Countries have made Covid-19 vaccines mandatory: ஜனவரி மாதம் 16ம் தேதியோடு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஜனவரி 13ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் தடுப்பூசி போடுவதை வலியுறுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடவில்லை என்று கூறியது. மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. மற்ற நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி கொள்கைகள் இந்தியாவில் பின்பற்றப்படவில்லை.
வேறு வழிகள் ஏதும் இல்லையென்னும் பட்சத்தில் மட்டுமே கட்டாய தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ள்ளது உலக சுகாதார நிறுவனம்,
தடைகளின் அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய கட்டாய தடுப்பூசி ஆணைகள் பயன் அளிக்கும் என்று அடிக்கடி கருதப்படுகிறது. ஆனால் அவற்றின் செயல்திறன் வேறு இடங்களில் உள்ளது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. கட்டாய தடுப்பூசிகளுடன், மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டார்களா என்பதை கண்காணிக்கவும் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக் கூறுவதிலும் சமூகத்தில் முக்கிய நபர்களுக்கு பொறுப்பு உள்ளது என்று நேச்சர் மெடிசன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வந்த நபர்களின் வாழ்வில் இப்படியான முக்கிய நபர்கள் கட்டாய தடுப்பூசியை பரிந்துரை செய்துவிட இயலாது. ஆனால் வேலை செய்யும் நிறுவனங்கள், சாப்பிட செல்லும் உணவகங்கள், மதுபான கூடங்கள், கடைகள் கட்டாய தடுப்பூசி அமலாக்கத்தை பின்பற்றினால் மாற்றங்கள் ஏறூம்.
கட்டாய தடுப்பூசியை உறுதி செய்திருக்கும் நாடுகள் எவை?
ஆஸ்திரியா
பிப்ரவரி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று ஆஸ்திரிய அரசு அறிவித்துள்ளது.
ஃப்ரான்ஸ்
ஃப்ரான்ஸ் நாடாளுமன்றம் சனிக்கிழமை அன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு மதுபான கூடங்கள், உணவங்கள் மற்றும் இதர பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகளை பெற தடை செய்ய ஒப்புதல் அளித்துள்ள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் தங்களின் நெகடிவ் சான்றுகளை காட்டி பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தடுப்பூசி பாஸ் அல்லது ஆதாரத்தை பெற தடுப்பூசி செலுத்துவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இந்த நடவடிக்கைக்கு பாரிஸ், மார்செய்ல்ஸ் மற்றும் போர்டாக்ஸ் உள்ளிட்ட இடங்களில் பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த மாத துவக்கத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரோன்.
ஜெர்மனி
ஜெர்மனியில் இதுவரை இது தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை ஆனாலும் ஜெர்மன் நாட்டு அதிபர் ஓலாஃப் ஸ்கூல்ஸ் அனைத்து வயது வந்த நபர்களும் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியாதாக டி.டபிள்யூ கூறியுள்ளது.
இத்தாலி
இத்தாலியில் 50 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று ஜனவரி மாத துவக்கத்தில் அறிவித்தது. ராய்ட்டர்ஸ் செய்தியின் படி இத்தாலி பிரதமர் மரியோ த்ராகியின் அரசு ஏற்கனவே சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது. அக்டோபர் 2021 முதல், அனைத்து ஊழியர்களும் பணியிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு தடுப்பூசி போட வேண்டும் அல்லது நெகடிவ் சோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மொராக்கோ
மொராக்கோ நாட்டில் உள்ள அரசாங்க கட்டிடங்களை அணுகவும், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் தடுப்பூசி சான்றிதழ் தேவை.
இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் இதுவரை சுகாதாரத்துறை மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து நபர்களும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசி ஆணைகள் ஏதும் இல்லை. தடுப்பூசிக்கு எதிரான அதிக கருத்துகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. மேலும் ஆன்ட்டி வேக்ஸர்கள் என்றும் அழைக்கப்படும் நாடாக அது உள்ளது. அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறவும் தடுப்பூசியை கட்டாயமாக்கப்படவும் சட்டம் பிறப்பிக்க மாகாண அரசுகளுக்கு அரசியலமைப்பு உரிமைகள் உள்ளன என்று ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெரிக வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் சோதனைHousehold Pulse Survey (HPS)-ன் படி, டிசம்பர் 2021 தொடக்கத்தில் கோவிட் தடுப்பூசி போடப்படாதவர்கள் தடுப்பூசி பெறாததற்கு என்ன காரணம் என்பதை பட்டியலிட்டுள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளனர். 42% நபர்கள் தடுப்பூசி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் 10% பேர் தங்களின் மருத்துவர்கள் இதனை பரிந்துரை செய்யவில்லை எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர். 2% பேர் தடுப்பூசியை பெறுவதில் சிரமம் உள்ளது என்பதால் செலுத்திக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil