எந்த கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன?

கடந்த திங்களன்று, International Astronomical Union’s Minor Planet மையமானது, சனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை உறுதிப்படுத்தியது. இது நமது சூரிய குடும்பத்தில் அதிக சந்திரன்களைக் கொண்ட கிரகமாக அறியப்படுகிறது. மொத்தம் 82 ஆக உள்ளது. இந்த 20 புதிய நிலவுகளை கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார்…

By: October 10, 2019, 6:11:52 PM

கடந்த திங்களன்று, International Astronomical Union’s Minor Planet மையமானது, சனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை உறுதிப்படுத்தியது. இது நமது சூரிய குடும்பத்தில் அதிக சந்திரன்களைக் கொண்ட கிரகமாக அறியப்படுகிறது. மொத்தம் 82 ஆக உள்ளது.

இந்த 20 புதிய நிலவுகளை கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸ் நிறுவனத்தின் ஸ்காட் எஸ் ஷெப்பர்ட் கண்டுபிடித்தார். இவை உறுதிப்படுத்தப்படும் வரை, அதிக சந்திரன்களைக் கொண்ட கிரகம் வியாழன் தான். 79 ஆக சந்திரனின் எண்ணிக்கை இருந்தது.

நாசா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிலவுகளின் எண்ணிக்கை படி, நமது சூரிய குடும்பத்தின் கிரகங்கள், இப்போது 205 உறுதிப்படுத்தப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. சனி மற்றும் வியாழன் இடையே 161 சந்திரன்கள் உள்ளன. இவை கிட்டத்தட்ட 80% ஆகும். மற்றொரு 20% யுரேனஸ் (27) மற்றும் நெப்டியூன் (14) ஆகியவற்றைச் சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று நிலவுகளில், ஒன்று பூமிக்கு சொந்தமானது, மற்ற இரண்டு செவ்வாய் கிரகத்துடன் உள்ளன.


புதன் சூரியனுக்கும் அதன் ஈர்ப்புக்கும் மிக நெருக்கமாக இருப்பதால், அதனால் அதன் சொந்த நிலவை வைத்துக் கொள்ள முடியாது என்று நாசா விளக்குகிறது.

எந்தவொரு சந்திரனும் பெரும்பாலும் புதனுடன் மோதிவிடும் அல்லது சூரியனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சென்று இறுதியில் அதில் இழுக்கப்படும். இருப்பினும், வீனஸுக்கு ஏன் சந்திரன் இல்லை என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சனியின் நிலவுகள் தலா 5 கி.மீ விட்டம் கொண்டவை. கார்னகி நிறுவனம் டிசம்பர் 6 வரை, சனியின் 20 புதிய நிலவுகளின் பெயர்களுக்கான பரிந்துரைகளுக்கு அழைத்திருக்கிறது. விதிமுறைகள் இதில் உள்ளன, https://carnegiescience.edu/NameSaturnsMoons

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Which planet has how many moons nasa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X