Advertisment

பிசிஐ தடுப்பூசி கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கிறதா?

ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தாவிட்டாலும், இறப்பின் விகிதத்தை மிகவும் குறைந்த அளவில் பராமரித்தது. ஜப்பான் பி.சி.ஜி தடுப்பு மருந்தளித்தல் திட்டத்தை 1947ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிசிஐ தடுப்பூசி கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கிறதா?

India BCG Vaccination Programme and Coronavirus:  1960 காலகட்டத்தில், காசநோய் (அ) பி.சி.ஜி  என்ற அந்த ஒற்றை  தடுப்பூசி தான், இந்தியாவில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி என்ற ஒரு விசயத்தை அறிமுகப்படுத்தியது. காசநோய் சுமையைக் குறைக்கும் முயற்சியாக 1948.ம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி, காலப்போக்கில்  நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.

Advertisment

இந்த பி.சி.ஜி தடுப்பூசி தற்போது இந்திய மக்களை நாவல் கொரோனா வைரஸ் (SARS-CoV2) நோயிலிருந்து  பாதுகாக்கிறதா? என்ற கேள்வி தற்போது விவாதமாக்கப்பட்டுள்ளது.

முழுமையாக பகுப்பாய்வு செய்யாத சில ஆய்வுகள், இந்த கூற்றை முன்வைத்ததில் இருந்து, உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகம் இந்த கேள்வியை விவாதித்து வருகின்றனது. சில அறிவியலாளர்கள் இந்த கூற்றை மறுத்தும் வருகின்றனர்.

தடுப்பூசியும், அதன் பின்னணியும்:

பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி என்பது மைக்கோபாக்டீரியம் போவிஸின் தனிமைப்படுத்தலில் இருந்து பெறப்பட்ட  உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசியாகும். இது காசநோய்க்கான தடுப்பூசியாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நோய்க்கிருமியின், நோய் தயாரிப்பு ஆற்றல்  செயற்கையாக முடக்கப்பட்டு, மனித உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், அந்த கிருமியின்  அத்தியாவசிய அடையாளங்களை மாற்றாமல் பயன்படுத்துவது உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசியாகும்

2014 ஆம் ஆண்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா எழுதிய 'இந்தியாவில் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசிகளின் சுருக்கமான வரலாறு' என்ற ஆய்வுக் கட்டுரையில்,"காசநோய் தொற்றுநோய்க்கான ஒரு விகிதத்தை அடைந்து வருவதால், கடுமையான வரையறையோடு ஒரு குறிப்பிட்ட அளவில் நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பி.சி.ஜி தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்படும்" என்று இந்திய அரசு 1948ம் ஆண்டு  மே மாதம் வெளியிட்ட செய்தி குறிப்பை மேற்கோள் காட்டினர்.  அதன் தொடர்ச்சியாக பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம் , தமிழ்நாட்டின் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு மையங்களில் பைலட் திட்டமாக இந்தியாவில் பி.சி.ஜி.யின் பணிகள் தொடங்கப்பட்டன.

 

1955-56 வாக்கில், இந்த தடுப்பூசி அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அனைவரையும் உள்ளடிக்கிய தடுப்பூசி(1985) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த பி.சி.ஜி உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

கொவிட்-19 மற்றும் பி.சி.ஜி தடுப்பூசி,  என்ன கூறுகிறார்கள்? 

நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்," உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலை, பி.சி.ஜி தடுப்பூசி அட்லஸின் தரவுகளோடு தொடர்புபடுத்தினர். அதில், அமெரிக்கா, இத்தாலி போன்ற  நாடுகளை ஒப்பிடுகையில் பி.சி.ஐ தடுப்பூசி கொள்கை கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் காசநோய் குறைவான பின்பு, பி.சி.ஜி தடுப்பூசி நிறுத்தப்பட்டது.

கொவிட்-19 நோயில் அதிகமான இறப்பை சந்தித்த இத்தாலி, அனைவரையும் உள்ளடக்கிய பிசிஐ தடுப்பூசி திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. மறுபுறம், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை கண்ட ஜப்பான், ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தாவிட்டாலும், இறப்பின் விகிதத்தை மிகவும் குறைந்த அளவில் பராமரித்தது. ஜப்பான் பி.சி.ஜி தடுப்பு மருந்தளித்தல் திட்டத்தை 1947ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பைச் சந்தித்த இரான் நாட்டில்  பி.சி.ஜி தடுப்பு மருந்தளித்தல் திட்டம் 1984 இல் தான் தொடங்கப்பட்டது. இதனால் அந்த நாட்டில்  36 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாதுகாப்பற்றவர்களாகத் தான் இருந்தனர்.

1950 காலங்களில் இருந்து அன்னைவரையும் உள்ளடக்கிய பி.சி.ஜி தடுப்பு மருந்தளித்தல் திட்டத்தை செயல்படுத்திய, சீனாவில் ஏன் கொவிட்-19 பரவியது?  என்ற கேள்விக்கும் இந்த ஆய்வு பதில் அளிக்கிறது.  சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது (1966-1976), காசநோய் தடுப்பு சிகிச்சை நிறுவனங்கள் கலைக்கப்பட்டு பெரிதும் பலவீனப்படுத்தப்பட்டன. இதனால், கொவிட்-19 போன்ற வைரஸ் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் சீனாவில்  உருவாகியிருக்கலாம்  என்று இந்த  ஆய்வில் கணிக்கப்படுகிறது. எவ்வாராயினும், தற்போது, ​​சீனாவின் நிலைமை மேம்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிசிஐ தடுப்பூசி அதிக எண்ணிக்கையிலான சுவாச நோய்களுக்கு எதிரான  நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வைரல்  தொற்றுக்கும், செப்சிஸுக்கு எதிராக பரந்த பாதுகாப்பை பிசிஐ தடுப்பூசி உருவாக்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே, பிசிஐ தடுப்பூசியின் பாதுகாப்பு கொவிட்-19 மீதான செயல்களோடு நேரடி தொடர்பில்லை என்றாலும், கொவிட்-19 தொடர்புடைய நோய்கள் (அ) செப்சிஸில் எதிரான பாதுக்காப்பை  அளிக்கின்றது.

இறுதியாக, பி.சி.ஜி தடுப்புமருந்தளித்தல் திட்டத்தை செயல்படுத்திய ஒரு நாட்டில் கொவிட்-19 எனக் கூறப்படும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை நாங்கள் கண்டறிகிறோம், என்று நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும் விமர்சனங்கள்:  நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆய்வுகள் வெளியான சில நாட்களில், மெக்கில் சர்வதேச காசநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விமர்சனத்தை எழுதினர்.

அந்த விமர்சனத்தில் “ஒரு நூற்றாண்டுக்கும் பழமையான தடுப்பூசி, தனிநபர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, தொடர்பில்லாத  ஒரு நோய்க்கு குறிப்பிட்ட பாதுகாப்பை வழங்குகிறது, கொவிட்-19  போன்ற ஒரு தொற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்குகிறது என்ற விளக்கம் தருவது ஆபத்தில் முடியும். இது, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிரான போரட்டத் தன்மையைக் குறைக்க வழிவகுக்கும். எல்.எம்.ஐ.சி நாடுகளில்  (குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் நாடுகளில் ) முழுமையில்லாத மனநிறைவு பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கும். உதாரணமாக, அனைவரையும் உள்ளடக்கிய பிசிஐ தடுப்பூசி கொள்கை செயல்படுத்தி வரும் இந்தியா போன்ற நாட்டு மக்களை இந்த பகுப்பாய்வு தவறாக வழிநடத்தும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மெக்கில் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரு கருத்து என்னவென்றால், ஆய்வுகள் நடைபெற்ற நேரத்தில், கொவிட்-19 நோயின் பரவல் உண்மையில் குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் நாடுகளில் பெரியளவில் நடக்கவில்லை. இந்த நாடுகளுக்கு தற்போது தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, ஒரு முழுமையா தரவுகளை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை என்பதாகும்.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் கொவிட்-19 எண்ணிக்கை மார்ச் 21 அன்று 195 ஆக இருந்தது. இது, மார்ச் 31ம் தேதியன்று 1,071 ஆக உயர்ந்தன.

தென்னாப்பிரிக்காவில், மார்ச் 21ம் தேதி 205-ஆக இருந்த எண்ணிக்கை, மார்ச் 31 அன்று 1,326 ஆக அதிகரித்துள்ளன" என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவில் இந்த கட்டுரையை வெளியிடும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.

பொது சுகாதார நிபுணரும், இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவருமான டாக்டர் கே.எஸ். ரெட்டி கூறுகையில்: “பி.சி.ஜி தடுப்பு மருந்தளித்தல் கொண்ட திட்டங்களை செயல்படுத்திய நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் செயல்பட்டு, அதன்மூலம், இத்தகைய  திட்டங்களை செயல்படுத்தாத அல்லது தாமதமாகத் தொடங்கிய நாடுகளை விட செயல்படுத்திய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நேரடியாக வைரல் தடுப்பு செயல்  இல்லை என்றாலும், பி.சி.ஜி தடுப்பூசி ஒரு நோயெதிர்ப்பு சக்தியாக விளங்கக்கூடும்.  கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு சிறப்பான போராட்டத்தை நமது உடல் முன்னெடுக்க உதவலாம். எவ்வாறாயினும், ஒரு தொடர்பு மட்டும் உண்மையாகிவிடாது. இதற்கு வலுவான சான்றுகளும் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment