இந்தியாவில் எப்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது?

When Was India’s Interim Government Formed:1946 ஆம் ஆண்டு இதே நாளில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பரம எதிரிகளான காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட இந்த ஒரே அமைச்சரவை மட்டும்தான்.

when was india's interim government formed, india, interim govt, congress, muslim league, இந்தியாவின் இடைக்கால அரசாங்கம், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஜவஹர்லால் நேரு, jawaharlal nehru, british rule in india,Tamil indian express news
when was india's interim government formed, india, interim govt, congress, muslim league, இந்தியாவின் இடைக்கால அரசாங்கம், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஜவஹர்லால் நேரு, jawaharlal nehru, british rule in india,Tamil indian express news

ஓம் மராதே, சப் எடிட்டர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,
சட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஆர்வம் உடையவர்
When Was India’s Interim Government Formed: 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 2  இதே நாளில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பரம எதிரிகளான காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டது இந்த ஒரு அமைச்சரவை மட்டும்தான். இடைக்கால அரசாங்கம் பெரும் சுயாட்சியுடன் செயல்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி வரை அதிகாரத்தில் இருந்தது. அதன் பின்னர் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் டொமினியன்களாக வெற்றி பெற்றன.

இந்தியாவின் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வழிவகுத்த அதன் உறுப்பினர்கள் யார்? அது என்ன முடிவுகளை எடுத்தது?

1942-இல் கிரிப்ஸ் தூதுக்குழு தொடங்கியதுடன் இந்தியாவில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க காலனி ஆட்சி அதிகாரிகளால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1946 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லீ அனுப்பிய பிரிட்டிஷ் அமைச்சரவை திட்டத்தின் முன்மொழிவுகளைத் தொடர்ந்து அரசியலமைப்பு சபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலில், சட்டமன்றத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்றது, முஸ்லிம் லீக் முஸ்லிம் வாக்காளர்களிடையே தனது ஆதரவை பலப்படுத்தியது.

பின்னர், வைஸ்ராய் வேவெல் இந்திய பிரதிநிதிகளுக்கு இடைக்கால அரசாங்கத்தில் சேர அழைப்பு விடுத்தார்.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் ஒரு கூட்டாட்சி திட்டம் வரையப்பட்டது. ஆனால், இந்தியாவின் சுதேச மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த கூறு ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, இடைக்கால அரசாங்கம் 1919 ஆம் ஆண்டு பழைய இந்திய அரசு சட்டத்தின்படி செயல்பட்டது.

இடைக்கால அமைச்சரவை

செப்டம்பர் 2, 1946 அன்று காங்கிரஸ் கட்சி அரசு அமைத்தது. செப்டம்பர் 23 அன்று, அகில இந்திய காங்கிரஸ் குழு (ஏ.ஐ.சி.சி) காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மான ஒப்புதலை அளித்தது.

முஸ்லீம் லீக் ஆரம்பத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது. முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஐந்து அமைச்சகங்களில் மூன்று அசாஃப் அலி, சர் ஷபாத் அகமது கான், சையத் அலி ஜாகீர் ஆகியோர் இடம்பிடித்துக்கொண்டனர். அனைவருமே முஸ்லிம் லீக் அல்லாத முஸ்லீம் பிரதிநிதிகள். இரண்டு பதவிகள் காலியாக இருந்தன.

இருப்பினும், முஸ்லீம் லீக்கிற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டால் ஒதுக்கப்பட்ட ஐந்து இலாக்காக்களையும் வழங்க வேவெல் பிரபு ஒப்புக்கொண்ட பிறகு, அடுத்து வந்தவர்கள் இறுதியாக இணைந்தனர்.

அக்டோபரில், புதிய முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. முந்தைய அணியைச் சேர்ந்த சரத் சந்திரபோஸ், சர் ஷபாத் அகமது கான் மற்றும் சையத் அலி ஜாகீர் ஆகியோர் நீக்கப்பட்டனர். பல்தேவ் சிங், சி.எச். பாபா, மற்றும் ஜான் மத்தாய் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தினர்.

அக்டோபர் 1946 க்குப் பிறகு இருந்த அமைச்சரவை பின்வருமாறு:

காங்கிரஸ்

செயற்குழு, வெளிவிவகார மற்றும் காமன்வெல்த் உறவுகள் துணைத் தலைவர்: ஜவஹர்லால் நேரு

உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை: வல்லபாய் படேல்

விவசாயம் மற்றும் உணவுத்துறை: ராஜேந்திர பிரசாத்

கல்வி மற்றும் கலைத் துறை: சி.ராஜகோபாலாச்சாரி

தொழிலாளர் துறை: ஜெகஜீவன் ராம்

ரயில்வே மற்றும் தகவல்தொடர்புத் துறை: ஆசஃப் அலி

சுரங்க வேலை மற்றும் எரிசக்தி துறை: சி.எச்.பாபா

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்

வணிகத்துறை: இப்ராஹிம் இஸ்மாயில் சந்த்ரிகார்

நிதி துறை: லியாகத் அலி கான்

சுகாதாரத்துறை: கஜன்ஃபார் அலி கான்

சட்டத்துறை: ஜோகேந்திரநாத் மண்டல்

அஞ்சல் மற்றும் விமானத் துறை: அப்துர் ராப் நிஷ்தார்

அமைச்சரவையின் சில முடிவுகள்

செப்டம்பர் 26, 1946 அன்று, நேரு அனைத்து நாடுகளுடனும் நேரடி இராஜதந்திர உறவுகளிலும், நல்லெண்ணப் பணிகளிலும் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை அறிவித்தார். மேலும், அவர் காலனிய நாடுகளின் சுதந்திரத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.

நவம்பர் 1946 இல், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துக்கான மாநாட்டுக்கு இந்தியா ஒப்புதல் அளித்தது. அதே மாதத்தில், ஆயுதப்படைகளை தேசியமயமாக்குவது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பல நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர வழிகள் திறக்கப்பட்டன. ஏப்ரல் 1947 இல், டாக்டர் ஹென்றி எஃப். கிரேடியை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் நெதர்லாந்துடனான தூதரக அளவிலான இராஜதந்திர உறவுகளும் அதே ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. மே மாதத்தில், முதல் சீன தூதர் டாக்டர் லோ சியா லுயென் வந்தார். கொல்கத்தாவில் உள்ள பெல்ஜிய தூதரக ஜெனரல் பெல்ஜியத்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

ஜூன் 1 ஆம் தேதி இந்திய காமன்வெல்த் உறவுகள் துறை மற்றும் வெளிவிவகாரத் துறை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு வெளிவிவகாரங்கள் மற்றும் காமன்வெல்த் உறவுகள் என்ற ஒரே துறையாக அமைந்தது.

ஜூன் 3 ஆம் தேதி பிரிவினை அறிவிக்கப்பட்ட பிறகு, ஜூன் 5 ஆம் தேதி நிலைமையை சமாளிக்க ஒரு பிரத்யேக அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டது. அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், லியாகத் அலிகான், அப்துர் ராப் நிஷ்தார் மற்றும் பல்தேவ் சிங் ஆகியோர் இருந்தனர்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: When indias interim government was formed who were its members

Next Story
உணவுப் பொருட்களை வீண் செய்வதால் இத்தனை இழப்புகளா?global food wastage costing global economy 940 billion dollars
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X