவில்லை?
பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு நடவடிக்கை மையம், இந்திய எல்லையில் இருந்து அதிவேக பறக்கும் வந்ததாக தெரிவித்துள்ளது. அது சிர்சாவிலிருந்து வந்ததை அறிந்திருந்தனர். ஆரம்பத்தில் சரியாக சென்ற ஏவுகணை, திடீரென திசையை மாற்றி, பாகிஸ்தானின் வான்வெளியை தாண்டி மியான் சன்னுவுக்கு அருகில் விழுந்தது.
ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறைகளின்படி, அந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் தொடர்ச்சியாக கவனித்து வந்ததாகவும், ஆனால் அந்த ஏவுகணை எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்ததால் அதனை தடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சோப்ரா, அதிக வேகத்தில் ஏதாவது வரும்போது, அதனை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. இது ரெட் அலர்ட்டின் உச்சகட்ட நிலை அல்ல. இது அமைதியான காலம் என்பதை காரணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் உங்களால் எதுவும் செய்திட முடியாது, ஏனென்றால் அது மிக வேகமாக வருகிறது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.