அடுத்த ஆண்டு முதல் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சண்டீகர், குருகிராம், டெல்லி, ஜம்நகா், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்திநகா் ஆகிய 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
ஏன் இந்த நகரங்களுக்கு மட்டும் முதலில் 5ஜி?
ஏற்கனவே, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும், எரிக்சன் மற்றும் நோக்கியா போன்ற தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த நகரங்களில் 5ஜி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனைகளுக்குப் பெரிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று, 4ஜி சேவை பயன்பாடு அதிகளவில் இருப்பதால், எளிதாக 5ஜி சேவைக்கு அப்கிரேட் செய்திட வைக்க வேண்டும்.
அதே போல், தொழில் வல்லுநர்கள் கூறுகையில், 5G சேவைகளுக்கான செலவுகள் ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் சேவையை அறிமுகப்படுத்துவது தான் சரியான முடிவாக இருக்கும்.
மூன்றாவது காரணம், இந்த நகரங்களின் தான் 5G பேண்டுகளை சோதனை செய்வதற்கு ஏற்ற சுவர் வளாகங்கள் மற்றும் திறந்தவெளிகள் போன்ற அனைத்து வகையான இடங்களும் வழங்குகின்றன.
5ஜி தொழில்நுட்பம் என்றால் என்ன?
5ஜி தொழில்நுட்பம் என்பது, மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாகும். இது லோ, மிட், ஹை என மூன்று வகையான பேண்டுகளில் இயங்கவுள்ளது. அந்த பேண்டுகளுக்கு ஏற்ப பயனாளர்களுக்கு இணையதளம் வேகம் கிடைக்கக்கூடும்.
லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரமின் கவரேஜ் பெரிய அளவில் இருந்தாலும், அதன் இணைய வேகம் 100 எம்பிபிஎஸ் (வினாடிக்கு மெகாபிட்கள்) மட்டுமே இருக்கும். அதிவேக இணைய வேகம் தேவையில்லாத நிறுவனங்களும், மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைந்த-பேண்ட் ஸ்பெக்ட்ரம் தொழில்களின் சிறப்புத் தேவைகளுக்கு உகந்ததாக இருக்காது.
மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் குறைந்த-பேண்ட்டை விட அதிக வேகத்தை வழங்குகிறது. ஆனால் அதன் கவரேஜ் பகுதி மற்றும் சிக்னல்கள் வலிமை ஆகியவற்றில் வரம்புகள் உள்ளது. இந்த மிட் பேண்ட் ஸ்பெக்ட்ரமை தொழில்துறைகள் மற்றும் சிறப்பு தொழிற்சாலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஹை-பேண்ட் ஸ்பெக்ட்ரம் தான் இந்த மூன்றிலும் அதிக வேகத்தை வழங்குகிறது. ஆனால் மிகக் குறைந்த கவரேஜ் கொண்டிருந்தாலும், அதன் சிக்னல் வலிமை பலமாக இருக்கும். இந்த ஸ்பெக்ட்ரமில் உள்ள வேகம் 20 ஜிபிபிஎஸ் (வினாடிக்கு ஜிகாபிட்ஸ்) அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் 4ஜியில் அதிகபட்ச இணைய தரவு வேகம் 1 ஜிபிபிஎஸ் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
5ஜி சோதனையில் இந்தியாவின் நிலை என்ன?
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறும் என்று அரசு தரப்பில் கூறியிருந்தாலும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இன்னும் தங்கள் சோதனைகளை முடித்து பல்வேறு அம்சங்களைச் சோதிக்காததால், இன்னும் காலதாமகலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பங்குதாரர்களின் ஆலோசனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அதன் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் DoT க்கு சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாரதி ஏர்டெல் ஏற்கனவே சந்தையில் உள்ள மொபைல் போன்களுக்கு எரிக்சனுடன் இணைந்து சோதனைகளை நடத்தியுள்ளது. வோடபோன் நிறுவனமும் வணிக தீர்வுகளுக்காக சிலவற்றை மேற்கொண்டுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உள்நாட்டில் 5ஜி நெட்வொர்க்கை வெற்றிகரமாக உருவாக்கி முடித்துள்ளது. தற்போது, இணைக்கப்பட்ட ட்ரோன்கள், இணைய வேக சோதனை மற்றும் மற்ற அம்சங்கள் குறித்தும் சோதித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், செப்டம்பர் 2020 இல் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜியோ கூறியது குறிப்பிடத்தக்கது.
5ஜியில் மற்ற நாடுகள் இந்தியாவை முந்திவிட்டதா?
அரசாங்கங்களை விட, உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G நெட்வொர்க்குகளை உருவாக்கி அவற்றை சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளன. இதில், AT&T, T-mobile மற்றும் Verizon போன்ற அமெரிக்க நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.
இதில், AT&T நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலேயே தொழில்நுட்பத்தை சோதனை செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதை பார்த்து, வெரிசோன் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 60 நகரங்களுக்கு 5G அல்ட்ரா-வைட் பிராட்பேண்ட் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளன
சீனாவை பொறுத்தவரை சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனம்2018 இல் 5G சோதனைகளைத் தொடங்கியது. தற்போது, பயனர்களுக்கான வணிகச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் கொரிய நிறுவனமான சாம்சங், 2011 ஆம் ஆண்டில் 5G தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. பல நிறுவனங்களுக்கு 5G நெட்வொர்க்குகளு தேவையான ஹார்ட்வேர்களை உருவாக்கும் பணியில் முன்னணியில் உள்ளது.
பயனர்களுக்கு என்ன மாற்றம்
5ஜி சேவையில் பயனர்களுக்கு கிடைக்கும் முக்கிய மாற்றம் என்னவென்றால், ஃபோன்கள் மற்றும் பிற இணைக்கப்பட்ட சாதனங்களில் சிறந்த அனுபவங்கள் கிடைக்கக்கூடும்.
உதாரணமாக, விளையாட்டு போட்டிகளின் போது பயனர்கள் பல கேமரா கோணங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும் அல்லது VR ஹெட்செட்கள் அல்லது பிற கருவிகளை பயன்படுத்தி அதிவேக வீடியோ கேம்களை விளையாடலாம்.
இந்த அடுத்த தலைமுறை டெலிகாம் நெட்வொர்க், கார்களில் கனக்ட் செய்தது போலவே, இணைய வசதி பொறுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் சேவைகளை பூஜ்ஜிய-தோல்வி விகிதத்துடன் வழங்கும்.
தற்போதுள்ள பிராட்பேண்ட் சேவைகளுக்குப் பதிலாக அதிவேக மொபைல் பிராட்பேண்ட் இணைப்பை 5G உருவாக்கிட முடியும். இந்த விலையில் பெரிய மாற்றம் இருக்காது என கருதப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களைப் பொருத்தவரை, வர்த்தக சந்தையில் சில புதிய சாதனங்கள் 5G தொழில்நுட்ப ஆதரவுடன் வரவுள்ளது. எரிக்சன் போன்ற உபகரண தயாரிப்பாளர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 500 மில்லியன் 5G சந்தாக்களைப் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil