Liz Mathew
தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை பதற்றத்தில் சீனா - இந்தியா உறவுகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு டோக்லாம் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை எல்லையை பார்வையிடுதல், வெளிவிவகாரங்கள் துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தீவிரமான கலந்துரையாடல்கள், சாட்சியங்களுடன் கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னை குறித்து விரிவான ஒரே அறிக்கை பொதுமக்களுக்கு கிடைக்கப்பட்டுள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
சஷி தரூர் தலைமையிலான வெளிவிவகார நிலைக்குழு சமர்ப்பித்த, டோக்லாம் உள்ளிட்ட சீன-இந்தியா உறவுகள், எல்லை நிலைமை மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு பற்றிய அறிக்கையில் சீனாவுடன் கையாளும் போது ஆரோக்கியமான சந்தேகம் இருக்க வேண்டும் என்று அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. கடினமான கேள்விகள் மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டை பின்பற்றிய பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று சஷி தரூர் வெள்ளிக்கிழமை டுவிட்டரில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி டோக்லாம் பிரச்னை பற்றிய நிலைப்பாட்டை எழுப்பிய போதிலும், அவையில் விரிவான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும், அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த விவகாரத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த நிலைப்பாடு கவலைக்குரியது. ஆனால், அது சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோசித்து தீர்க்கப்படும் என்று கூறினார். ஜூன் 2017-ல், இந்தியா-பூட்டான்-திபெத் முத்தரப்பு சந்திப்பி நடைபெற்றது. அது இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான புரிந்துணர்வை மீறும் வகையில் பி.எல்.ஏ பணியாளர்கள் டோக்லாமுக்குள் நுழைந்தபோது தொடங்கியது. அது எல்லைப் பணியாளர்களை விலக்கிக்கொண்டதன் மூலம் தீர்க்கப்பட்டது.
அறிக்கை தயாரித்த இந்த நிலைக்குழு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் சீனாவின் அத்து மீறல்கள் உட்பட இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பாதுகாப்பு மற்றும் வெளியுறவு செயலாளர்கள் தெளிவுபடுத்திய மிகக் குறைந்த ஆவணங்களில் ஒன்றாகும்.
டோக்லாம் நிலைப்பாடு குறித்த விவாதத்தின்போது, இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள அப்போதைய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், அவருக்கு அடுத்து வந்த விஜய் கோகலே மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா ஆகியோர் நிலைக்குழு முன் சாட்சியமளித்தார். அதில்,
டோக்லாம் பீடபூமியைச் சுற்றியுள்ள சீனர்களின் இருப்பு மற்றும் எதிர்காலத்தில் இதேபோன்ற சம்பவங்கள் நிகழும் சாத்தியம் ஆகியவற்றைக் குறிக்கும் பல அறிக்கைகள் குறித்து அக்கறை கொண்ட பாதுகாப்புச் செயலாளர் நிலைக்குழுவிற்கு தெளிவுபடுத்தியிருந்தார். மக்கள் விடுதலைப் படை துருப்புக்கள் தங்கள் சொந்த எல்லைக்குள் இருந்தன. அவர்கள் நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுமில்லை.
இருப்பினும், இந்த அறிக்கை, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். அரசாங்கம் நேருக்கு நேராக எந்தவொரு சீன நடவடிக்கைகளையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. என்றாலும், டோக்லாம் பீடபூமியில் உள்ள பிற பகுதிகளுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் போது ஒரு தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியது.
மேலும், இந்த குழு குறிப்பிடுகையில், “அவர்கள் தங்களது படைகளை டோக்லாமில் இருந்து தற்போதைக்கு திரும்பப் பெற்றிருந்தாலும், சீனாவின் ராஜந்தந்திர நோக்கங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. எனவே, எதிர்காலத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக அதைப் பற்றி விழிப்புணர்வைக் குறைக்க வேண்டாம் என்று குழு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
31 பேர் கொண்ட இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர்கள் ஃபெரோஸ் வருண் காந்தி, ஸ்வப்பன் தாஸ்குப்தா மற்றும் தற்போதைய மாநிலங்களுக்கான வெளிவிவகார அமைச்சர் வி முரளிதரன், என்.சி.பி தலைவர் சுப்ரியா சுலே, திமுக எம்.பி கனிமொழி மற்றும் சிபிஐ-எம் மொஹமது சலீம் ஆகியோர் இருந்தனர்.
நாடாளுமன்றக் குழுக்கள்
மசோதாக்கள் மற்றும் அவையில் விவாதிக்கப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தவிர, நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் பிரச்சினைகள் மற்றும் சட்டங்கள் குறித்து மேலும் விரிவான மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இதில் அனைத்து முக்கிய கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களுக்கு உள்ள அரசியல் வேறுபாடுகளைப் பற்றி அதிகம் கருத்தில் கொள்ளாமல் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இரு அவைகளிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த சிறிய பிரிவுகளில் கணிசமான அளவு நாடாளுமன்ற பணிகள் செய்யப்படுகின்றன. அரசியல் கட்சிகள் ஆண்டு முழுவதும் பல்வேறு அமைச்சகங்களின் விஷயங்கள், மசோதாக்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களில் செயல்படுகின்றன. இந்த அறிக்கைகள் மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அறிக்கைகள் குறித்து அவை குறிப்பிட்ட விவாதத்தை நடத்துவதில்லை. ஆனால், அது பெரும்பாலும் மசோதாக்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களின் போது குறிப்பிடப்படுகிறது. குழு கூட்டங்கள் உறுப்பினர்கள் டொமைன் வல்லுநர்களுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளுடனும் ஈடுபடக்கூடிய ஒரு மன்றத்தையும் வழங்குகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"