ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றியது. இந்த மனுக்கள் டெல்லி மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும் வகையில், உயர் நீதிமன்றங்களில் இருந்து இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினார்.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமவு இந்த மனுக்களை மாற்ற அனுமதித்தது. உச்ச நீதிமன்றம் 2018-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவைக் குறைத்த பிறகு, எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) மக்கள் உரிமைகள் மீதான முதல் பெரிய தலையீடு இதுவாக இருக்கலாம்.
மனித உரிமைகள் பிரச்சாரத்தின்படி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட எல்.ஜி.பி.டி.க்யூ வழக்கறிஞர் குழு, உலகம் முழுவதும் 32 நாடுகள் மட்டுமே ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரே பாலினத் திருமணத்தை அனுமதிக்கும் பெரும்பாலான நாடுகளில், திருமண சமத்துவ சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 நாடுகளில் மட்டுமே ஒரே பாலினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா: 2015-ல், அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5:4 நீதிபதிகள் தீர்ப்பில் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் திருமணத்தை எதிர் பாலின தம்பதிகளுக்கு (ஆண் – பெண்) மட்டும் என கட்டுப்படுத்துவது சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு என்ற 14வது திருத்தத்தின் உத்தரவாதத்தை மீறுகிறது என்று கூறியது.
இந்த முடிவு நாடு முழுவதும் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வழிவகுத்தது. அமேரிக்காவில் 32 மாகாணங்கள் இந்த தீர்ப்புக்கு முன்பே ஒரெ பாலினத் திருமணத்தை அங்கீகரித்திருந்தன. 2003-ம் ஆண்டில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் முதல் மாகாணம் ஆனது.
ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து: 2017-ம் ஆண்டு நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றியது. இந்த வாக்கெடுப்பில் ஒரே பாலின திருமணச் சட்டத்திற்கு ஆதரவாக – 62% முதல் 38% வரை – பெரும்பான்மை ஆதரவு அளித்தனர். அயர்லாந்திலும் சுவிட்சர்லாந்திலும், பெரும்பான்மையினர் வாக்களித்தது எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) திருமணங்களுக்கு முறையான அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது.
தென் ஆப்பிரிக்கா: 2006-ம் ஆண்டில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆப்பிரிக்க நாடு தென் ஆப்பிரிக்கா. அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, முந்தைய எதிர் பாலினத் திருமணத்துக்கு மட்டுமே (ஆண்-பெண் பாலினத் திருமணம்) அங்கீகாரம் என்ற கொள்கையானது அரசியலமைப்பின் சம உரிமை உத்தரவாதத்தை மீறுவதாகக் கருதுகிறது.
தைவான்: 2019-ம் ஆண்டில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் ஆசிய நாடாக தைவான் ஆனது. கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அர்ஜென்டினா: 2010 ஆம் ஆண்டில், அர்ஜென்டினா நாடு முழுவதும் ஒரே பாலின திருமணங்களை அனுமதித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாகவும் உலகின் 10-வது நாடாகவும் ஆனது. தேசிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, பல நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் ஒரே பாலின ஜோடிகளுக்கு சமூக சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
கனடாவில் உள்ள ஒரே பாலினத் தம்பதிகள் திருமணத்தின் சட்டப்பூர்வ பலன்களை 1999-ம் ஆண்டு முதல் அனுபவித்து வருகின்றனர். அப்போது மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் பொதுச் சட்டத்தின் கீழ் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ)ஜோடிகளுக்கு திருமண அங்கீகாரத்தை நீட்டித்தன. இதைத் தொடர்ந்து, கனடாவின் 13 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் ஒன்பது இடங்களில் ஒரே பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில், 2003-ம் ஆண்டு இந்த விஷயத்தில் ஒரு சட்டம் அலமாகத் தொடங்கியது. இது 2005-ல் கனடாவின் பாராளுமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் ஒரே பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அலிக்கும் சட்டத்தை இயற்றியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”