Kangana Ranaut : பாலிவுட் நடிகை கங்கனா ரானாவத்தின் ட்விட்டர் கணக்கை நிரந்திரமாக முடக்கியது ட்விட்டர் நிறுவனம். மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதிற்கு பிறகு ஏற்பட்ட கலவரம் குறித்தும் வன்முறைக்கான அழைப்பு போல் தோன்றியதை ட்வீட் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய கணக்கு முடக்கப்பட்டது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இணையத்திற்கு வெளியே வன்முறையை தூண்டும் ஆன்லைன் நடவடிக்கைகளுக்கு நாங்கள் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்பதில் தெளிவாக உள்ளோம். ட்விட்டர் விதிகளை குறிப்பாக வெறுக்கத்தக்க நடத்தை கொள்கைகளை தவறான நடத்தை தொடர்பாக கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறியதால் மேற்கூறப்பட்ட கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ங்கள் சேவையில் உள்ள அனைவருக்கும் ட்விட்டர் விதிகளை நாங்கள் நியாயமாகவும், பாரபட்சமின்றி செயல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை நடைபெற்ற போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் வெளியிட்ட ட்வீட்களை தொடர்ந்து அவருடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிரந்த முடக்கம் என்றால் என்ன என்பதை இங்கே காண்போம்.
நிரந்த நீக்கம்
ட்விட்டரின் கொள்கை பக்கத்தில், இது இந்நிறுவனம் எடுக்கும் மிக கடுமையான நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளது. மேலும் அந்த கண்க்கு உலகம் முழுவதும் நீக்கப்பட்டும், அந்த நபர் புதிய கணக்கு உருவாக்குவதை தடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். இதன் பொருள் இனி கங்கனா ரனாவத் புதிய கணக்கு துவங்கி ட்விட்டர் வலைதளத்திற்குள் வரமுடியாது என்பதாகும்.
நிரந்திரமாக முடக்கம் செய்யும் போது அந்த பயனாளருக்கு அந்நிறுவனத்தின் கொள்கைகள் விதி மீறப்பட்டிருப்பது குறித்து கூறப்படும். மேலும் எந்த கொள்கைகள் மீறப்பட்டிருக்கிறது, எந்த ட்வீட் அந்த கொள்கையை மீறியுள்ளது என்றும் கூறும்.
ஆனால் இந்த இடைநீக்கத்திற்கு எதிராக கங்கனா மேல்முறையீடு செய்யலாமா?
ஆம். ட்விட்டர் விதிமுறை மீறியதால் நிரந்தர முடக்கத்திற்கு ஆளான நபர்களுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகிறது. ட்விட்டரின் சப்போர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது படி, யாரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளாதோ அவர்கள் ப்ளாட்ஃபார்ம் இண்டெர்ஃபேஸ் அல்லது அறிக்கை மூலமாக மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டில் இடைநீக்கம் செல்லுபடியாகும் எனக் கண்டறியப்பட்டால், ட்விட்டர் அதன் ஆதரவு பக்கத்தின்படி, “கணக்கு மீறிய கொள்கை குறித்த தகவலுடன் முறையீடு” செய்வதற்கு பதிலளிக்கும்.
மேலும் படிக்க : ஆக்ஸிஜன் பற்றாக்குறை : சிலிண்டர் உற்பத்தி ஆலைகளை மூடும் அவலம்
கங்கனாவின் கணக்கிற்கு எதிராக ட்விட்டர் வேறு என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும்?
பொதுவாக தவறான முறையில் மோசமாக பதிவிடப்படும் அப்யூசிவ் வகை ட்வீட்களை மற்ற நாட்டு பயனர்கள் பார்வையில் இருந்து மறைக்கலாம். அல்லது ட்விட்டரின் ரீச்சை குறைக்களாம். ஆனால் கங்கனா விவகாரத்தில் அது மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ரீட் ஒன்லி மோடை செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவ்வாறான ட்வீட்களை வெளியிட்ட ஒரு ஆரோக்கியமான கணக்கிற்கு மட்டுமே பொருந்தும். இது போன்ற விவகாரங்களின் ட்வீட்டின் எண்ணிக்கை, ரிட்வீட் மற்றும் லிங்க் கண்டெண்ட்டுகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க முடியும் இந்த அமலாக்க நடவடிக்கையின் காலம் மீறலின் தன்மையைப் பொறுத்து 12 மணி முதல் 7 நாட்கள் வரை இருக்கலாம் என்று ட்விட்டரின் ஆதரவு பக்கம் தெரிவிக்கிறது.
சில நேரங்களில் ட்விட்டர் இந்த தளத்தில் மற்றவர்களை துன்புறுத்தவில்லை என்பதை உறுதி செய்யுங்கள் என்று பயனர்களிடம் கேட்கும். போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கேட்கும். இது தவறான நோக்கங்களுக்காக பல கணக்குகளை இயக்கும் நபர்களை அடையாளம் காணவும், இதுபோன்ற கணக்குகளில் நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்று ட்விட்டர் கூறுகிறது.
ஆனால் கங்கனா ரனாவத் விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் அவருக்கு ஏற்கனவே நிறைய எச்சரிக்கை தரப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது, இந்த உறுதி செய்யப்பட்ட கணக்கில் 3 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார் கங்கனா ரனாவத். பல்வேறு முறை எச்சரிக்கை செய்த பிறகும் கூட வெளியான இந்த ட்வீட், ட்விட்டர் தன்னுடைய முடிவை எடுக்க வழி வகை செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil